VSK TN
அக்டோபர் 23, 24, 25 தேதிகளில் தெலுங்கானாவில் உள்ள பாக்யநகரத்தில் (ஹைதராபாதில்) கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய காரியகாரி மண்டல், மார்க்சிஸ்டு கட்சி எனப்படும் சிபிஐ(எம்), ஆர்எஸ்எஸ்ஸையும் மற்ற எதிர்ப்பாளர்களையும் ஒழிக்க கேரளாவில் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை கடுமையாக கண்டனம் செதிருக்கிறது.
இதுகுறித்த ஆர்.எஸ்.எஸ். தீர்மானம்
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். 1942ல் தொடங்கப்பட்டதிலிருந்தே சிபிஎம்முக்கு உதறல் எடுத்திருக்கிறது. காரணம் மாநில மக்கள் மனதில் தேசபக்த உணர்வையும் ஒருமைப்பாட்டு எண்ணத்தையும் ஆர்.எஸ்.எஸ் பதியவைத்து வருகிறது. இந்த லட்சியப் பணியில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மேலும்மேலும் மக்கள் ஆதரவும் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது. எனவே சங்க ஷாகாக்களையும், சங்க ஊழியர்களையும் வேண்டுமென்றே தாக்குவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸை ஒழித்துவிட முயன்று சிபிஎம் பரிதாபமாக தோற்றிருக்கிறது. ஒரு சித்தாந்தம் என்கிற வகையில் மார்க்சியம் சகிப்புத்தன்மை அற்றது என்பது மட்டுமல்ல சர்வாதிகாரத் தன்மை கொண்டதும் கூட. கடந்த 70 ஆண்டுகளில் ஊக்கமும் துடிப்பும் நிறைந்த 250க்கும் மேற்பட்ட சங்க ஊழியர்கள் மாநிலத்தில் படுகொலை செயப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிபிஎம்மின் ரத்தவெறி பிடித்த ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து முடக்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதிலும் இது நடைபெற்றிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் சிபிஎம்மின் கோட்டை என கருதப்படுகிற கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சிபிஎம் ஊழியர்கள் சங்கத்திடம் ஈர்க்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி வருவதுதான் சிபிஎம்முக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அப்படி வெளியேறுகிறவர்கள் சங்கத்தின் அன்பின் அடிப்படையிலான தேசபக்தி, அப்பழுக்கற்ற செயல்பாடுகள், இவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள்.
எல்லோரும் நம் நண்பர்களே, எவர் மீதும் துவேஷமில்லை” என்ற கொள்கை கொண்ட சங்கம் மக்களின் பல்வேறு பிரிவினரிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த அரும்பாடுபட்டு வருகிறது. என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அமைதிகரமான சூழ்நிலையை மாநிலத்தில் உருவாக்குவதற்காகவே சங்கம் எப்போதும் நேர்மையோடு முயற்சி செது வந்துள்ளது. ஆனால் எதனாலோ சிபிஎம் அடியோடு அருவருக்கத்தக்க தனது கண்மூடித்தனமான வன்முறையை தொடர்ந்து கட்டவிழ்த்து வருகிறது என்பது துரதிருஷ்டவசமானது.
2016 ஜூலை 11 அன்று பாரதிய மஸ்தூர் சங்க ஊழியர் சி.கே. ராமச்சந்திரன் அவரது வீட்டிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரை விட்டுவிடும்படி கதறிய அவரது மனைவியை ஒதுக்கித்தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செதார்கள். 2016 அக்டோபர் 12 அன்று கர்ப்பிணியான தனது சகோதரிக்கு மருந்து வாங்க விரைந்துகொண்டிருந்த கே. ரமித் தன் வீட்டு வாசலிலேயே பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். ரமீத்துதான் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரே ஆதாரமாக இருந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை பஸ் டிரைவரான உத்தமன் பணியிலிருந்த போது பஸ்ஸிலேயே சிபிஎம் குண்டர்களால் கொலை செயப்பட்டார். சிபிஎம்மின் காட்டுமிராண்டித்தனமான சகிப்பின்மைக்கு இவையெல்லாம் சமீபகால உதாரணங்கள்.
