பாரதமே பல துண்டாய் பிரிந்து கிடந்த காலத்திலே சுதந்திரம் என்ற ஒன்றை நோக்கமாக கொண்டு பரந்து விரிந்து கிடந்த பாரதம் ஒன்றிணைந்து சுதந்திர போரில் வெற்றி கொள்ளும் தருவாயில் எதிரிகளின் சூழ்ச்சிகளும் துரோகிகளின் சுயரூபமும் சுகந்திர பாரதம் காண நேரிட்டது. சுதந்திர பாரத தேசம் இந்தியா , பாக்கிஸ்தான் என இந்துகளுக்கு என்றும் இஸ்லாமியர்களுக்கு என்றும் பிரிக்கப்பட்டது. இந்தியா என்ற நாடு பிரிக்கப்பட்ட தருவாயில் 565 சமஸ்தானமாக சிதறி இருந்தது. இதனை ஒன்றிணைக்க சுதந்திர இந்தியாவில் மாகாணங்களை இணைக்கும் இணைப்பு பாலமாய் திகழ்ந்தார்.
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து பாரதத்தையே தன் விழைநிலமாகக் கொண்டு தன் ஆளுமை திறனாலும் சாணக்கிய தணத்தாலும் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து எடுக்க வேண்டிய இடத்தில் எடுத்து அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து பேச வேண்டிய இடத்தில் பேசியும் நாம் இன்று காணும் இந்திய தேசத்தை கட்டமைத்த ஓர் சிற்பி தான் சர்தார் வல்லபாய் பட்டேல்.
குஜராத் மாநிலத்தில் பேட்லாத் மாவட்டம் கரம்சத் என்னும் ஊரினில் நேர்மையின் சிகரமாய் உண்மையி்ன் ஔியாய் தியாக சுடரும் தேசப்பற்றுமிக்க நாயகனாக விளங்கிய இந்தியாவின் பிஸ்மார்க் 30 அக்டோம்பர் 1875ல் அவதரித்தார்.
சின்னசிறு வயதில் இருந்தே தவறுகளுக்கு எதிராக எதிர்த்து நின்றார் பட்டேல். அதில் குறிப்படத்தக்க ஒரு துணிச்சல்மிக்க நிகழ்வாக கருதப்பட்டது பள்ளியில் கற்கும் காலத்தில் ஆசிரியர் ஒருவர் தான் வழங்கும் நோட்டுகளுக்கே பணம் செலுத்தி பெற்று பயன்படுத்திட வேண்டும் என மாணவர்களைக் கட்டாயப்படுத்தினார். அந்த ஆசிரியர் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார் கடிந்து கொள்வார் என அணைத்து மாணவர்ளும் அதனைப்பற்றி பேச அச்சப்பட்டனர். ஆனால் நம் சர்தார் வல்லபாய் பட்டேல் துணிந்து தன்னுடன் மாணவர்களைக்கூட்டி ஆசிரியர் ஒழிக! ஆசிரியர் ஒழிக! என நோட்டு விற்பனை செய்த ஆசிரியரைக் கண்டித்து கோஷமிட்டார் . இதனை அறிந்த பள்ளி முதல்வர் என்ன பிரட்சனை என்று கேட்டார். பட்டேலின் கோரிக்கையைக் கேட்டு மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் நோட்டு புத்தகம் வாங்கலாம் என ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
வல்லபாய் பட்டேலுக்கு 18 வயதில் திருமணம் நடைப்பெற்றது . சட்டம் பயின்று கோத்ரா நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார் . சரியான வழக்குளை மட்டுமே எடுத்து நடத்தி வந்தார் பட்டேல். பணத்தை நோக்கமாக கொண்டிராமல் சட்டபணியை சேவையாக நீதியை நிலைநாட்டும் கருவியாக தன்னை கருதி செயல்பட்டார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லா நிலையில் இருப்பதாக