Chennai Sandesh
—————–
6th December 2023
Swayamsevaks of RSS and Seva Bharati in Chennai Flood Relief
For five days, storm and rains have severely affected Tamil Nadu capital Chennai and surrounding districts. The state government said that 75 thousand government employees are involved in the rescue and relief work. After five full days Tamil Nadu Chief Minister M. K. Stalin invited voluntary organizations to come forward to help the affected people. But on the day of the onset of storm RSS, Seva Bharati volunteers engaged themselves in flood relief and rescue work. 17 people have died in Chennai due to storm and floods. Hundreds are in relief camps. Many people had to leave marooned Chennai for their hometowns. Due to flooding on the roads, traffic has been affected and the supply of essential items including milk has been hit for several days. In the meantime, IIT Chennai has taken an effort to collect the depth of stagnant water at regular intervals. The data collected will be used to identify flood hotspots. The platform launched by IIT enables users / public to report details like flood location, depth of water etc. The purpose of the data collected through this platform is to improve disaster preparedness.
சென்னை வெள்ள நிவாரணப் பணியில் ஆர். எஸ். எஸ், சேவா பாரதி தொண்டர்கள் தீவிரம்
ஐந்து நாட்களாக புயலும் மழையும் தமிழக தலைநகர் சென்னையையும் சுற்றுவட்டார மாவட்டங்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது. மீட்பு, நிவாரண பணிகளில் எழுபத்தைந்தாயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக அரசுத்தரப்பு கூறியது. ஐந்து நாட்கள் ஆன பின்பே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய தன்னார்வ நிறுவனங்கள் முன்வரலாம் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் புயல் வீசிய அன்றைய தினமே ஆர். எஸ். எஸ், சேவாபாரதி தொண்டர்கள் களத்தில் இறங்கி வெள்ள நிவாரணபணியிலும் மீட்புப் பணியிலும் முனைந்தார்கள். புயல் வெள்ளத்தால் சென்னையில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். ஏராளமானவர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட வேண்டியதாயிற்று. சாலைகளில் வெள்ளம் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிலநாட்களாக பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நீர் தேங்கியுள்ள ஆழத்தை சீரான இடைவெளியில் சேகரிக்க சென்னை ஐஐடி முயற்சி எடுத்துள்ளது. சேகரிக்கப்பட்ட தரவு வெள்ளத்தின் முக்கிய இடங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும். வெள்ளத்தின் இருப்பிடம், நீரின் ஆழம் போன்ற விவரங்களைப் பயனர்கள் / பொதுமக்கள் புகாரளிக்க ஐஐடி தொடங்கியுள்ள தளம் உதவுகிறது, இந்த தளத்தின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளின் நோக்கம், பேரிடர் தயார் நிலையை மேம்படுத்துவது.
चेन्नई बाढ राहत में संघ के स्वयंसेवक और सेवा भारती
पांच दिनों से तूफान और बारिश ने तमिलनाडु की राजधानी चेन्नई और आसपास के जिलों को बुरी तरह प्रभावित किया है. सरकार ने कहा कि 75 हजार सरकारी कर्मचारी बचाव और राहत कार्य में लगे हुए हैं. पांच दिनों के बाद ही तमिलनाडु के मुख्यमंत्री एम.के. स्टालिन ने कहा कि स्वैच्छिक संगठन प्रभावित लोगों की मदद के लिए आगे आ सकते हैं। लेकिन तूफ़ान के पहले दिन से आर. एस. एस, सेवा भारती के स्वयंसेवक मैदान में उतरकर बाढ़ राहत एवं बचाव कार्य में लगे रहे। चेन्नई में तूफानी बाढ़ से 17 लोगों की मौत हो गई है. सैकडों लोग राहत शिविरों में हैं। कई लोगों को बाढ ग्रस्त चेन्नई छोड़कर अपने गृहनगर जाना पड़ा। सड़कों पर पानी भर जाने से यातायात प्रभावित हुआ है और दूध समेत जरूरी चीजों की सप्लाई कई दिनों से प्रभावित है। इस बीच, आईआईटी चेन्नई ने नियमित अंतराल पर स्थिर पानी की गहराई को इकट्ठा करने का प्रयास शुरू किया है। एकत्र किए गए डेटा का उपयोग बाढ़ हॉटस्पॉट की पहचान करने के लिए किया जाएगा। आईआईटी द्वारा लॉन्च किया गया प्लेटफॉर्म उपयोगकर्ताओं / जनता को बाढ़ के स्थान, पानी की गहराई आदि जैसे विवरणों की रिपोर्ट करने में सक्षम बनाता है। इस प्लेटफॉर्म के माध्यम से एकत्र किए गए डेटा का उद्देश्य आपदा तैयारियों में सुधार करना है।