குலசேகர ஆழ்வார்
திரு.குலசேகர ஆழ்வார் அவர்கள் பரந்து விரிந்து காணப்பட்ட பண்டைய இந்து மகா பாரதத்தின் ஒரு பகுதியான இன்றைய கேரளத்தின் திருவஞ்சிக்குளத்தில் ஸ்ரீ ராம பெருமானின் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் தமிழ் திங்கள் மாசி-யில் சிறப்புப் பெற்று வலிமையான ஆட்சிபுரிந்த சேர அரச குடும்பத்தில் ராஜகுமாரனக பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.
தமிழகத்தில் கிபி.600 பல்லவர் ஆட்சி நிலவிய சமயத்தில், பௌத்தமும், சமணமும், ஆளுமை செய்து ஹிந்து வழிபாட்டுமுறை, தத்துவங்கள், வேதங்கள் பற்றிய மக்களிடையே அறியாமை நிலவிய சமயத்தில், இறைவன் அருளால் இந்த பாரதநாடு மீண்டும் உலகிற்கு தனது பண்டைய பண்பாட்டையும், இறை த்த்துவம் பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் பல மகாங்கள் தோன்றினர். ஆழ்வார்களும் நாயன் மார்களும் தோன்றி சைவ,வைணவ பக்திப்பாடல்களை பாடினர். திருக்கோவில்களுக்கு சென்று பண்ணோடு இசைந்த பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டனர். கலை நயத்துடன் கூடிய உள்ளத்தை உருக்கும் இனிய இசைப்பாடல்கள் இயற்றினர். கற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லாதவர்களுக்கும் சுவை களிப்பூட்டின. இவ்விசைத்தமிழ் பாமரர்களை எளிதில் சென்றடைந்தது, மக்களை எட்டிய மறைத்தமிழாய் உயர்ந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்தது. தம் இறை அன்பையும் பக்திக்கனிவையும் ஈரத்தமிழ் பாடித் தமிழகத்தில் திருமால் நெறியை நிலைநிறுத்திய பெருமக்கள் ஆழ்வார்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். இறைவனுடைய குணங்களாகிய அழுது வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர். இறைவனின் வடிவழகில் ஈடுபட்டு ஆழ்ந்தவர்கலாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர். ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர். அவர்கள் எல்லா ஜாதி, சமுதாயத்தை சேர்ந்தவர்கள். திருப்பாணாழ்வார் ஐந்தாம் வர்ணத்தைச் சேர்ந்தவர். கோவில்களில் அவர்கள் கால் படக்கூடாது என வரைமுறை இருந்தது. ஆனால் இறைவனின் மேல் ஆழ்ந்த பக்தி இருந்ததால் பாண் மீட்டி தினசரி காவிரிக்கரையின் மறுகரையில் இருந்து ஸ்ரீரங்கநாதரை பக்தி பெருக்கோடு வீணை மீட்டி பாடல்கள் பாடி பரவசப்படுத்தினார். ஸ்ரீரங்கநாதர் அவரை லோகதாரங்க முனிவரை, அவர் தோளின் மீது ஏற்றி
கொண்டு வரச்சொல்லி வெறும் பத்தே பத்து பாசுரங்கள் மூலம் தன்னிடம் சேர்த்துக் கொண்டார். திருப்பாணாழ்வாரை தொடர்ந்து குலசேகர ஆழ்வார் பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம். கேரளாவில் திருவஞ்சக்குளம் என்னும் நாட்டை ஆண்ட த்ருடவ்ருதன் என்ற மன்னனின் மைந்தனே, குலத்தை காபாற்ற வந்திருக்கிறான் என்பதால் குலசேகரன் என்பர். மன்னன் ஆனால் நாங்கு வேதத்தை கரைத்து குடித்தவர். வால், வில், குதிரைஏற்றம் இதில் தேர்ச்சி பெற்றவர். இளவரசனான குலசேகரன் மிகுந்த வீரத்துடன் போரிட்டு சோழ, பாண்டிய அரசர்கள் மீது படையெடுத்து வென்று அவர்கள் நாடுகளை தம் வசப்படுத்தினார். தந்தை இளவரசனுக்கு ராஜ பட்டம் கொடுத்து விலகிக் கொண்டார். திருமணம் ஆகி மகனை பெற்று சீறும் சிறப்புமாக ஆட்சி செய்த குலசேகரனுக்கு ராமாயண சொற்பொழிவு மேல் விருப்பம் ஏற்பட்டது. இறைவன் மேல் ஆசை இவரை திருத்தி ஆட்கொள்ள, பக்தியின் அளவை அளக்கவே முடியாது. ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு பட்டயம் கூற்வது போல, ராமாயணத்தில் ஆழ்ந்து விடுவார். பக்திக்கு சாட்சிகள் கரன், தூஷண் 15,000 பேருடன் ராமன் தனியாக போரிடும் காட்சியை சொற்பொழிவாளர் விவரித்து கொண்டிருக்கிறார். என் இராமபிரான் ஆபத்தில் இருக்கும்போது நாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதா, புறப்படுங்கள் வீரர்களே என்று கட்டளையிட்டார். சூழ்நிலை பார்த்து சொற்பொழிவாளர் காட்சியை மாற்றினார். அவ்வளவு ஆழ்ந்த பக்தி. மற்றுமொரு சமயம் தினம் சொல்லும் சொற்பொழிவாளர் ஆனது வரவில்லை வேறு ஒருவர் ராமாயண சொற்பொழிவு நிகழ்த்த வந்தார். அவருக்கு குலசேகரர் பக்தி பற்றி தெரியாது. இராவணன் சீதையை கவர்ந்து செல்லும் காட்சியை விரிவாக எடுத்துரைத்தார். குலசேகரன் உடனடியாக கோபமுற்று இக்கணமே எனது படையை திரட்டிக் கொண்டு இலங்கைக்கு சென்று அந்த கொடிய இராவணனிடம் இருந்து சீதையை மீட்டு வருவேன். போர் வீரர்களுக்கு கட்டளையிட்டு பெரும் படையுடன் இலங்கை நோக்கி பயணமானார். கடலில் இறங்கி நீந்த ஆரம்பித்தார். ஆழ்வாரின் பக்திக்கு இறங்கி சீதை லட்சுமனனுடன் ராமன் காட்சியளித்தார்.
3 ;- திருமால் அடியார், வைணவர்கள் எக்குலத்தவர் ஆனாலும், குலசேகர மன்னனின் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்றுவர சிறப்பு அனுமதி உண்டு. அமைச்சர்களுக்கு பொறாமை ஏற்பட்டது. தாங்களே செல்லமுடியாத இடத்திற்கு சாதாரண குலத்தில் பிறந்த வைணவர்களுக்கு செல்ல அனுமதியா என்று கோபமுற்று வைணவர்கள் மீது மன்னர் கோபமுறுமாறு செய்ய திட்டமிட்டனர். அரண்மனையில் ஒரு இராமநவமி அன்று திருமஞ்சன கொண்டாட்டம் ராமனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெருமாளின் திருஆபரணங்கள் விலை உயர்ந்த முத்துமாலையை மறைத்து வைத்தனர். மன்னர் திருடியவரை பிடித்து தன் முன் நிறுத்த ஆணையிட்டார். அமைச்சர்கள் ஒரு பொய்யை கூறினர். இதுதான் சமயம் என்று அரண்மனைக்கு வரும் வைணவர்களில் ஒருவர்தான் திருடியிருப்பதாக பொய் குற்றம் கூறினர். குலசேகரர் துடித்தும் போய்விட்டார். வைணவர்கள் தூய்மையாணவர்கள், உண்மை பேசுபவர்கள், திருமால் அடியவர்கள் திருடமாட்டார்கள். உடனடியாக ஒரு குடத்தில் விஷப்பாம்பை இட்டு நிரப்பி கொண்டுவரச் சொல்ல, இந்த பாம்பு என்னை தீண்டினால், வைணவர்கள் திருடர்கள் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார். விஷப்பாம்பு இருக்கும் இடத்தில் மன்னர் கைவிட்டார். பாம்பு தீண்டவில்லை. மன்னர் உத்தரவிட்டார், அமைச்சர்கள் தம் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினர். இது குலசேகர மன்னன் திருமால் அடியார்கள், வைணவர்கள் மீது கொண்ட அளவிடமுடியாத பக்தியே காரணம்.
“படியாய் கிடந்து உன் பவளவாய் காண”, என்ற குலசேகர ஆழ்வார் பாசுரத்திலிருந்து எல்லா விஷ்ணு ஸ்தலங்களிலும் குலசேகரன்படி என்று பெருமாள் அருகிலேயே இருக்கும். அதுவே வாயிற்படிக்கு பெயர் ஆயிற்று. பக்திக்கு இலக்கணம் குலசேகர ஆழ்வார். மன்னராக இருந்தும் மிகவும் எளியவராக எல்லா திருமால் அடியவரையும் அணைத்து கொண்டு மிக்க புகழ் பெற்றார். நடுவில் இளவரசராக இருந்த காலத்திலேயே குலசேகரன் ராமாயண காவியத்தில் பற்று ஏற்பட்டு ராம காலத்திற்கு தன்னை அழைத்துச் சென்று இராமாயணத்தில் தன்னை ஒருமனதாக்கிக் கொண்டு நல் ஆட்சி நடத்தி, மக்களை நல்வழிப்படுத்திய செம்மலாகத் திகழ்ந்தார் குலசேகர ஆழ்வார்.