Veer Abdul Hamind’s Sacrifices Inspire New Generations – Dr. Mohan Bhagwat Ji

VSK TN
    
 
     

தன் தாய் நாட்டிற்காகவும், பழம் பாரம்பரியத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்த பரம வீரர் அப்துல் ஹமீத் நம் அனைவருக்கும் முன்னுதாரணம் – டாக்டர் மோஹன் பாகவத் ஜி.

தாம்பூர், (காஜிபூர்) தேசிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர் சங்க சாலக் டாக்டர் மோஹன் பாகவத் ஜி, பரம்வீர் அப்துல் ஹமீத் ஜயந்தி விழாவில் தாம்பூரில் (காஜிபூர்) “என் தந்தை பரம்வீர்” (மேரே பாபா பரம்வீர்) என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னது: தன் தாய் நாட்டுக்காகவும், பழங்காலத்திலிருந்து பின் பற்றி வரும் கலாச்சாரத்திற்காகவும் தன் உயிரையே தியாகம் செய்த போர் வீரரான பரம்வீர் அப்துல் ஹமீத் நம் அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவர் வாழ்க்கையின் மேற்கோள் நம் அனைவரையும் ஒரு நூலில் கட்டுப்பட வைக்கிறது. எத்தனை ஆபத்தான சமயமானாலும் கூட சில விஷயங்கள் விரிவானதல்ல. ஆனால் அழியவில்லை. தக்க சமயத்தில் நம் இதயத்தில் வெளிப்படுகிறது. பரம்வீர் அப்துல் ஹமீத் ஜியின் பலி நமக்கு எப்போதும் நினைவிருக்கும். அவரது வாழ்க்கை தன் தாய் நாட்டிற்கு, தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நமக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஆகிறது.

 

சர் சங்க சாலக், கூடியிருக்கும் மக்களை வரவேற்று தேசிய வாழ்க்கையில் பரம் வீர் அப்துல் ஹமீதின் அர்ப்பணம், தேச பக்தி, தேசிய ஒற்றுமை மனப்பான்மையை நினைவுறுத்தி தன் வாழ்க்கையில், ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை ஒவ்வொரு வருடத்திலும், சீர்திருத்த வேண்டும். நாம் ஒரேயடியாக நல்லவர்கள் ஆக முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உத்தமர்களாக ஆக்கிக்கொள்ள முடியும். தியாகிகளின் சிதையின் மேல், ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடுவதற்கு ஒரு பலன் கிடைக்கும்.

 

மக்கள் தம் வாழ்நாள் முழுவதும், தம் தாய்நாட்டுக்காக பலியான பரம்வீர் அப்துல் ஹமீதை நினைவில் வைத்திருப்பர். தியாகியும் அமரராக வீற்றிருப்பார். அவரது தியாகமும், அரும்பெரும் செயல் ஆகும். வாழ்க்கை என்பது சுகம் அனுபவிப்பதற்காக வாழ்வது அல்ல. ஆனந்தப்படுவதற்காக அல்ல. வாழும் வாழ்க்கையில் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ்வுலகை சிருஷ்டித்த – படைத்தவனை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்வதுதான். ஆனால் இது கடுந்தவமாகும். இதில் யார் வெற்றி காண முடியும்? இரண்டு விதமான மக்கள் இருக்கிறார்கள். சிலர் சன்னியாசியாக மாறி சர்வகாலமும் நற்செயலில் ஈடுபடுகிறார்கள். தன் ஆத்மசாதனையில் மற்றும் மக்கள் சேவையிலும் செயல்படுவார்கள். மற்றவர்கள் போரில், உண்மைக்காகவும், நியாயத்திற்காகவும், தைரியத்துடன், தன் மார்பில் காயம்பட்டு, தன்னையே ஆத்மார்ப்பணம் செய்பவர்கள் ஆகிறார்கள்.

