மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும். அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள். கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. குண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து, பெண்களை தங்கள் இடத்திற்கு தூக்கி செல்வார்கள். அந்த பெண்களை 3, 4 நாட்கள் அனுபவித்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள். புதிதாக திருமணமான பெண்களையும் விட்டு வைக்க மாட்டார்கள். . கணவனை பார்த்து, பெயருக்கு மட்டும் தான் நீ கணவன், ஆனால் நான் தான் கணவனாக இருப்பேன் என்று மிரட்டுவார்கள். போலீஸ் கூட புகாரை எடுப்பதில்லை. இந்த ஊரில் அவர்களை எதிர்த்து புகார் கொடுத்தால், எங்களை வேறு ஏதாவது பொய் வழக்கில் கைது செய்து விடுவார்கள்”.
ஹிந்து பெண்கள், முஸ்லீம் பெண்கள் பலர் பல மாதங்களாக இந்த கொடுமைகளை அனுபவித்துள்ளனர் ஒரு பக்கம் வெளியில் சொல்ல முடியாத அவமானம், மறுபுறம் சொன்னால் பொய் வழக்கில் சிறை, இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி தவித்து வந்தார்கள் ஊர் மக்கள். இனியும் பொறுக்க முடியாது, உயிரே போனாலும் போகட்டும் என்று முடிவுக்கு வந்து கடந்த வாரம் முதல் ஊர் மக்கள் வீதியில் திரண்டுள்ளார்கள்.
2021 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான அடுத்த 7 நாட்களில் மட்டும் மம்தாவின் திரிணமூல் காங்கிரசார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கினர், எதிர்க்கட்சியினர் வீடு, கடைகள் கொளுத்தப்பட்டன, எதிரிக்கட்சிகளுக்கு வாக்களித்த கிராமங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டன, ஆயிரக்கணக்கான மக்கள் ஜார்கண்ட், அசாம் மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். 5000க்கும் மேற்பட்ட பெண்கள் மாண்பங்கப்படுத்தப்பட்டதாக Call For Justice எனும் உண்மை கண்டறியும் குழு அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சந்தேஷ்காலி கிராமம் பற்றி தற்போது வந்துள்ள தகவல்கள் மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கும். இந்நேரத்தில், வெளிவந்துள்ளது 1 கிராமத்தில் நடந்துள்ள கொடுமை மட்டுமே, இது போன்று இன்னும் எத்தனை கிராமங்கள் இருக்குமோ என்ற அச்சமும் மறுபக்கம் ஏற்படுகிறது