ஆர்.எஸ்.எஸ் வட-சென்னை அணிவகுப்பு

15
VSK TN
    
 
     
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தென்-சென்னையின் சீருடை அணிவகுப்பு, அக்டோபர் 13, 2019 – ஞாயிறு அன்று கால்பந்து மைதானம், சோலையம்மன் நகர், சோழவரம், சென்னையில் நடைபெற்றது. மஹாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாள் விழா, ஜாலியன்வாலாபாக் படுகொலை 100ம் ஆண்டு நினைவு, ஆசாத் ஹிந்த் அரசை நேதாஜி நிறுவியதன் 75வது ஆண்டு, குருநானக் அவர்களின் 550வது பிறந்த நாள் விழா, ஆகியவைகளை மையப்படுத்தி இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

 

இந்த சீருடை அணிவகுப்பில் தென் சென்னை பகுதிகளை சேர்ந்த சுமார் 950 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் 300பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
திரு. பொன். கோதண்டன், நல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர், திரு. V. கௌரிநாதன், ஓம் சக்தி ஏஜென்சீஸ் மற்றும் G. சீனிவாசன், GSM ட்ரடேர்ஸ் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வை த்தனர்.
Children’s Paradise Matric Hr Sec School தாளாளர் திரு N. ராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை உரையில், தனிமனித ஒழுக்கம், மற்றும் சமூக மாற்றங்கள் குறித்தும், RSSன் பங்களிப்பு குறித்தும் பேசினார், திரு. P. கார்மேகம், ex – Chairman முன்னிலை வகித்தார்.
டாக்டர் K . குமாரசாமி, தலைவர் – ஆர்.எஸ்.எஸ். வட தமிழ்நாடு சிறப்புரையில், “ RSS அணிவகுப்பில் பூர்ண கணவேஷ், நிகழ்ச்சி காண வருகைக்கு ஒவ்வொரு கார்யகர்த்தர்களும் தங்களது சொந்த பணத்தில் செலவு செய்து நிகழ்ச்சியில் பங்குகொள்கின்றனர். ஷஸ்திர பூஜை அனைத்து மதத்தினரும் செய்கின்றனர் அதனை மாதமாக இல்லாமல் தர்மமாக பார்க்கின்றார்கள். ஹிந்து சமயம் கூறுவது ஒவ்வொரு தனி மனிதனும் அசத்திய கார்யங்களை தனது வாழ்க்கை செய்ய வேண்டும். அதற்கு 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்
லட்சியம், கார்யகர்த்தாவாகிய நாம் வலிமையாக இருக்கவேண்டும்.
கணம் கருவிகள் அவசியம். வெற்றி பெற அதற்கு ஷஸ்திர பூஜை செய்கிறோம். கடுமையான உழைப்பு. மீண்டும் முயற்சிக்க தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தெய்வீக அருள் வேண்டி சரஸ்வதியே வணங்குதல்.
உத்த்ராஞ்சல் மலை பாங்கான பகுதியினை உடையது. கடும் மழை காரணமாக வெள்ள பேரிடர் ஏற்பட்ட போது, அந்த இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது.. அதிகாலை இந்தியா ராணுவம் அங்கு சென்ற போது, அங்கு காக்கி நிட்கருடன் ஒரு குழு அங்குள்ள மக்களுக்கு சேவையை செய்து இருந்தனர். இதை பார்த்த ராணுவ அதிகாரி இது எந்த ராணுவ பிரிவு காக்கி நிட்கருடன் வேலை செய்கின்றனர் என்று கேட்க்க துணை அதிகாரி RSS தன்னலமற்ற சேவை அமைப்பு என்று விளக்கினார். இது போன்ற அசத்தியங்களை சமூகதில் உள்ள மனிதர்களை ஒருங்கிணைத்து சேவை ஆற்றும் அமைப்பு RSS. இது ஒரு இரண்டாவது ராணுவம் அல்ல. தன்னார்வு கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய 94 ஆண்டை பூர்த்தி செய்து 95 ஆண்டில் அடிஎடுத்து செல்லும் தன்னிகரற்ற அமைப்பு” என்று கூறினார்.

 

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரச்சாரக் மற்றும் பாரதீய கிசான் சங்கம், பாரதீய மஸ்தூர் சங்கம், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் ஆகியவைகளின் நிறுவனர் திரு. தத்தோபந்த் டெங்கடி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அவரது வாழ்க்கை சரித்திரம் குறித்த புத்தகமும் இந்நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – காஞ்சி விபாக் பதசஞ்சலன் – பொது நிகழ்ச்சி

Tue Oct 15 , 2019
VSK TN      Tweet     ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 95-ஆவது ஆண்டு தொடக்க விழாவும் (விஜயதசமி), குருநானக்கின் 550-ஆவது ஆண்டு ஜெயந்தியும், மகாத்மா காந்தி ஜியின் 150-ஆவது ஜெயந்தியும், ஜாலியன் வாலாபாக் துயரச் சம்பவத்தின் 100-ஆவது நினைவையும், ஆஸாத் ஹிந்த் சர்க்கார் (நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு) அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டையும் ஒட்டி சமுதாய நல்லிணக்க ஊர்வலம் (பதசஞ்சலன்) மற்றும் பொது நிகழ்ச்சி 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அரக்கோணத்தில் நடைபெற்றது.   […]