தந்தி வந்த வேலையிலும் முடிவு நிலையில் இருந்த வழக்கு தள்ளிபோய்விடும் என கருதி வழக்கை முடிப்பதில் நாட்டம் காட்டிய பட்டேலுக்கு மீண்டும் ஒரு தந்தி வந்தது. வழக்கு முடிந்த தருவாயில் பட்டேல் மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி. நீதிமன்றமே அதிர்ந்து போனது. துக்கத்தின் உச்சநிலைக்கே சென்றார் பட்டேல். இளம் பருவத்திலே மனைவியை இழந்த பட்டேலை பலரும் மறுமனம் புரிய தூண்டினர் . பட்டேலோ தனது மனைவியின் நினைவுகளுடன் நித்தமும் வாழ்ந்து புனித காதலுக்கு அடையாளமாய் திகழ்ந்தார் . பட்டேல் வெளிநாட்டிற்கு சென்று “ மிடில் டெம்பில் “ என்ற கல்லூரியில் பயின்று பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். 1910ல் அங்கே அவருக்கு சட்டகல்லூரி பேராசிரிய பணியும் கிடைத்தது. அதனை வேண்டாமென உதறிவிட்டு தாய்நாட்டிற்கு பணியாற்றவே நான் சட்டம் பயில வந்தேன் என நாடு திரும்பினார் பட்டேல். பல முன்னனி நிறுவனங்களில் இருந்தும் பணிகள் பல வந்தன அனைத்தையும் உதரிவிட்டார். பட்டேல் கல்வி கற்க வெளிநாட்டிற்கு செல்கையில் “ரோமன் சட்டத்தை” கப்பலில் வைத்தே படித்து முடித்துவிட்டார். கல்லூரிக்கு நடந்தே சென்று கல்வி கற்றுள்ளார். காரணம் வறுமை. பணத்தை கிக்கணமாய் பயன்படுத்த வேண்டிய சூழல்.
1917 தர்யாபூர் நகராட்சியின் வாரியத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று பட்டேல் 12 ஆண்டுகாலம் நகராட்சிக்காக பணியாற்றினார். பார்சாத் என்ற திருடன் இரவு நேரத்தில் புகுந்துகொள்ளையடித்தும் மக்களை அச்சுருத்தியும் வந்தான் . இதனை தடுக்க வலுவான இளைஞர்களை கண்டறிந்து இரவில் வரும் திருடனை தடு்க்க பயிற்சியளித்து திருடனை ஓடவிட்டார். வெள்ளை அதிகாரிகள் நகருக்கு வருகையில் மக்கள் பணத்தை செலவு செய்ய வேண்டும். இதனை கண்டித்து உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டார். தேவையற்ற செலவில் இருந்து விலக்க பெற்று வெற்றி கண்டார்.
1919ல் நடைபெற்ற கொடுங்கோலாட்சியின் ஒடுக்குமுறை ஜாலியன்வாத் படுகொலையில் கொதித்தெழுந்து தனது பாரிஸ்டர் பட்டத்தை துறந்தார் பட்டேல். ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தனது வழக்கறிஞர் பணிக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழுமையாக சுகந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார். சுதேசி பொருட்களை வாக்குவிக்கும் செயலில் தீவிரமாக இறங்கினார். 1928 பார்டோலி விவசாய போராட்டத்தில் வெற்றி கண்டதன் விளைவாக இளவரசர், படைத்தலைவர், பெருநிலக்கிழார், அரசியல் செல்வாக்கு பெற்றவர், கலைகளில் புலமைப்பெற்றவர் என பல வார்த்தைகளை உள்ளடக்கிய “சர்தார்” என்ற பெயரை சூட்டினார் காந்தியடிகள் . சுதந்திர போராட்டத்தின் சிப்பாய் எனவும் இவர் புகழப்படுகிறார்.