சங்க ஊழியர்கள் மீதும் பல்வேறு சங்க அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மட்டுமல்ல, தன் தா அமைப்பான சிபிஐ கட்சி ஊழியர்கள் மீதும் கூட்டணி கட்சிகளான ஆர்.எஸ்.பி, ஜனதா தள் ஊழியர்கள் மீதும் கூட சிபிஎம் காரர்கள் வன்முறை வெறியாட்டத்தை நடத்துகிறார்கள். கட்சியை விட்டு வெளியேறும் தங்கள் ஊழியர்களையே கூட விட்டுவைப்பதில்லை. 2012 மே 4 அன்று டி.பி. சந்திரசேகரன் அக்கிரமமாக படுகொலை செயப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிற மார்க்சிஸ்டுகளின் வன்முறைக்கு இரையாகிறவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களும், தலித்துகளும், சிறுபான்மை சமூகத்தினருமான ஏழைகள்தான் என்பதுதான் பெரிய வெட்கக்கேடு.
பெண்களையும் குழந்தைகளையும் கூட மார்க்சிஸ்டுகள் விட்டுவைக்கவில்லை. கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அந்த கட்சியினர் உள்துறையையும் போலீஸையும் தங்கள் கைப்பாவை ஆக்கிக்கொள்கிறார்கள். அதனால் கேள்வி கேட்பாரின்றி அவர்களுடைய கட்சி ஊழியர்கள் சங்க ஷாகாக்கள், சங்க ஊழியர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்த முடிகிறது.
சங்க ஊழியர்களை அழித்தொழிப்பது மட்டும் சிபிஎம் வியூகம் அல்ல. சங்க ஊழியர்களின் வயல்களையும் வீடுகளையும் வீட்டுச் சாமான்களையும் பள்ளிக் கட்டிடங்களையும், பயிர் பச்சையையும் வண்டி வாகனங்களையும் நாசப்படுத்தி பீதியேற்படுத்தி பொருளாதார ரீதியாக முடக்குவதும் அவர்கள் திட்டம். சிபிஎம்மின் சகிப்பற்ற, ஜனநாயகத்துக்கு புறம்பான போக்கு அடியோடு தடுக்கப்பட்டாக வேண்டும்.
சிறுசிறு சம்பவங்கள் குறித்து கூட பெரிதாக குரல் எழுப்புகிறவர்கள் எல்லாம் இந்த பிரச்சினை குறித்து வா திறவாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் என்னதான் கொடூரங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் சங்க ஊழியர்களின் மனோபலம் மிக அற்புதமாக இருந்து வருவது பெருமிதத்திற்கு உரிய விஷயம். சங்கப் பணியை அவர்கள் மேலும் மேலும் ஊக்கத்துடன் முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் இருக்கிறார்கள். சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் சங்க செயல்பாடுகள் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதுடன் பொதுமக்கள் அந்தப் பணிகளில் எல்லாம் பெருமளவில் ஆதரவளித்து ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள் என்பதும் மன நிறைவு தருகிற விஷயம்.
வன்முறையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று காரியகாரி மண்டல் கேரள அரசையும் மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறது. கேரளத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கோருகிறது. பொதுமக்களும் ஊடகங்களும் சிபிஎம்மின் வன்முறை தந்திரங்களுக்கு எதிராக பல்வேறு மேடைகளில் குரல் உயர்த்தி வன்முறைக்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள் பாரதிய பண்புகளின் அடிப்படையில் தொகுத்தளித்த ஏகத்ம மானவ தரிசனம் என்ற தத்துவத்தை பின்பற்றினால்தான் இன்றும் உலகம் சந்திக்கிற சவால்களுக்கு தீர்வு காணப்பட முடியும். ஒருங்கிணைந்த பார்வையுடன் உலகுக்கு ஊட்டம் அளிப்பது ஒன்றுதான் இந்த தத்துவத்தின் அடிப்படை. உயிர்ப்புள்ள, ஜடமான எல்லாவற்றுக்கும் நல வாழ்வை நாடும் நல்ல மனமே இதற்கான ஊற்றுக்கண்.
இன்று உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. சூழல் தொடர்பான தடுமாற்றம் தென்படுகிறது. பயங்கரவாதம் பேயாட்டம் போடுகிறது. இவையெல்லாம் மனித குலத்திற்கு கடும் சவால். வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இவற்றோடு பல்வேறு நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் தீவிரம் வேறு. ஒரு சில நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிடி, உலகின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு வியாபித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம். தறிகெட்ட முதலாளித்துவம், வர்க்க போராட்டம் பேசும் கம்யூனிச சித்தாந்தம் இவற்றைப் பின்பற்றியதால் இவையெல்லாம் தலைதூக்கியுள்ளன. குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. உடல் – மன தொடர்புள்ள வியாதிகள் அபாயகராமன வேகத்தில் அதிகரித்து வருகின்றன. வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் முழுவதுமே பொருளாதார தேவைகளை சார்ந்து அமைந்துவிட்டதால்தான் இப்படி ஆகிறது.