 

தன் தாய் நாட்டிற்காக பரமவீர் அப்துல் ஹமீத் கச்சப்போரில் செய்த வீர செயலே அவரை உயர்ந்த உத்தம அதிகாரியாக்கியது. ஆனால், அவரின் நினைவை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.. நினைவில் வைத்து நம் வாழ்க்கையையும் தன்னலமின்றி தேசத்திற்காகவும் ஈடுபடுத்த வேண்டும். எத்தனை நாளானாலும், எவ்வளவு வருஷங்கள் மேலும் யுகங்கள் வரை செல்கிறதோ, அவ்வளவு யுகங்கள் வரை தியாகி அமரராக வாழ்கிறார். ஏனென்றால், மனித வாழ்க்கையின் கற்பனையே இதுதான்.

 

டாக்டர் மோஹன் பாகவத் ஜி, மனிதனின் வளர்ச்சி மிருகங்களைப்போல் தன் சொந்த கவலை மட்டும் படுவதில்லை. அவன் எவ்வளவு அதிகமாக பெரும் மக்களின் கவலை கொள்கிறானோ அவ்வளவு உயர்ந்தவனாகிறான். தன் கவலை மட்டும் கொள்பவனை உயர்ந்தவன் என்று கூற முடியாது. பரம வீர் அப்துல் ஹமீத் போன்ற உதாரண புருஷர்கள் நம் முன்னே உதாரணமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். திடீரென்று நடக்காது. வீரர்கள் எல்லையில் போராடுகின்றனர். குண்டு வீசப்படுகிறது, காயப்படுத்துகிறது. அதனால் அவர்கள் இறந்தும் போகிறார்கள். அப்படியல்ல. அந்த குண்டு வீச்சில் எந்த மனிதன் முன் நிற்கிறானோ, அவன் முன் இரண்டேவிருப்பங்கள் இருக்கும். அவனால் ஓடி விட முடியும். ஆனால் அவன் ஓடுவதில்லை. அவன் சொல்வான்: எனக்கு எல்லை பாதுகாப்பு என்னும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. இவ்வளவு குண்டு வீச்சில் எந்த குண்டின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ !!! ஆனால் எனக்கு இங்கிருந்து ஓட வேண்டாம். உயிர் கொடுத்தும் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் இது என் தாய்நாடு. இதில் வாழும் அனைவரும் என் சகோதர சகோதரிகள். நான் அவர்களுக்காக வாழ்கிறேன். செத்தாலும் அவர்களுக்காக மடிவேன். எனக்காக வாழ மாட்டேன். எனக்காகவும் சாக மாட்டேன். இதுவே போர் வீரனின் மனது. இப்படியாக இருக்கிறது.

 

டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கூறுகிறார்:

பாரத சேனையின் படை வீரர்கள் தன் ஊதியத்திற்காக போராடுவதில்லை, தன் நாட்டிற்காகவே போராடுகிறார்கள். இதனாலேயே அவர்கள் உதாரணமாகிறார்கள். தேசத்திற்காகவே வாழ்ந்து, தேசத்திற்க்காகவே பலியாகிறார்கள். வாழ்க்கை நாம் பின்பற்றத்தகுந்த உதாரணமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் அவர்களை நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.

 

இதில், சர் சங்க் சாலக் டாக்டர். மோஹன் பாகவத் ஜி பரம்வீர் அப்துல் ஹமீது மற்றும் அவருடைய மனைவி ரசூலன் பீபியின் சிலைகளின் மேல் மாலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனை செய்து நமஸ்கரித்தார். பிறகு அவரது வாழ்க்கை அடங்கிய “என் தந்தை பரம்வீர்” (மேரே பாபா பரம்வீர்) என்னும் புத்தகத்தை வெளியிட்டார். டாக்டர். ஜைனுல் ஹசன் அவர்களுடன் கலந்துரையாடியதின் அடிப்படையில் டாக்டர். ராமச்சந்திரன் ஸ்ரீனிவாசன் புத்தகத்தை எழுதியுள்ளார். மேடையில் கேப்டன் மகசூத் தாஜிபுரி மற்றும் பரம்வீர் அப்துல் ஹமீதின் மூத்த மகன் ஜைனுல் ஹசனும் வீற்றிருந்தார்.

Next Post

Maveeran Alagumuthu Kone ( 1710-1759)

Thu Jul 11 , 2024
VSK TN      Tweet    மாவீரன் அழகுமுத்துக்கோன்  கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் […]