இடைகால அரசின் உள்துறை மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் முதல் உள்துறை அமைச்சராகவும் திகழ்ந்தவர் சர்தார். பூக்கள் போல சிதறிக்கிடந்த பாரததேசத்தை தேசபக்தி என்னும் நூல் கொண்டு இந்தியா என்ற நற்புகழ் கொண்ட பூமாலையை தொடுத்த மகிமை பட்டேலையே சாரும். பல மாகாணங்களை இணைத்த வல்லபாய் பட்டேலுக்கு மிகவும் கடின பரிட்சை நடத்திய மாகாணங்கள் மூன்று. பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தப் பின் ஒன்று இந்தியாவுடன் இணைய வேண்டும் இல்லையெனில் பாக்கிஸ்தானுடன் இணைய வேண்டும் . அதுவும் இல்லையெனில் தனிநாடாகத் திகழவேண்டும். ஜீனாகத், ஹைதரபாத், காஷ்மீர் ஆகிய மூன்றும் பெரும்பாடுபடுத்தியது இந்தியாவுடன் இணைய.
ஜீனாகத் ஜீனாகத்தை ஆண்டவர் ஓர் இஸ்லாமிய அரசர். அவருக்கு பாக்கிஸ்தானுடன் இணைய விருப்பம். ஆனால் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதற்கு அம்மக்களிடம் தேர்தல் நடத்தினார். இந்திய ராணுவம் துணை கொண்டு பட்டேல் இதன் விளைவாக இந்தியாவுடன் இணைந்தது ஜுனாகத் .
ஹைதரபாத் ஹைதரபாத்தை ஒரு பெரிய மாகாணம் இதனை ஆட்சி புரிந்தவர் இஸ்லாமிய நவாப். பாக்கிஸ்தானுடன் இணைய ஆவல் கொண்டார் . ஆனால் பாக்கிஸ்தானுக்கும் ஹைதரபாத்துக்கும் இடையே ஆன தொலைவு அதிகம் ஆகையால் பாக்கிஸ்தான் உதவி பயனற்று போகியது. ஹைதரபாத்துடன் ஒரு ஆண்டு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தியா ஹைதரபாத் உடன் இந்த உடன்படிக்கையை மீறி ஹைதரபாத் தீவிரவாத செயலிலும் ஆயுத குவிப்பிலும் ஈடுபட்டது பாக்கிஸ்தான் தூண்டலில் ஹைதரபாத். நேரு வெளிநாடு பயணம் சென்று இருக்கையில் ஹைதரபாத்தின் செயலுக்கு முடிவுகட்ட விரும்பிய பட்டேல் இந்திய கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார்.1948 செப்டம்பர் 20ல் அன்று முதல் இந்தியாவின் ஒரு பகுதி ஆனது ஹைதரபாத் இதன் விளைவாக தான் ” இந்தியாவின் இரும்பு மனிதன் “ என்று அழைக்கப்படுகிறார் பட்டேல்.
காஷ்மீர் அமைதி பூங்காவாய் திகழ்ந்த காஷ்மீரை ஆண்டவர் ராஜா ஹரிப்சிங். இந்து அரசர் இவர். ஹரிப்சிங் தனி நாடாகவே காஷ்மீரை வைக்க விரும்பினார். இத்தருணத்தில் பாக்கிஸ்தான் மலைவாழ் கரடுமுரடான மூடர்களை காஷ்மீரை தாக்கசெய்தார் முகமது அலி ஜின்னா. இத்தருணத்தில் ராஜா ஹரிப்சிங் இந்தியாவின் உதவியை நாடி இந்தியா உடன் இணைய ஒப்பு கொண்டார். இந்த ஒப்புதல் ஒப்பந்தமே ‘ Article 370 ‘ இதனை சமீபத்தில் நீக்கியது மத்திய அரசு. நாட்டுக்குள்ளே மாறுபட்ட சட்ட முறைகள் இருக்க கூடாதென இதற்கு முன் இருந்த அரசுகள் சில வருடங்கள் மட்டுமே கொடுக்கபட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய துணியவில்லை. இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் தலைவிரித்தாடினர். தற்போது ரத்து செய்ய பட்டதால் மீண்டும் அமைதி நிலைக்கும் இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைந்தது காஷ்மீர்.
