SHENBAGARAMAN PILLAI.

VSK TN
    
 
     

செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் -15, 1891 – மே-26, 1934)

தமிழகத்தைச் சேர்ந்த மாபரும் விடுதலைப் போராட்ட போராளி. “சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என வீரமுழக்கமிட்ட போராளி. நம் தாய்த் திருநாட்டில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றது மட்டுமின்றி, ஜெர்மனி, வியன்னா, தென்னாப்பிரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டிய வேட்கை மிகுந்த போராளி!!

 

திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை எனும் ஊரில், சின்னசாமிப் பிள்ளைக்கும், நாகம்மாளுக்கும் பிறந்தார். தந்தை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். செண்பகராமன் பிள்ளை , இளம் பிராயத்திலேயே சிலம்பம், வாள்வீச்சு இன்னபிற விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆரம்பித்த விடுதலைப் போர், இந்தியா முழுவதும் பரவிய காலம் அது. நாடு முழுவதும் விடுதலைப் போராட்ட கொந்தளிப்பு! அதை அடக்க பிரிட்டிஷார் கொடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பால்மணம் மாறாத இளஞ்சிறார்கள் கூட போராட்டத்தில் பங்குகொண்டனர். அப்போது அணைகடந்த வெள்ளத்தின் சீறிப்பாயும் ஆற்றலையொத்த பதினைந்தே வயதுடைய ஒரு இளம்தலைவன் திருவனந்தபுரத்தில் உதயமானான்!

 

வீர எழுச்சிமிக்க இவனது விடுதலைப் பேச்சுக்கள் அனைத்து வயதினர் மனதிலும் விடுதலை வேட்கையை கொழுந்துவிட்டு எரியச் செய்தது! இதயத்தில் ஆழப் பாய்ந்த இவரது உரைகளின் விடுதலை உணர்ச்சி போராட்டங்க மேலும் நடைபெறத் தூண்டின!

 

இதனைக் கண்டு கோபமுற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சிறுவனது வாயையும், கரங்களையும் கட்டிப் போட முயன்றது!! மாணவர்கள்தான் சுதந்திரத்திற்கு நிறைய பாடுபட வேண்டும் என்று நினைத்த பிள்ளைச் சிறுவன் “தேசியப் படை ” என்ற அமைப்பை உருவாக்கினார்!! இது விரைவில் பலமிக்க அமைப்பாக மாறியது!

 

இவர் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போதே, தன் மனதினுள் மூண்ட விடுதலைத் தீயின் காரணமாக, “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்” என்ற என்ற அமைப்பை ஏற்படுத்தி “வந்தே மாதரம்” என்று வீர முழக்கமிட்டார். பின் பல விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டு “ஜெய்ஹிந்த்” என்ற முழங்கினார். “ஜெய்ஹிந்த்” முழக்கம் முதன்முதலில் செண்பகராமன் பிள்ளையால்தான் முழங்கப்பட்டது!

 

இவரது விடுதலை வேட்கையை ஒடுக்க ஆங்கிலேயர் நினைத்தனர். இந்நேரத்தில்தான் உலகை அறிந்துக் கொள்ள செண்பகராமன் பிள்ளைக்கு வாய்ப்பு கிடைத்தது!

 

1908 -ம் ஆண்டு செப்டம்பர் 22- ம் நாள் என்.எல்.ஜி.யோர்க் என்ற ஜெர்மானிய கப்பலில் ஏறி ஐரோப்பிய நாட்டிற்குச் சென்றார். இத்தாலியில் சிறிதுகாலம் தங்கி இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று, அங்கிருது சுவிட்சர்லாந்து சென்று அங்குள்ள கலாசாலை ஒன்றில் சேர்ந்து மிகச்சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். பல பட்டங்களை தன் பெயரோட இணைத்துக் கொண்டார்.

 

அந்தக் கலாசாலையில் படிக்கும்போதே பல சொன்பொழிவுகளை ஆற்றி, இந்திய நாட்டின் மீது ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அடக்குமுறை பற்றி வீரம் கொப்பளிக்கும் வகையில் பேசி, இந்தியாவின் மீது பிறநாட்டு மக்களின் கவனத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தினார். பின் அங்கிருந்து ஜெர்மானியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியலே துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

 

பெர்லினில் இருக்கும்போது இந்திய சர்வதேசக் குழு ஒன்றை நிறுவி, ஐரோப்பிய நாடுகளில் இந்தியவைக் குறித்து ஆங்கிலேயர் செய்த பொய் பிரச்சாரத்தை முறியடித்தார். “புரோ இந்தியா” எனும் இதழைத் தொடங்கி இந்தியர்களான் உண்மையான நிலையையும் ஆங்கிலேயர்களான் பொய்யான இந்தியர்கள் மீதான வதந்தி குற்றச்சாட்டுகளையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடையே இந்தியா குறித்து ஆங்கிலேயர் செய்து வைத்திருந்த பொய் பிம்பத்தை உடைத்து உண்மையை அறியச் செய்தார்.

 

1933 -ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில், செண்பகராமன் பிள்ளையும் சுபாஷ் சந்திரபோஸும் நீண்டநேரம் உரையாடினார்கள். அப்போது பிள்ளை தெரிவித்த ஒரு திட்டம்தான் சந்திரபோஸை வெகுவாகக் கவர்ந்தது. தான் தேடிக் கொண்டிருந்த பாதையைக் காட்டியவர் என்ற மதிப்பு டாக்டர் பிள்ளை மீது சந்திரபோஸுக்கு இருந்தது.

 

பிள்ளை கூறிய கருத்தாவது :

 

“இந்தியா விடுதலை பெற வேண்டுமானால், இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசிய ராணுவம் ஒன்றை அமைக்க வேண்டும்! அந்நிய நாடுகளின் ஆதரவோடுதான் பிரிட்டிஷாரை வெளியேற்ற வேண்டும் உலகமகா யுத்தத்தின் போது நான் கண்ட அனுபவங்களைக் கொண்டே நான் இத்திட்டத்தை வகுத்தேன்!”

 

“ஜெய்ஹிந்த்”

“வந்தே மாதரம்”

 

திருமதி. அம்பிகா

 

 

 

Next Post

பஞ்சாமிர்தம்

Tue Sep 17 , 2024
VSK TN      Tweet    ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 செப்டம்பர் 17) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 சந்தியுங்கள்: ஆக்ராவின் ‘ரோட்டீவாலீ அம்மா’வை ஆக்ரா நகரின் பரபரப்பான எம்.ஜி சாலை நடைபாதையில் ஒரு மண் அடுப்பு எரிகிறது, அது ‘ரோட்டீவாலீ அம்மா’ என்று அறியப்படும் மூதாட்டி பகவான் தேவியின் அடுப்பு. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கணவர் சரண் சிங் உடல்நிலை சரியில்லாமல் படுத்த […]

You May Like