Chennai Sandesh
———————–
30 November 2023
அந்த ‘சாலீஸ் பிளஸ் ஒன்’ மீட்பில் ஹனுமான்ஜி?
“நவம்பர் 28 அன்று இமயமலை சாரலில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்கும் குழுவினர், பாறை, கான்கிரீட், மண் கலந்த இடிபாடுகளைத் துளைத்து அவர்க்ளை எட்டியது பாரதம் முழுவதும் கொண்டாட்டங்களைத் தூண்டியது” என்பது ராய்ட்டர்ஸ் செய்தி. உத்தராகண்ட் சில்க்யாராவில் அந்த சுரங்கப்பாதை பணியாளர்களை காப்பாற்றியது துல்லியமாக யார்? அமெரிக்க இயந்திரமா? அல்லது ஆஸ்திரேலிய நிபுணரா? இல்லை, என்கிறார்கள் சிலர். இது உள்நாட்டு ‘எலி சுரங்க’த் தொழிலாளர்களின் சுத்த உடல் உழைப்பு என்று அவர்கள் கூறுகிறார்கள். விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்றியது நாமக்கல் ஆஞ்சநேயரின் (அனுமன்ஜி) அருள் என்று தமிழ்நாட்டில் வேறு சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் வாதம்: முதற்கட்ட மீட்பு நடவடிக்கையின் போது பல்வேறு சிக்கல்கள் நீடித்தபோது, கிடைமட்ட துளையிடுதலில் நிபுணத்துவம் பெற்ற, நாமக்கல் – திருச்செங்கோடு தரணி ஜியோடெக் நிறுவனத்திடமிருந்து வந்த ஒரு கருவி நம்பிக்கை ஒளிக்கீற்று ஆனது. அது துளையிட்ட குழாய்தான் சிக்கிய தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய ஆக்ஸிஜன், மருந்து உணவு எல்லாம் சென்றடையச் செய்தது. ஜியோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் பரந்தாமன் ஜெயவேல் இருவரும் மீட்புப் பணியில் தோள் கொடுத்தனர். தொழிலாளர்களைக் காப்பாற்றியது அவர்களின் தைரியமும் பொறுமையும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி கூற விரும்புவது. “சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: உங்களின் தைரியமும் பொறுமையும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” என்று மோடி கூறினார்.
हनुमानजी उन ‘चालीस प्लस वन’ के बचाव के लिए?
रॉयटर्स की रिपोर्ट के अनुसार, “बचावकर्ताओं ने 28 नवंबर को हिमालय में एक ध्वस्त सुरंग के अंदर 17 दिनों से फंसे सभी 41 श्रमिकों को चट्टान, कंक्रीट और पृथ्वी के मलबे से ड्रिलिंग करके बाहर निकाला, जिससे पूरे भारत में खुशी का माहौल था।” उत्तराखंड के सिल्कयारा में उन सुरंग श्रमिकों को किसने बचाया? क्या यह अमेरिकी मशीन है? या यह ऑस्ट्रेलियाई विशेषज्ञ है? न तो, कुछ लोग कहते। वे आगे कहते हैं, यह स्वदेशी ‘रैट माइनर्स’ का सरासर शारीरिक परिश्रम है। बहस चल रही है। इतने में तमिलनाडु में कुछ लोगों का मानना है कि यह प्रसिद्ध नामक्कल आंजनेय (हनुमानजी) का आशीर्वाद होना चाहिए जिसने उन श्रमिकों की जान बचाई। उनका तर्क है: जब प्रारंभिक बचाव अभियान के दौरान विभिन्न समस्याएं बनी रहीं, तो आशा की किरण बन गया धरणी जियोटेक कंपनी, नमक्कल – थिरुचेंगोडु, तमिलनाडु का एक उपकरण, जो क्षैतिज ड्रिलिंग में विशेषज्ञता रखता था। इसके द्वारा ड्रिल की गई ट्यूब फंसे हुए श्रमिकों तक आवश्यक ऑक्सीजन, दवा और भोजन पहुंचाने में सक्षम हुई। जियोटेक के प्रबंध निदेशक परन्दामन और जयवेल बचाव अभियान का हिस्सा थे। श्रमिकों को बचाने का श्रेय श्रमिकों के साहस और धैर्य को भी दिया जा सकता है, जैसा कि प्रधान मंत्री नरेंद्र मोदी चाहेंगे। मोदी ने कहा, ”सुरंग में फंसे साथियों से मैं कहना चाहता हूं कि आपका साहस और धैर्य हर किसी को प्रेरणा दे रहा है।”
Hanumanji to the rescue of those chalis plus one?
“Rescuers on November 28 pulled out all 41 workers trapped for 17 days inside a collapsed tunnel in the Himalayas after drilling through the debris of rock, concrete and earth to reach them, triggering jubilation across Bharat”, reported Reuters. Who precisely rescued those tunnel workers in Silkyara of Uttarakhand? Is it the American machine? Or is it the Australian expert? Neither, say some. They add, it is the sheer physical exertion of the indigenous ‘Rat Miners’. A debate is on. Some others in Tamilnadu tend to feel, it should be the blessings of well-known Namakkal Anjaneyar (Hanumanji) that saved the lives of those workers. They argue: When various problems persisted during initial rescue operation, a glimmer of hope was an equipment from Dharani Geotech company, Namakkal – Thiruchengodu, Tamilnadu, specialized in horizontal drilling. The tube drilled by it enabled reaching essential oxygen, medicine and food to the trapped workers. The Managing Directors Paranthaman and Jayavel of Geotech were part of the rescue operation. What saved the workers can also be attributed to their courage and patience, as Prime Minister Narendra Modi would like. “I want to say to the friends who were trapped in the tunnel that your courage and patience is inspiring everyone,” Modi said.