நாட்டினை ஒரூங்கிணைத்த சர்தார் ராஷ்டிய சுயம் சேவா RSSயே மக்களுக்கும் அரசுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அமைப்பு என்றும் அரசும் RSSயும் இணைந்து செயல்பட்டால் நாட்டை முன்னேற்ற இயலும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . தன் சொத்து, குடும்பம், சிற்றின்பம் என அணைத்தையும் துறந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தேசத்துகாகவும் பாரம்பரிய கலாச்சார பாதுகாவலராக விளங்கிய சுயம் சேவகனின் தன்னலமற்ற பணியை ஆதரித்தே வந்தார். சர்தார் ஒரு தேசியவாதியாகவும் இந்தியாவின் கலாச்சாரத்தின் மீதும் ஓர் உயர்ந்த தாக்கம் கொண்டவராகவே காணப்பட்டார். இந்தியா பொருளாதாரத்தில் உயரவேண்டும் எனில் கல்வியில் முன்னேற வேண்டும் என கல்வி துறையில் முணைப்பு காட்டினார்.
பாரதத்தில் பல முக்கிய அத்தியாவசிய வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்திய இந்தியாவின் இரும்பு மனிதன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டு தனது 75வது வயதில் இவ்வுலக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக சென்று விட்டார். இவரை போற்றும் விதமாக 1991ல் ‘பாரதரத்னா’ விருது வழங்கப்பட்டது மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய நிலையம், சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் அகாதமி, சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி என பல இவரது நினைவாக அமைக்கப்பட்டது.
ஒற்றுமைக்காக சிலை – இந்தியாவை ஒருங்கிணைத்த இரும்பு மனிதனை போற்றும் விதமாக இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்து இரும்பு பெறப்பட்டு அதனை உருக்கி உலகின் உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை 597அடி (182 மீட்டரில்) கட்டமைக்க 1000டன் இரும்பு, 70 ஆயிரம் டன் சிமென்ட் 1700 டன் வெங்கலம் நர்மதை நதியில், ராம்பேட் சிறுதீவில் அகண்ட பாரதம் அமைக்க விரும்பி பட்டேலை உலகுக்கு காட்டும் விதமாக அவரது 143வது பிறந்த நாளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 30 அக்டோம்பர் 2018ல் திறந்துவைத்தார்
நவீன காலத்தில் போட்டி, பொறாமை, சுயநலம், உயர்ந்தவன் என்ற அகங்காரம் கொண்டு நிகழும் பெரும்பான்மையான நாடுகள் மத்தியில் தற்பொழுது உலகின் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட கூட்டமைப்பான G20க்கு பாரதம் தலைமை பொறுப்பேற்று ‘ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ‘ என கருப்பொருள் அமைத்து அன்று பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைத்தது போல இன்று உலக அமைதியையும் வளமான உலகை ஒற்றுமையுடன் உயர சர்தாரின் புதல்வர்கள் தனது தலைமை பொறுப்பை 130 கோடி மக்களின் .மனமாய் நிகழ்ந்து உலகை ஓர் குடும்பமாக ஒற்றுமைப் படுத்த பாடுபட்டு வருகின்றனர்.
சர்தாரின் சரித்திரத்தை படித்துவிட்டு மட்டும் செல்லாமல்
சர்தார் போல உலக ஒற்றுமை என்றும் சரித்திரம் படைத்து செல்வோம்
பாரத அன்னையின் புதல்வர்களாய் நாமும்.
_ ஜெய் ஹிந்த்
_ நெல்லை. சூர்யா . S
Joint secretary of Manonmaniam Sundaranar University