இயற்கை கண்மூடித்தனமாக சுரண்டப்படுவதால் புவி வெப்பம் அடைகிறது. புதுப்புது இயற்கை பேரிடர்கள் தலை தூக்குகின்றன. கடலின் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காற்றும் நீரும் மண்ணும் மேலும்மேலும் மாசடைந்து வருகின்றன. தண்ணீர்த் தட்டுப்பாடு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. விளைநிலம் சத்து இழந்து வருகிறது. உயிரினங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன.
மதவெறியால் தூண்டப்படும் பயங்கரவாதம் படு தீவிர அரசியல் சித்தாந்தம் ஆகியவை கோரவடிவம் எடுத்து நடமாடி வருகின்றன. விளைவாக குழந்தைகளும் முதியவர்களும் பெண்களும் மேலும் மேலும் அரக்கத்தனமாக கொடூர படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பரஸ்பரம் ஒத்துழைப்பு, தனிநபர், சமூகம், தேசம், இயற்கை அனைத்திடமும் நல்லிணக்கம் இவற்றை ஆணிவேராகக் கொண்ட ஏகாத்ம மானவ தரிசனத்தை பின்பற்றுவதன் மூலம் தான் இவற்றையெல்லாம் ஒழிக்க முடியும். தனியார்கள் மத்தியிலும் சமூகங்கள் மத்தியிலும், தேசங்களிடையேயும் அநாவசிய போட்டா போட்டியையும் மோதல்களையும் ஒழிப்பதன் மூலம்தான் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சியும் சமாதான சகவாழ்வும் சாத்தியமாகும்.
1992ல் ஐநா சபை ரியோ டி ஜெனிரோவில் நடத்திய உலக உச்சி மாநாட்டில், உலக அமைதி, நீடித்த வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு இவற்றை 172 நாடுகள் ஆமோதித்தன. இந்த லட்சியங்களிலிருந்து உலகம் வெகு வேகமாக விலகிச் சென்று வருகிறது. 2015ல் நடந்த பாரிஸ் உச்சிமாநாட்டில் உலகில் பெரும்பாலான நாடுகள் புவி வெப்பம் அடைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுதியேற்றன. மேலே சோன்ன லட்சியங்களை அடைய உலகின் எல்லா நாடுகளும் ஒட்டுமொத்தமான வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வு இவற்றில் கவனம் செலுத்தவேண்டும். எல்லா குடிமக்களும் குடும்பத்துடன் சமுதாயத்துடன், இயற்கையுடன் ஆன்மநேய ஒருமைப்பாடு காணும் விதத்தில் (ஹோலிஸ்டிக்) வாழ்க்கை நடத்த வேண்டும். அப்போதுதான் நல்லிணக்கம் உலகில் நீடித்து நிலைக்கும். போராட்டங்களும் மோதலும் முடிவுக்கு வரும்.
இது பண்டிட் தீன்தயாள் உபாத்யாய அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு. அதுமட்டுமல்ல, அவர் பாரதிய பண்புகளுக்கு உகந்ததும் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதுமான ஏகாத்ம மானவ தரிசன தத்துவத்தை வழங்கியதன் 51வது ஆண்டும் ஆகும். எனவே இதுதான் அந்த தத்துவத்தை செயல்படுத்துவதற்கான அற்புதமான வாப்பு. ஸ்வயம்சேவகர்கள் உள்பட மக்கள் அனைவரும் மத்திய மாநில அரசுகளும் உலகின் சிந்தனையாளர்களும் இயன்ற எல்லா வகையிலும் உலகில் பல்வேறு பிரிவினரும் இதில் ஒத்துழைக்க தூண்டுமாறு ஆர்.எஸ்.எஸ். கேட்டுக்கொள்கிறது. இதற்கு பொருத்தமான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, சரியானதொரு முன்மாதிரியும் உருவாக்கப்பட வேண்டும். உலகில் அத்தனை உயிரினங்களும் ஆனந்தமயமான வாழ்வு வாழும் வாப்பு பெற இது உறுதுணை புரியும்.
(2016 அக்டோபர் 25 அன்று முடிவடைந்த ஆர்.எஸ்.எஸ். அகில பாரத கார்யகாரி மண்டல் தீர்மான வாசகம்)