நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு

20
VSK TN
    
 
     

ஒருமனதான தீர்ப்பு

• உச்சநீதிமன்றம் ஒரு உச்சபட்ச சமநிலையை பாதுகாக்க வேண்டும்

• வரலாறு, மதம், சட்டம் இதைத் தாண்டி இந்த வழக்கில் உண்மை பயணித்துள்ளது

• ஷியா வாரியத்தின் மனு நிராகரிப்பு

• நிர்மோஹி அகாடாவின் மனு கால வரம்பு கடந்துவிட்டது. அதனால் நிராகரிக்கப்படுகிறது.

• மசூதி பாபரின் ஆணையின் பேரில் மீர்பாஹியால் கட்டப்பட்டது.

• கடவுள் சிலைகள் 1949இல் மசூதிக்குள் வைக்கப்பட்டது.

• ராம ஜென்மபூமி ஒரு சட்டப்படியான மனிதர் அல்ல.

• மசூதி காலி மனையில் கட்டப்படவில்லை என்பது தொல்லியல் துறை ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது.

• மண்ணுக்கு அடியில் உள்ள கட்டிடம் இஸ்லாமிய கட்டிடம் இல்லை

• 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்தது என்று தொல்லியல் துறை கூறியுள்ளது.

• ஹிந்துக்கள் மைய பகுதியில் இருக்கும் ஒரு கூம்பு ராமர் பிறந்தார் என்று நம்புகின்றனர்.

• ஹிந்து மற்றும் முஸ்லிம் இருவரும் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு செய்து வந்துள்ளனர்.

• ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று ஹிந்துக்களின் நம்பிக்கை, விவாதம் மற்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அதை சர்ச்சை/சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது.

• சன்னி வக்பு போர்டின் வழக்கு ஏற்கப்பட்டது நேரம் வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது.

• தொல்லியல் துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது.

• நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்தின் உரிமையை யார் என முடிவு செய்ய முடியாது.

• ராமர் குழந்தை சிலை ஒரு சட்டப்படியான மனிதர்.

• 1857 முன் ஹிந்துக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு செய்து வந்தார்கள் என்று ஆதாரங்கள் உள்ளன.

• இஸ்லாமியர்கள் சொத்து அவர்களுடையது என்பதற்கான உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.

• உள் முற்றம் சர்ச்சைக்குரிய இடம்.

• சர்ச்சைக்குரிய இடம் ராமலல்லாவிற்கு மட்டுமே சொந்தம்.

• அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு செல்லாது.

• முஸ்லிம்கள் மசூதி கட்ட மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்.

• மத்திய அரசு 3 மாதத்திற்குள் ஓர் அறக்கட்டளை அமைத்து உள் மற்றும் வெளி முற்றம் இடத்தை ஒப்படைக்க திட்டம் தீட்டப்பட வேண்டும்.

• 5 ஏக்கர் ஏற்புடைய இடம் சன்னி வக்போடுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.

• அறக்கட்டளை கோயில் கட்ட திட்டமிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத்

Sat Nov 9 , 2019
VSK TN      Tweet     ஸ்ரீராமஜென்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிக்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை RSS வரவேற்கிறது.  பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது. நீ்ண்ட நெடியகாலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிப்பட்டுள்ளன.  அயராமல் இப்பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து சத்யம், நியாயம் […]