ஒத்துழையாமை இயக்கம் 1921 இல் நடந்தது இதன் பொருட்டு டாக்டர் ஜி விதர்பா மாநிலத்தில் பல நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ஆற்றினார். ஆங்கிலேய அதிகாரி அவர் மீது பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் புயல் வேகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு தமது பேச்சில் ஆங்கிலேய அரசை மிகக் கடுமையாக சாடினார். அனைத்து ஊர்களிலும் தன் கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இறுதியில் அரசு அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள் வழக்கு தொடர்ந்தார்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் வக்கீல் வைத்து வழக்காடக் கூடாது இதை ஒத்துழையாமை இயக்கத்தின் நியதிகளாக இருந்து வந்தன ஆனால் டாக்டர் ஜி தம் சார்பில் வக்கீல் வைத்து வழக்காடுவது நல்லது என நினைத்தார்.
நாகபுரியில் வக்கீல்களில் பல டாக்டர் ஜிக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் எல்லோரும் டாக்டர் ஜிக்காக வேலை செய்ய முன்வந்தார்கள்.ஆனால் அப்போது ஸ்மெல்லில் என்று வரும் நீதிபதி இருந்தார் அவர் மிகவும் முரட்டு குணம் உள்ளவர் வக்கீல்களை அவமதிப்பாக நடத்துவார் இதனால் வக்கீல்கள் அவரிடம் நீதிமன்றத்தில் வழக்காடுவதையே நிறுத்தி விட்டார்கள்.
எனவே டாக்டர் ஜி தம் வழக்கில் தாமே வாதாடினார் டாக்டர் ஜி நிகழ்த்தி என்று சொற்பொழிவுகளின் ஆதாரத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் அவர் மீது ராஜத்துவேஷச குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார்கள். அரசாங்க நிருபர்கள் இடமும் அரசு தரப்பு சாட்சிகளிடமும் மிகவும் நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் சாட்சியங்களை ஆதாரமற்றவை என்று நிரூபித்தால் டாக்டர் இறுதியில் நீதிமன்றத்தின் முன் அவர் பேசினார்.
எனது சொற்பொழிவுகளின் கருத்து நீதிமன்றத்தின் முன் உள்ளது அது தவறானது திரிக்கப்பட்டுள்ளது மக்கள் முன் என் சொற்பொழிவுகளின் மூலம் நான் வைத்த கருத்துக்கள் நியாயமானவை எளிமையானவை. நமது நாடு அடிமைப்பட்டு இருக்கிறது. அதை விடுதலை பெறச் செய்வது நம்முடைய குறிக்கோள் ஒவ்வொரு பாரத குடிமகனுக்கும் அது கடமை அதன் பொருட்டு அவன் எப்போதும் பாடுபட வேண்டும் நம்மை இன்று ஆழ்வோர்கள் கெடுமதி படைத்தவர்கள் நயவஞ்சகர்கள் என்னுடைய கருத்துக்களை புரிந்து கொள்ள அவர்களால் முடியாது புரிந்து கொள்ளும் விருப்பம் அவர்களுக்கு இல்லை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தில் என்ன நீதி கிடைக்கும் நீதித்துறையை கேலிக்கூத்தா அழுகிற அமைப்பு இது பாரதத்தில் ஆங்கிலேயர்களின் அரசு நியாயத்தை ஆதாரமாகக் கொள்ளவில்லை மிருக பலத்தையே நம்பி இருக்கிறது நாட்டின் குடிமக்களாலேயே நடத்தப்படுவது தான் ஆட்சி என்று அழைக்கப்பட முடியும். மற்றவர்களின் ஆட்சி எல்லாம் திருட்டுத்தனம் தான் பகல் கொள்ளைதான் மோசடிதான் நமது மக்கள் மனதில் நமது சொந்த நாட்டின் மீது அன்பையும் தன்மான உணர்வையும் பெருமித எண்ணத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறேன் என் சொற்பொழிவுகள் மூலம் நான் சாதித்தது இதுதான். இன்றைய ஆட்சியாளர்கள் இதை எதிர்க்கிறார்கள் என்றால் ஒன்றிய அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளட்டும் அவருடைய கூத்து முடிந்து போயிட்டு இனி அவர்கள் மூட்டை கட்டு வேண்டியதுதான் மக்கள் மனதில் உரிமை உணர்ச்சிகளை என் சொற்பொழிவுகள் மூலம் நான் ஊட்டினேன் நான் இதை என் கடமையாக கருதுகிறேன்.
இந்த கருத்துக்களை கொண்ட டாக்டர் ஜி என் பேச்சைக் கேட்டபின் நீதிபதி மெல்லி இன்று வரை திரட்டப்பட்ட உங்கள் சொற்பொழிவுகளின் கருத்துக்களை விட நீங்கள் இப்போது செய்த சொற்பொழிவு மிகவும் மிகவும் தீவிரமானது உங்கள் கருத்துக்கள் தீவிரவாத தன்மை கொண்டவை என்பதற்கு ஆதாரங்கள் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை என்று டாக்டர் ஜிக்கி ஒரு வருட கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
—திரு. கார்த்திக்