RSS ABKM 2016-Resolution 2 in Tamil

12
VSK TN
    
 
     
பண்டிட் தீன்தயாள் ஜி உபாத்யாய் எடுத்துரைத்த நித்திய பாரதிய நோக்கின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த மனித நேயத்தை பின்பற்றுவதே உலகில் வளர்ந்து வரும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு . உலகில் உயிருள்ளவையும் உயிரற்றவையும் நலமுடன் இருக்க ஒருங்கிணைந்த பார்வையோடு உலகை வளர்த்தலே / காத்தலே இந்த தத்துவத்தின் அடிப்படை ஆகும். இன்று, உலகில் வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும, சமமில்லாத சுற்றுச்சூழலும், பயங்கரவாதமும் மனித இனத்துக்கு பெரும் சவாலாக அமைந்து வருகிறது. கட்டுப்பாடில்லாத முதலாளித்துவம் மற்றும் வர்க்க போராட்ட கம்யூனிச சித்தாந்தத்தின் விளைவாக – வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை, ஊட்டச் சத்துக் குறைபாடு, பல நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகள், உலக மொத்த உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி சில நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கையில் இருப்பது – என உலகின் நிலை பெரும் கவலை அளிப்பாதாக உள்ளது. பொருள் தேவைகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்வதால், குடும்பங்களின் சிதைவம், உளவழி உடல் நோய்களும் ஆபத்தான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதால் / பாதிப்பதால், வெப்பநிலை உயர்வால் விளையும் இயற்கை சீற்றங்கள், கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது, காற்று-நீர்-மண் மாசு அதிகரிப்பது, தண்ணீர் தட்டுப்பாடு, மண் வள குறைவு, உயிரினங்கள் அழிவது என நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இன்று, மதவெறியால் ஈர்க்கப்பட்ட தீவரவாதமும, அதி தீவிரவாத அரசியல் கொள்கைகளும், பயங்கரமான பரிமாணத்தை எடுத்துள்ளன. இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் மிருகத்தனமாக கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. ABKM இதற்கு தன் பெரும் கவலையை தெருவுத்துக்கொள்கிறது. இவற்றை சரி செய்ய, ஒருங்கினைந்த மனித நேய தத்துவத்துடன் ஒருவரையொருவர் ஒருங்கிணைத்து, தனி ஒருவரை அகில உலகத்துடனும் அதன் சூழலுடனும் நித்திய ஒருங்கிணைந்த எண்ணத்தை ஏற்படுத்தலாம். நீடிக்கத்தக்க அபிவிருத்தியுடன் கூடிய சமாதான சகவாழ்வு வாழ, தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்கள் தேவையற்ற போட்டிகளையும் பூசல்களையும் அகற்ற – தனி நபர், குடும்ப, சமூக, உலக, சகல ஜீவன்களின் அண்டம் மற்றும் பிரபஞ்சத்துடன் ஒருங்கிணைந்த உறவுடன் வாழ்தல் அவசியம். ஐக்கிய நாடுகள் சபை 1992இல் ரியோவில் நடத்திய புவி உச்சி மாநாட்டில், 172 நாடுகள் உலக அமைதிக்கும், நீடிக்கத்தக்க அபிவிருத்திக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதி அளித்தன. எனினும், உலகம் இந்த கொள்கையிலிருந்த் விலகிச்சென்ற வண்ணம் உள்ளது. மீண்டும் 2015இல் பாரீசில் நடந்த கூட்டத்தில் பெரும்பாலான நாடுகள் உலகம் வெப்பமடைதலை கட்டுப்படுத்த உழைப்பதாக உறுதியளித்தன. மேற்சொன்ன கொள்கைகளை நிறைவேற்ற அனைத்து நாடுகளும் – உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒன்றுபட்டு, கூட்டு அபிவிருத்தியுடன் நுகர்தலை கட்டுப்படுத்த முயல்வது அவசியம். மேலும் அனைத்து பிரஜைகளும் குடும்பத்துடனும், சமுதாயத்துடனும், இயற்கையுடனும் ஒருங்கிணைந்த உறவுடன் நடந்து கொள்வதன் மூலம், போராட்டம் மற்றும் மோதல் இல்லாத நல்லிணக்கத்துடன் கூடிய உலகை உறுதி செய்யலாம். இது, பண்டிட் தீனதயாள் ஜி உபாத்யாயின் நூற்றாண்டு; மற்றும் அவர் நித்திய பாரதிய தரிசனத்தில் உருவாக்கிய ஒருங்கிணைந்த மனித நேய தத்துவம் 51வது ஆண்டுகள் பூர்த்தி அடைவதோடு, அது இக்காலத்துக்கு மிகவும் ஏற்புடையதாகவும் இருக்கிறது. இதை மிக பொருத்தமான சந்தர்ப்பமாக கருத்தில் கொண்டு, ஸ்வயம் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளையும், மத்திய மாநில அரசுகளையும், மற்றும் உலகின் சிந்தனையாளர்களையும் – இயற்கையுடன் கூடிய உலகின் ஒழுங்கு ஒருங்கிணைப்புக்கு எல்லா முயற்சிகளும் எடுக்கும் படி – ABKM கேட்டுக்கொள்கிறது. இதற்கென தகுந்த மாதிரி ஒன்றை உருவாக்கி உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அனைத்து ஜீவராசிகளின் சுக வாழ்வையும், உலக நன்மைக்கும் இது வழி வகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS ABKM 2016 General Secretary Statement in Tamil

Sat Oct 29 , 2016
VSK TN      Tweet     தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சமீபத்தில் நடந்த ஜிகாதி பயங்கரவாதம் குறித்து ஆர்எஸ்எஸ் அறிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத கார்யகாரி மண்டல்(தேசிய செயற்குழு கூட்டம்) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாக்யநகரில் சமீபத்தில் நடந்தது. 4நாள் நடந்த அந்த கூட்டத்தில் தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் நடந்த ஜிகாதி பயங்கரவாதத்தை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தீவிரவாத ஜிகாதி கும்பல்கள் சமீபகாலங்களில் நடத்திய கொடூரமான மத வன்முறைகளையும், […]