“Deep state conspiracies, regime changes in many countries, unending wars, and vanishing lineages—what is the solution to all this? What is the path shown by Vivekananda?”

VSK TN
    
 
     

உலகம் சந்திக்கும் சவால்களை சற்று பார்ப்போம்..

டீப் ஸ்டேட் பிடியில் மேலை நாடுகள்.

 

ஷைலாக் என்பவன் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வரும் இரக்கமற்ற ஈட்டிக்காரன். பணத்தை தராவிட்டால் ஒரு பவுண்டு  தசையை தர வேண்டும் என்ற நிபந்தனை விதித்தவன். மேலை நாடுகள் அப்படிப்பட்ட ஷைலாக் போன்ற ஈட்டிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

“ மேலை நாடுகள் சில ஈட்டிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றன .(ஷைலாக்ஸ்).  சட்டரீதியான அரசாங்கம், சுதந்திரம் ,உரிமை பாராளுமன்றம் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்படுகிறீர்களே அவையெல்லாம் வேடிக்கை (joke)” என்கிறார் விவேகானந்தர்.

அமெரிக்காவை சேர்ந்த டீப் ஸ்டேட் எனப்படும் குழுவின், ஜார்ஜ் சோரஸ் என்ற பணக்கார தொழிலதிபரின்  ஆட்களின்  பிடியில் பல நாடுகள் இருக்கின்றது.

டீப் ஸ்டேட் என்பது ரகசியமாக செயல்படும் செல்வாக்கும் பணபலமும் உடைய குழுவாகும் . இவர்கள் சில மீடியாக்கள் சாதகமான தன்னார்வ குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் புள்ளிகளை கையில் போட்டுக்கொண்டு சதி வேலைகளை செய்கிறார்கள்.

ஜார்ஜ் சோரஸ் மற்றும் டீப் ஸ்டேட் இணைந்து ஆப்கானிஸ்தானத்தில் இருந்து பங்களாதேஷ் பின்னர் சிரியா வரை ஆட்சிக் கவிழ்ப்பு செய்துள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் போராட்டங்களை தூண்டிவிட்டு மாவோயிஸ்டுகள் மற்றும ஷரியா ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்துகின்றனர் .

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீது கொலை முயற்சி , அண்டை நாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு ஓட்டு உரிமை மற்றும் அமெரிக்க நாட்டு மீடியாவை ட்ரம்பிற்கு எதிராக செயல்பட வைத்தது டீப் ஸ்டேட் சதி வேலைகள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் பல நாடுகளில் அறிவிக்கப்படாத ஷரியா சட்டம் பல பகுதிகளில் அமளில் உள்ளது .காவல்துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளது .கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டில் பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 1400 இளம்பெண்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அரசு, அனைத்து கலாச்சாரத்தையும் பாதுகாக்கிறோம் என்ற பேருக்காக , கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

வோக்கிசம், ஓரினச்சேர்க்கை (LGBTQIA+),  போன்றவை பண்பாடு,கலாச்சாரம் ஆகியவற்றை அழித்துவிடும் .சிறு குழந்தைகளை தூண்டி விட்டு ஆண், பெண் பாலின மாற்று சிகிச்சை எனும் கொடுமை ஊக்குவித்து அமெரிக்காவில் பணம் பண்ணுகிறார்கள் .

இந்த பண முதலைகளின் (ஷைலாக்ஸ்) பிடியில் மேலை நாட்டு சாமானிய மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.

 

சனாதன ஒழிப்பு , ஏதோ அரசியல் அல்ல.

 

சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது வெறும் அரசியல் கோஷம் என்று நாம் நினைத்தால் அது மிக தவறாகும் . இது ஒரு பெரிய சதித் திட்டம் ஆகும் . கோயில் நில ஆக்கிரமிப்பு , கோயில் வருமானம் , தங்கம் ஆகியவை கோயிலுக்கு பயன்படுவதில்லை . பல கோயில்களில் ஒரு வேலை பூஜைக்கு வழி இல்லை . ஆகம வழிபாட்டில் தலையீடு. சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கிளப்பிவிட்டது போல பல முயற்ச்சிகள் . தீபாவளி போன்ற பண்டிகைகளை அழிக்க முயற்சி . ஏதோ பட்டாசு தான் மாசுக்கு காரணம் என்று பிரசாரம் . விலங்குகள் நலம் என்ற போர்வையில் ஜல்லி கட்டு , கோயில் யானை ஆகியவற்றை ஒழிக்க முயற்சி . சினிமாவில் ஹிந்து விரோத கருத்துகள் இவ்வாறு பன்முனை தாக்குதல் நடக்கிறது என்பதுதான் உண்மை. ஏன் அவ்வளவு தீவிரம்.

