இந்து முன்னணி பத்திரிக்கை செய்தி

12
VSK TN
    
 
     
இந்து முன்னணி பத்திரிக்கை செய்தி

 மதமாற்ற வகுப்புகளை தடை செய்ய வேண்டும்

கிருத்துவ மிஷினரிகள் கோடைகாலம் வந்தவுடன் மாணவர்களின் விடுமுறைகளை பயன்படுத்தி கொண்டு கிருத்துவ மிஷினரிகளும், கிருத்துவ பள்ளி கூடங்களும் சேர்ந்து தமிழகம் முழுவதும் இந்து மாணவர்களுக்காக அறநெறி வகுப்புகள் நடத்துகிறோம், மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களுக்கு பிரியாணி சாப்பாடு, சாக்லேட், பரிசுப் பொருட்கள் கொடுத்து ஏமாற்றி கிருத்துவ மத போதனைகளை செய்து இந்து கடவுள்களை பேய், பிசாசு என்று கூறி மூளைச்சலவை செய்கிறார்கள்.  தமிழக அரசு இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.  தமிழக அரசு தடுக்காவிட்டால் ஆங்காங்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நக்சல் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்

தமிழகத்தில் நக்சல் கம்யுனிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.  பேருந்து நிலையங்களில் பேருந்துகளில் ஏறி பிரச்சாரம் செய்கின்றனர்.  புத்தகங்கள் விற்கின்றனர்.  உளவுத்துறை கண்டுபிடித்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.  சாதாரண மக்களை போல நக்சல்கள் கருமத்தம்பட்டியிலும், திருப்பூரிலும் பல வருடங்களாக தங்கி சதி திட்டம் தீட்டியுள்ளார்கள்.  அவர்களை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க உளவுத் துறை தவறிவிட்டது.  கருமத்தம்பட்டியில் ஐவரையும், திருப்பூரில் வீடு எடுத்து தங்கி இருந்த நக்சலைட் தம்பதியினரை கைது செய்தது மிகத்தாமதமே. 

இந்து வோட்டு யாருக்கு

இந்து முன்னணி அரசியல் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
1.  கோவில் தரிசன கட்டணத்தை உடனடியாக நீக்க வேண்டும்
2.  மதசார்பற்ற அரசு கோவில்களை விட்டு வெளியேறி இந்துக்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.
3.  மத மாற்ற தடை சட்டம் வேண்டும்
4.  பசு வதை தடை சட்டம் வேண்டும்.
5.  பள்ளிகளில் ஆன்மீக கல்வி வேண்டும்.
6.  பொது சிவில் சட்டம் வேண்டும்
7.  பெரும்பான்மை இந்துக்களுக்கும் முஸ்லீமும், கிருஸ்துவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை கொடுக்க வேண்டும்.
இந்துக்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம நீதி கொடுக்க வேண்டும்.  இந்த கோரிக்கைகளை வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கேட்க வேண்டும்.  இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்கு கொடுப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என இந்துக்களை கேட்டுக்கொள்கிறோம்.
சாதி அரசியல், பிரிவினைவாத அரசியல், இந்து விரோதிகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
வாக்குகளுக்கு பணமா?
தேர்தலில் பணம் கொடுக்கும் கட்சிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.  தேர்தல் கமிஷன் தற்போது சோதனை என்ற பெயரில் சாதாரண பொது மக்களையும், வியாபாரிகளையும்தான் துன்புறுத்துகிறார்கள். இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் தேவையான CID களை நியமித்து, உளவுத்துறை கண்காணித்து பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து அரசியல் கட்சிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை தடுக்க வேண்டும்
பங்களாதேஷ் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வேலை செய்வதற்காக நிறையப்பேர் வருகிறார்கள்.  இவர்களோடு பயங்கரவாதிகளும் கலந்து வருகிறார்கள்.  இவர்கள் இங்கே தங்கி ஏமாற்றி வாக்காளர் பட்டியலிலும் சேர்ந்து விடுகிறார்கள். ஏமாற்றி ரேஷன் கார்டுகளும் வாங்கி விடுகிறார்கள்.  இதனால் வருங்காலத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர இருக்கிறது.  இதனை உளவுத்துறை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுத்து பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டுமென  இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பசு கடத்தலை தடுக்க வேண்டும்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 1 மாதத்திற்கு 1,25,000 மாடுகளை கடத்தி கொண்டு போகிறார்கள்.  மாடு சராசரி 10,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 1 மாதத்திற்கு 1,250,000000 ஆயிரத்து இருநூற்று ஐம்பது கோடி பண பரிமாற்றம் ஏற்படுகிறது.  இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.  கள்ள நோட்டுகளும், கருப்பு பணமும் விளையாடுகிறது.  மாடு கொண்டு செல்லும்போது லாரியில் 6 மாடு மட்டும் இருக்க வேண்டும், மாட்டிற்கு தேவையான உணவு, தண்ணீர் இருக்க வேண்டும்.  டாக்டர் சர்டிபிகேட் இருக்க வேண்டும். (1968 Transport அனுமதி சட்டம்) டிரிப்ஷீட் இருக்க வேண்டும்  என விதி உள்ளது.  ஆனால் இதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் மாடு கடத்தல் நடந்துகொண்டிருக்கிறது.  அதிகாரத்தில் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் துணையோடு மாடு கடத்தல் நடைபெறுகிறது.  முஸ்லிம் வியாபாரிகள்தான் பெரும்பான்மையாக உள்ளார்கள்.  இந்த கடத்தலை தடுத்தால் உடனே பெரிய இடத்தில் இருந்து அநியாயம் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயம் அழிந்துவிடும், கால்நடைகளும் அழிந்து விடும்.  இது தொடர்ந்தால் இந்து முன்னணி சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ambedkar - a great Hindu leader

Thu Apr 14 , 2016
VSK TN      Tweet     To commemorate Dr. Bhimarao Ambedkar on his Birth Anniversary,  a function was organized by Dr. Hedgewar Smarak Samiti in Shakthi Karyalaya, Chennai.  Shri K Venkatraman, Senior Justice, Madras High Court (Retd) presided over the function.  Highlighting the important works of Dr. Ambedkar on Caste discrimination and maintaining social […]