VSK TN
சேது
—————————————————
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன 8 சித்திரை ( 2012, ஏப்ரல் 6)
ஹிந்துக்களின் கால் நூற்றாண்டு போராட்டம் வென்றது!
புனித யாத்திரைத் தலமான திருகழுக்குன்றத்தை சேர்ந்த ஹிந்து முன்னணி ஆதரவாளர்கள் தங்களது வெற்றியை கொண்டாடினர். அவர்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதால் இனி நந்தியை எல்லோரும் தரிசிக்கலாம்.சற்றே பழைய கதை:அந்த நந்தி, எட்டு நந்திகளில் ஒன்று. வேதகிரீஸ்வரர் கோவில் கொண்டுள்ள மலையை சுற்றி எட்டு நந்திகள் உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவில் மலை வேதத்தின் உருவகமாக பக்தர்களால் பூஜிக்கபடுகிறது. கிரி வலம் வருவது வேதங்களை வழிபடுவதாகக் கருதப்படுகிறது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமான கட்டடமைப்புகள் முதல் இடத்தில் இருக்கும் நந்தியை சூழ்ந்து கொண்டன. சிவனை வழிபடுவதற்கு முன் நந்தியை வழிபடுவது மரபு. கடந்த 25 ஆண்டுகளாக இருந்த இந்த தலையீடு, ஹிந்து முன்னணியினர் மாவட்ட செயலாளர் மணி தலைமையில் கடந்த 7 வருடங்களாக கடுமையாக போராடி வந்தனர். சமீபத்தில் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட மனுவின் மூலம் ஹிந்துக்களுக்கு வெற்றி கிடைத்தது. அரசின் தலையீட்டால் சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நந்தி பெருமாள் மறுபடியும் தரிசனத்திற்கு காட்சி அளித்தார்.
பள்ளியின் பேராசை பெரு நஷ்டம் — கல்விக்கு!
திருவண்ணாமலை மவுன்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் ஏப்ரல் 16 அன்று எஸ் எஸ் எல் சி பொது தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம் திடீரென கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் சோதனை படை அந்த பள்ளிக்கூடத்தை சோதனை செய்தது. சோதனையில் 100 % தேர்ச்சி காட்டும் பேராசையில் பள்ளி நிர்வாகமே பதில் தாள்களை விநியோகித்து கொண்டு இருந்தது. இதை அறிந்த கல்வி துறை அதிகாரிகள் அந்த பள்ளியின் ஏழு ஆசிரியர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்தனர். மாநில சட்ட பேரவையில் அமைச்சர் என் ஆர் சிவபதி, மாநில அரசு அந்த பள்ளியின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார். பொதுவாக மாணவர்களின் இடர்பாடுகள் கருதி, பள்ளியை எச்சரித்து விட்டு விடுவது வழக்கம். ஆனால் இந்த விஷயத்தில் பள்ளியின் தவறு அப்பட்டமாக வெளிப்பட்டதால் அங்கீகாரம் ரத்து செய்வது நிச்சயம். எனதகவல்கள் தெரிவிகின்றன.
குப்பையிலிருந்து கல்விக்கு
சென்னையில் வசிக்கும் மணி என்னும் இளைஞர் வழியில் கிடைக்கும் எலக்ட்ரானிக் கழிவுகளை பயன்ப்படுத்தி அறிவியல் மாதிரிகள் செய்து காட்டி வருகிறார். எம் எஸ் டபள்யு (மாஸ்டர் ஆப் சோசியல் வொர்க்) முடித்த மணி எளிய முறையில் பல அறிவியல் மாதிரிகள் செய்கிறார். சி டி யில் ஒரு நூலை கட்டி சுழற்றி மையநீக்க விசையை விவரிக்கிறார். உபயோகமற்ற எல் இ டி விளக்குகள் மற்றும் செப்புக்கம்பிகளை கொண்டு மாதிரி ஜெனரேட்டரை உருவாகுகிறார். கைபபேசியில் உள்ள அதிர்வு பொறி இயந்திரம் கொண்டு சிறிய மின்விசிறியை செய்கிறார். விப்ஜியார் கோட்பாடுகளை உபயோகமற்ற டி வி டி களை கொண்டு எளிய முறையில் விவரிக்கிறார். ‘பெஸ்ட் சயின்ஸ் கன்டென்ட் டெவலப்பர் 2009 ‘ என்ற விருதைப் பெற்றுள்ளார்.