சுவாமி விவேகானந்தர் தெளிவாக கூறுகிறார், “இந்தியாவின் உயிர்த்துடிப்பு மதம், மதம் மட்டுமே என்பதையும்,அந்த உணர்வு இல்லாதுபோனால் எத்தனை அரசர்கள் இருந்தாலும், எத்தனை சமூக சீர்திருத்தங்கள் இருந்தாலும் நம் நாட்டு மக்கள் ஒருவரின் தலைமீதும் குபேரனின் செல்வத்தை கொட்டி  குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும் என்கிறார்.

நம் பாரத நாட்டின் தேசிய வாழ்வின் முதுகெலும்பாகவும் அஸ்திவாரமாகவும்,அசைக்க முடியாத அடித்தள பாறையாகவும் உள்ளது மதம் மட்டுமே.”

இந்த அஸ்திவாரத்தை குறி வைத்து வேலை நடக்கிறது என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்

 

 

அழிவில் தள்ளப்படும் மேலை நாடுகள்.

 

கூட்டுக் குடும்பம் , உரிய வயதில் திருமணம், மகப்பேறு ஆகியவற்றிற்கு எதிராக இளைஞர்களை திருப்பிவிட்டதால் பல நாடுகளின்  வம்சங்கள் அழிவை நோக்கி செல்கிறது

ஜப்பான் மற்றும் பல நாடுகள் பிறப்பை விட அதிக இறப்பை காண்கின்றனர். இத்தாலி, போலந்து, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, சிங்கப்பூர் ,கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் தொகை சரிந்து வருகிறது.  இனமே அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகளை அன்றே எச்சரித்தது போல் நடந்துவிட்டது “ ஆன்மீக அடிப்படை மட்டும் இல்லாமல் போனால் மேலை நாகரீகம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தூள் தூளாக சிதறிவிடும் மனித குலத்தை வாளால் ஆள நினைப்பது முழுக்க முழுக்க பயனற்ற வீண் முயற்சி அத்தகைய வன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் எல்லாம் நாசம் அடைந்து மிக விரைவில் தன் நிலையில் இருந்து உருத்தெரியாமல் மறைந்து போய் இருப்பதை நீங்கள் காணலாம் பௌதிக ஆற்றலின் நிலைகளான ஐரோப்பா தன் நிலையை மாற்றி ஆன்மீகத்தை தன் அடிப்படையாகக் கொள்ளாமல் போகுமானால் இன்னும் 50 ஆண்டிற்குள் அது நொறுங்கி சுக்கலாக சிதறிவிடும். அந்த ஐரோப்பாவை எது காக்க முடியும் தெரியுமா? உபநிடதங்கள் கூறுகின்ற ஆன்மீகம் மட்டுமே”

 

ஓயாத யுத்தங்களின் பின்னணி என்ன ?

இஸ்ரேலில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களது பிறப்பிடமான ஜெருசலேம் நகரம் உள்ளது

கடந்த அக்டோபர் , 2023 ல் இஸ்ரேல் நாட்டில் நடந்த இசை நிகழ்ச்சி மீது ஹமாஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 1000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பபட்டனர் . இதன் விளைவாக அப்பகுதியில் பெரிய யுத்தம் தொடங்கியது . 45 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் ஒரு லட்சம் பேர் வீடு இழந்தனர்.

 

தொடர்ந்து நடக்கும் இந்த பயங்கர யுத்தங்களின் பின்னணியை விவரிக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

“ பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம் பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு இந்த தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரை பெற்றிருந்தனர். பாபிலோனியர்களின் தெய்வங்கள் ‘பால்’ என்று அழைக்கப்பட்டனர் .இவர்களுள் ‘பால் மெரோடக்’ தலைமை தெய்வம். நாளடைவில் இந்த குழுக்களில் ஒன்று மற்றொன்றை வென்று அவற்றை தன்னுடன் ஒன்று சேர்த்து விட்டது. அதன் விளைவாக வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிட்டார். இவ்வாறு தான் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கான செமிட்டிக் [} இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

யூதர்களின் தெய்வங்கள் மொலக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.

இவர்களில் இஸ்ரேல் என்னும் குழுவிற்கு சொந்தமனவர் ‘மொலாக் -யஹ்வா’  அல்லது மொலாஹ்-யாவா என்று அழைக்கப்பட்டார் காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்து தங்கள் சொந்தம் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது இத்தகைய ஒரு மத வெறிக்காக சிந்தப்பட்ட ரத்த வெள்ளமும், நடத்தப்பட்ட கொடுமைகளும், செய்யப்பட்ட கொடூரத்தனங்களும் எவ்வளவு என்பது உங்களுக்கும் பலருக்கும் தெரியும்.பிற்காலத்தில் பாபிலோனியர்கள் இஸ்லாமிய தலைமையை அழிக்க முயன்றார்கள் ஆனால் முடியவில்லை.

