SWAMI CHIDBAVANANDHA

VSK TN
    
 
     

Image result for swami chidbavanadha

 

 

நீலகிரியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த கிராமம் அதிகாரட்டி என்று அதற்கு பெயர் . அங்கு உள்ள மக்களின் அழைப்பை ஏற்று சுவாமி சித்பவானந்தர் அந்த ஊருக்கு சென்றார் . கிராமத்தின்  சிறப்பான அமைப்பு, மக்களின் அன்பான உபசரிப்பு தெய்வ பக்தி,சுவாமிகளை மிகவும் ஈர்த்தது  அனைத்து வகையிலும் அதிகாரத்தையும் முன்னேற்றத்திற்கு உதவும் காரியங்களை செய்ய வேண்டும் என்று எண்ணம் சுவாமிகளின் மனதில் எழுந்தது.குழந்தைகளிடத்தில் ஒழுக்கம், இளைஞர்களிடையே சுயநலமற்ற தொண்டு, பொதுவாக மக்களிடையே அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை நிரந்தரமான அம்சங்களாக ஆகும் வரையில் அந்த சேவை அமைய வேண்டும் என்று சுவாமிகள் தீர்மானித்தார் .

ஆசிரமம் தொடங்கலாம் . நிரந்தரமாக செயல்படுவது எப்படி?

பெருகிவரும் பக்தர்களின் தேவைகளை உணர்ந்த சுவாமிகள் ,நிரந்தரமான சங்கம் அமைப்பதற்கு சூழல் உருவாகியதை பக்தர்களிடம் கூரியபோது , மகிழ்ந்த மக்கள் ஒரு கட்டிடத்தை கட்ட முடிவு செய்தார்கள் . அரும்பாடு பட்டு நிதி திரட்டி பூஜை அறை ,பிரார்த்தனை கூடம் ,வரவேற்புரை ஆகியவை கொண்ட கட்டிடம் ஒன்றை கட்டி முடித்தனர்அவ்வூர் மக்கள் . கட்டிட வேலைகள் பூர்த்தியானவுடன் 14 .01. 1937 சரஸ்வதி தேவியின் திருவுருவ படத்தை பிரதிஷ்டை செய்து ‘ ஸ்ரீ கலைமகள் சேவா சங்கம என்ற பெயரை சூட்டினார் .கலைமகள் சேவா சங்கத்தை ஒரு பஜனை மடமாக மட்டும் சுவாமிகள் உருவாக்கவில்லை அதை ஒரு பயிற்சி கூடமாகவே கருதினார். அதன் செயல்பாடுகள் மூலம் ஊர் மக்கள் குறிப்பாக, சிறுவர்கள் நல்ல ஒழுங்கு கட்டுப்பாட்டினை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

சுவாமிகளின் இந்த நன்னோக்கத்தை ஊர்மக்களும் நன்கு புரிந்து கொண்டு தம் பிள்ளைகளை சங்கத்தின் வழிபாடுகளுக்கு தவறாமல் அனுப்பி வைத்தனர். நேராக நிமிர்ந்து அமர்தல், அமைதி காத்தல், அதிகாலையில் துயில் எழுதல், பெற்றோரை வணங்குதல் தினசரி சிறிது தியானம் செய்தல் பள்ளி பாடங்களை முறையாக பயிலுதல் ஆகியவற்றிற்கு சங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கத்தில் தேவிக்கு பூஜை செய்வதும் சிறுவர்கள் தான். இவ்வாறு சிறுவர்களின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்த சுவாமிகள் முதியவர்கள் வயதான காலத்தில் நேரத்தை தெய்வ சிந்தனையில் போக்குவதற்கும் , சிறந்த நூல்களைப் படிப்பதற்கும், நல்ல சம்பாஷனை நிகழ்த்துவதற்கும், அமைதியாக வழிபாடு செய்வதற்கும் சங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வழிகாட்டினார். அவ்வண்ணமே சங்கத்தின் செயல்பாட்டை அமைத்தனர் சங்க நிர்வாகிகள் .

நிரந்தரமான அமைப்பாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த சுவாமிகள் அதற்கேற்ற முறையில் அதனை வழி நடத்தினார். பணத்தை அதிக அளவில் நிலுவையில் வைத்திருப்பது நல்லதல்ல நிர்வாகம் தகுதி இல்லாதவர்கள் கையில் செல்வதற்கு அது வாய்ப்பாகிவிடும் .நிர்வாகிகளிடையே பகையையும் அது வளர்த்து விடும் என்பார். மேலும் ஆடம்பரம், விளம்பரம் முதலியவை பக்திக்கு இடையூறு விளைவிக்கும். வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றால் சிக்கனத்தையும், எளிய முறைகளையும் கையாள வேண்டும் என்று சுவாமிகள் கூறுவார்.

