தேசிய கல்வி முறையை அன்றே தமிழகத்தில் செயல்படுத்தியவர் சித்பவானந்தர்
தமிழகத்தில் கல்வியின் இன்றைய சூழ்நிலை
மூன்றாம் வகுப்பு மாணவன் 2ஆம் வகுப்பு தமிழ் படத்தை படிக்கக் கூடிய சதவிகிதம் -10.2%{2018} இருந்து 4.8%{2022} ஆக குறைந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
85% இன்ஜினியரிங் பட்டதாரிகள், படிப்பு முடித்தவுடன் வேலையில் சேர்த்துக் கொள்ள போதிய திறனற்றவர்களாக இருக்கின்றனர் என்று திருமதி. சுதாமூர்த்தி- [இன்போசிஸ் பௌண்டேஷன்] கூறுகிறார்
இந்த சூழ்நிலையில் கல்வியில் சீர்திருத்தம் வேண்டி கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழக ஆட்சியர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் .
தேசிய கல்விக் கொள்கை :
முக்கியமாக தாய் மொழியில் ஆரம்பக் கல்வி ,விளையாட்டு,கலை, வாழ்க்கைக்கல்வி, ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த தேசியக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தாலும் தென்னகத்து விவேகானந்தர் என்று போற்றப்படும் சித்பவானந்தர் அன்றே செயல்படுத்தி விட்டார்
சித்பவானந்தர் செயல்படுத்திய கல்வி முறை
உடலை உறுதிப்படுத்தி , சிந்தனை ஆற்றலை வளர்ப்பது கல்வியின் அம்சங்களாக இருக்க வேண்டும் என்பது சித்பவானந்தரின் கல்விக் கொள்கையாகும்.
நர்சரி பள்ளிகளில் விளையாட்டின் மூலம் தான் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பதே அவர்களுக்கு உகந்த கல்வியாகும். சிறுபாலர்கள் பயிலும் கல்விக்கூடத்திற்கு களிக்கூடம் என்று பெயரிட்டார்.
விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்கள் மாணவருடைய அறிவை தர்க்கரீதியில் வளர்த்து வருவது போல, கவிதை, கற்பனை, கதை அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு வளம் தந்து கலையை ஊக்குவிக்கின்றன . மனிதன் வெறும் கண்ணும், காதும், கையும் கொண்டு மட்டும் அமைக்கப்பட்டவன் அல்ல, அவன் மனமும் இதயமும் சேர பெற்றவன் தான்.
நீதி போதனை என்னும் ஆளுமை வளர்ச்சி,கல்வி
கீதை, குறள், ராமாயணம் போன்ற பெரும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, சமுதாயத்திற்கோ மட்டும் பயனுடையவையாக இல்லாமல் என்றென்றும், மலைகள் உள்ள வரை,மாநிலம் உள்ளவரை, மக்கள் வாழும் காலமெல்லாம் பயன்படத்தக்க பெரு நூல்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படித்து, கருத்தாழத்தை உள் புகுத்தி வாழவேண்டுமென வழிகாட்டினார் .
கண்காட்சிகள்
அறிவியல் கோட்பாடுகளில் விளக்கும் வேடிக்கைகள் சோதனைகள், ரசாயன விந்தைகள் எண்களின் வினோதங்கள், கணித ஜாலங்கள் போன்ற சிறுவர்களின் அறிவு, ஆற்றல், முயற்சி, கற்பனை, கவிதை, ஆக்கசக்தி, நிர்மாணத்திறன் போன்றவற்றை கண்காட்சி மூலம் ஊக்குவித்தார்
கலை விழா
கலை மற்றும் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலை விழா, இசைக் குழு, சக்தி பூஜை, அந்தர் யோகம் , உணவு பரிமாறுவது போன்ற நடைமுறை செயல்பாடுகள் அனைத்தின் பன்முகக்கல்விக்கூடமாக விளங்கியது ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுலம். கல்வியை வழங்குவது பள்ளி. கல்விக்கு பல பரிமாணங்களண்டு என்பதற்கு அவரது ஸ்ரீவித்யாவன குருகுலம் சான்று.அதுவே இன்றைய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கமாகும்..
பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை:
நீங்கள் தேர்வு ஒன்றை மட்டும் நோக்கமாக கொண்டு மாணவர்களை சிரமப்படுத்தக்கூடாது . பண்புகளை வளர்க்கும் வாழ்க்கை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தேசபக்தி, தெய்வபக்தி, நல்லொழுக்கம் , கட்டுப்பாடு, சிந்திக்கும் திறன்
அவர்கள் எளிமையாகவும் தூய்மையாகவும் இருக்க நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆடம்பரமாக ஆடை அணிதல், தேவைக்கு மேல் பொருட்களை வைத்திருத்தல், வாசனை திரவியங்களை பயன்படுத்துதல், மனதை கெடுக்கும் கீழான காட்சிகளை பார்த்தல், கீழான புத்தகங்கள் படித்தல் போன்ற தீமை பயக்கும் பழக்கங்களில் இருந்து அவர்களை அறவே விலக்கி வைக்க வேண்டும். தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு செயலின் மூலமும், தன்னம்பிக்கை மூலமும் தன் காரியங்களில் ஈடுபட வல்லவர்களாக விளங்குவதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மக்களை உருவாக்குவதே சிறந்த பணி என்று அதற்கான திட்டத்தை வகுத்து அவ்வழியில் வாழ்ந்த காட்டினார். களிமண்ணுக்கு உருவம் கொடுத்து வடிவத்தை சூலையில் வைத்து சுட்டு விட்டால் அதை கலைத்து வேறு வடிவம் செய்ய முடியாது. அதுபோல் சிறுவர்களுக்கு தக்க பயிற்சி கொடுப்பதன் மூலம். மக்கள் சமுதாயத்தை திருத்தி அமைக்கலாம். எனவே இவர் கல்வித்துறையின் மனிதனை உருவாக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
ஆரம்ப பள்ளி முதல் கலைக்கல்லூரி வரை அனைத்து கல்வி நிறுவனங்களை திறம்பட நடத்தி காட்டிய வீரத்துறவி சித்பவானந்தர். நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள், மகளிர் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி, மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி, உடற்கல்வி ஆசிரியை பயிற்சி கல்வி, பாலர் பள்ளி என்று பல கல்வி நிலையங்களை தோற்றுவித்தவர் சுவாமி சித்பவானந்தர்
– திருமதி. ராஜேஸ்வரி.