ஓயாத யுத்தங்களுக்கு பாரதம் காட்டும் தீர்வு

வரலாறு எட்ட முடியாத பாரம்பரியங்கள் தங்கள் பார்வையை செலுத்த துணியாத அளவிற்கு மிக தொலைவான, அடர்ந்ததான அந்த பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளில் ஒருவர் ‘ஏகம் ஸத் விப்ரா பகுதா வதந்தி ; -‘இருப்பவர் ஒருவரே,ரிஷிகள் அவரை பலவாராக அழைக்கிறார்கள் என்று கூறினார். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை தேசிய வாழ்வின்  முதுகெலும்பாக அமைந்துள்ளது. இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனை ஆண்டுகள் கடந்து நம்மிடம் வந்துள்ளது .இந்த மகத்தான ஒரு கருத்தை தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த மேலை நாடுகளில் எந்த அளவிற்கு சகிப்பற்ற தன்மையை நிலவுகிறது.

மேலைநாட்டில் நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தை விட்டு விலக்கப்படுவான் அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றி சரளமாக அதே வேளையில் நயமாக குறை கூறுவார்கள் நீங்கள் மேலை நாடுகளுக்குச் சென்று பார்த்தால் அங்கு சில ஆண்டுகாலம் வாழ்ந்து பார்த்தால் புரியும் மிகப்பெரிய பேராசிரியர் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர் கூட மதத்தைப் பற்றி தாங்கள் கொண்டுள்ள கருத்தில் நூற்றில் ஒரு பங்கை கூட வெளியே சொல்வதற்கு தைரியம் இல்லாத  இருப்பதை காண்பீர்கள். இந்த சகிப்புத்தன்மை என்னும் கருத்திற்கு உலகம் காத்திருக்கிறது. நாகரிகத்திற்கு அது ஒரு மகத்தான  செல்வமாக மட்டுமல்ல இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் எந்த நாகரிகமும் நீண்ட காலம் வாழ முடியாது “

 

என்றும் இளைஞர்களின் நாயகனாகத் திகழும் விவேகானந்தர் நம் இளைய தலைமுறையிடம் எதிர்பார்ப்பது.

 

மகத்தானதொரு எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் அதற்கான இயக்கங்களை உருவாக்குவதிலும் ஆற்றலை சேர்ப்பதிலும் சங்கல்பங்கங்களை இணைப்பதிலும் தான் இருக்கின்றது

எதிர்கால பாரதம் முற்றிலும் அதையே சார்ந்து இருக்கிறது சங்கல்ப ஆற்றலை சேமித்தல் அவற்றை ஒருங்கிணைத்தல் அவை அனைத்தும் ஒரே மையத்தில் திரட்டுதல்  இந்து இயக்கம் முதலில் செய்யவேண்டியது பாமர மக்களுக்கு கல்வியறிவித்து அவர்களது சிந்திக்கும் திறனை வளர்ப்பது உடனடியாக செய்ய வேண்டிய சீர்திருத்தம் என்று விவேகானந்தர் கூறினார்.கல்வி என்று  சுவாமிஜி கூறியது பாரம்பரிய பண்பாட்டை போதிக்கிற பண்புப்பதிவுகளை ஏற்படுத்தி சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியைத்தான்.

ஒரு மரத்துண்டை சுலபமாக அறுக்க  வேண்டுமென்றால் அதில் இழை யோடுகிற போக்கில் தான் அறுக்க வேண்டும். அதுபோல சனாதன ஹிந்து தர்மத்தின் ஆதாரத்திலும் நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ள நெறிமுறைகளின் மூலமும் தான் நாட்டை சீர்திருத்தி மேம்படுத்த முடியுமே அன்றி நம் மண்ணிற்கும் மரபிற்கும்  மாறுபட்ட மேலைநாட்டு சித்தாந்தங்களால் முடியாது.

 

திருமதி.ராஜேஸ்வரி

Next Post

Mon Jan 13 , 2025
VSK TN      Tweet     பாரத மாதாவின் தவப்புதல்வன் பரட்சிப்போராளி சூர்யா சென் நினைவு தினம் இன்று! சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 – 12 ஜனவரி 1934) இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர்; தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர்; தாய் நாட்டின் விடுதலைக்குத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்; அவர் தான் புரட்சிப் […]