திருமுருக கிருபானந்த வாரியார் – மக்களால் வாரியார் ஸ்வாமிகள் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
வாரியார் என்றாலே வயலூரும் வயலூர் என்றாலே வாரியாரும் தான் நினைவுக்கு வருமளவுக்கு வயலூர் முருகன் பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர்.
நாடெங்கிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி நிதி திரட்டி வயலூர் கோபுரத் திருப்பணியாற்றியவர் வாரியார் ஸ்வாமி .
சைவ சித்தாந்தத்தையும் முருகன் பெருமையையும் தெள்ளுத் தமிழில் அள்ளித் தந்தவர் .
சரளமான மொழிநடையில் சுவையான கிளைக் கதைகளுடன் மிகப் பெரிய ஆன்மீக தத்துவங்களையெல்லாம் மிக எளிமையாக மக்களிடம் எடுத்துச் சென்றவர் ; சிறியவர் முதல் பெரியவர் வரை தனது ஜனரஞ்சக சொற்பொழிவால் கட்டிப்போட்டவர் .
இவர் ஆற்றிய ஆன்மீகத் தொண்டுகளுக்காக இவரை அறுபத்து நாலாவது நாயன்மாரென்றே அழைத்தனர் மக்கள்.
எண்ணற்ற
கோவில்களைச் சீரமைத்தார் , கோபுரங்கள் கட்டினார் , பல கோவில்களை புனர்நிர்மாணம் செய்தார் ஸ்வாமிகள் .
ஆன்மீகத்தையும் சனாதன தர்மத்தையும் பக்தியையும் பரப்ப எல்லா வழிகளிலும் தொண்டாற்றினார் .
சொற்பொழிவுகள் , ஆலயத் திருப்பணி தவிர ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி
பக்தி பிரசாரம் செய்தார் .
குறிப்பாக “திருவருள்” “துணைவன் ” போன்ற முருகன் புகழ் கூறும் திரைப்படங்களில் தோன்றி நல்ல கருத்துக்களைப் பகிர்ந்தார்.
1993ம் வருடம் நவம்பர் 7ம் தேதி…
அயல்நாட்டில் பிரசங்கம் முடித்துத் திரும்பும் வழியில் வானில் விமானத்திலேயே
ஸ்வாமிகளின் உயிர் பிரிந்தது.
அப்போது அவருக்கு வயது 87.
வாரியார் ஸ்வாமியை கௌரவிக்கும் வகையில் 2006ல் மத்திய அரசாங்கம் அவர் நினைவாக தபால் தலை வெளியிட்டது.
திருமதி.பிரியா ராம்குமார்