இவ்வாறு ஸ்ரீ கலைமகள் சேவாசங்கத்தை உருவாக்குவதில் சுவாமிகள் காட்டிய அக்கறையும் அதை நிர்வகிக்க இருந்த பக்தர்களுக்கு அளித்த அறிவுரைகளையும் பயிற்சியும் கவனிக்கும் போது எந்த வொரு பகுதியிலும் நல்லவளர்ச்சி ஏற்படவேண்டுமென்றால் அந்தக் பகுதி மக்கள் தன்னலமின்றி ஓன்றிணைந்து செயல்பட்டல்தான்முடியுமென்பதை செயல்படுத்திக் காட்டினார் .

சுவாமி சித்பவானந்தர் கூறிய விளக்கங்கள் சில

கோயில் கோபுர பொம்மை சர்ச்சை கருத்து . உண்மை என்ன ?

கோபுரத்தின் கீழ் நிலையில் அருவருப்பான காட்சிகளையும் மனித உருவங்களையும் பிறகு அடுத்தடுத்து இருந்த மேல்நிலைகளில் தேவர் முனிவராகிய உருவங்களை பார்த்து கோயில் தத்துவத்தை விளக்கினார்.

மனிதன் மோகத்தில் துவங்கி ,பிறகு அதை துறந்து நற்குணம் நிறைந்தவனாக வாழ்ந்து ,பின் தெய்வத்தன்மை பெறுவதையே இது சித்தரிக்கிறது என்றார் சித்பவா னந்தர்.

கோபுர தரிசனத்தின் சிறப்பு

கோபுரத்தை தாங்கிக் கொண்டிருப்பது போல் தோற்றம் அளிக்கின்றது கோபுர பொம்மைகள், ஆனால் உண்மையில் கோபுரமே பொம்மைகளை தாங்கிக் கொண்டிருக்கிறது மனிதன் எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் உண்மையில் இறைவனே

செய்பவர் மனிதன் இறைவன் கையில் கருவி மாத்திரமே என்பதை உணர வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .

 

தென்னாட்டு விவேகானந்தர்

 

துறவி ஒருவன் துறவு நெறியை எப்படி பின்பற்ற வேண்டும் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் தியானம் எப்படி செய்ய வேண்டும் ,தன் ஆற்றலை எப்படி அனைவரும் பயனுறும் வண்ணம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் தீர்க்கமாக ஆலோசித்து இவை அனைத்திலும் சுவாமி சித்பவானந்தர் தமக்கு முன்மாதிரியாக பின்பற்றியது சுவாமி விவேகானந்தரை தான்.

அன்பில், வீரத்தில், அச்சமின்மையில், தாயே அனைய கருணையில், ஞானத்திறத்தில், அருட்கொடை அளித்த வல்லன்மையில் ,வேதாந்தத்தின் வாழ்வும் வடிவமாய் விளங்கியதில் விவேகானந்தர் போல் இருக்கிறார் என்று பக்தர்களை உணரச் செய்தவர் சுவாமிகள்.

 

அடுத்த ஆன்மீக அலை தமிழ் நாட்டில் இருந்து புறப்படும்

அடுத்த ஆன்மீக அலை ஒன்று தமிழ்நாட்டிலிருந்து தான் புறப்படும் அதன் விளைவாக பாரதம் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் அது தமிழ்நாட்டில் இருந்து தான் துவங்கும் என்றார் விவேகானந்தர்.

சுவாமி சித்பவானந்தர் தவ வாழ்க்கை இதற்கு சாட்சி.

நூறு இளைஞர்களை கொடுங்கள் உலகை மாற்றி காட்டுகிறேன் என்ற வீர முழக்கத்தை நிறைவேற்ற வந்தவர் தான் ‘சின்னு ” என்ற சுவாமி சித்பவானந்தர்.

சுவாமி சித்பவானந்தர் மகா சமாதி அடைந்த தினம் – நவம்பர் 16

திருமதி.ராஜேஸ்வரி

 

 

Next Post

JHANSI RANI

Tue Nov 19 , 2024
VSK TN      Tweet    குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா […]