Chennai – Sandesh (SETHU)

8
VSK TN
    
 
     
சேது

——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன, ஆனி 1 ( 2012, ஜூன் 15)
பாதிரி முயற்சி ஹை கோர்ட் முறியடிப்பு 
ஜெயகுமார் என்பவர் ஒரு பாதிரி. கன்னியாகுமரி கல்லுகோட்டம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமிபுரம் கிராமத்தில் தன வீட்டை சர்ச் ஆக மாற்றினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது குறித்து கலெக் டரிடம் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த கலெக்டர் வீட்டை சர்ச் ஆக மாற்றக் கூடாது என்று உத்தரவு இட்டார். கலெக்டர் உத்தரவை எதிர்த்து பாதிரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா “குடியிருக்கும் வீட்டை சர்ச் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது சரியானது தான். அதை ரத்து செய்ய முடியாது. வழக்கு தள்ளுபடி செய்ய படுகிறது” என தீர்ப்பளித்தார்.
மக்கள் குரலாக ஹிந்து செயல்வீரர்கள் 
புதுகோட்டை அறந்தாங்கி அருகில் கட்டுமாவடி முதல் முத்துகுடாவரை உள்ள கடற்கரையோர கிராமங்களில் ‘ராஜீவ் காந்தி புனரமைப்பு திட்டம்’ சார்பில் அவசர கால சுனாமி வீடுகள் கட்டும் பணி ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கியது. அந்த பகுதியை சார்ந்த மீனவர்கள் தேக்க நிலையில் உள்ள திட்டத்தை கண்டு கோபம் கொண்டனர். அறந்தாங்கி ஆர் டி ஒ அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
ஹிந்து முன்னணி தொண்டர்களும் இதற்காக குரல் கொடுத்தனர். பின்பு அரசாங்க தரப்பில் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கேசவபெருமாள் , மாவட்ட பொது செயலாளர் ராமமுர்த்தி, சண்முகம், கந்தசுவாமி ஆகியோரும், அறந்தாங்கி ஆர் டி ஒ லீலாவதி, சுனாமி நிர்வாகி பொறியாளர் குமார், டி எஸ் பி, தாசில்தார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் ஆகஸ்டு 31 ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் மீனவர்கள் கலைந்து சென்றனர்.
கிராம இளைஞ்ர்கள் பார்வையில் டாக்டர்ஜி
தர்மபுரி மாவட்டம் பறையூர் கிராமத்தில் (பாலகோடு அருகில்) 43 இளைஞர்கள் கொண்ட ஒரு குழு ‘காந்தி இளைஞர் சேவை மன்றம்’ 2001 ல் நிறுவியது. பல்வேறு சேவை காரியங்கள் மேற்கொண்டது. இவர்களுடைய படிப்பு 5 வது வரை தான். தினக்கூலி வேலை செய்பவர்கள். இவர்கள் தங்களுடைய வருமானத்தில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சேமித்து ‘காந்தி மண்டபம்’ ஒன்றை நிறுவினர். மண்டபத்தின் நான்கு தூண்களில் தேசிய தலைவர்களின் சித்திரம் நிறுவப்பட்டுள்ளது. நேதாஜி, வ உ சிதம்பரனார், பகத் சிங், டாக்டர் ஹெட்கேவார் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மன்றத்தின் செயலாளர் தமிழ்செல்வன் கூறுகையில், ” எதிர்கால இளைஞர்களுக்கு வழிக்காட்டவும், தீய பழக்கங்கள் ஒழித்து, நல்ல பழக்கங்கள் கற்றுக்கொள்ளவும், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கவும், நாட்டுப்பற்றை வளர்க்கவுமே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது” என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Chennai - Sandesh

Sun Jun 17 , 2012
VSK TN      Tweet     June 15, 2012 Court thwarts Pastor Ploy  Pastor Jayakumar of Kallukotam, Kanyakumari Dist, Tamilnadu used the mike – amplifier method of evangelism in the village of Lakshmipuram. Villagers protested. Pastor Jayakumar complained to the District Collector. But the Collector ordered that a residential place cannot be converted into […]

You May Like