பாரதம் தலை நிமிர்கிறது, டாக்டர் மன்மோகன் வைத்யா -1

12
VSK TN
    
 
     

பாரதம் கொரோனா தொற்றுடன் நடத்திய போரின் மத்தியில், லடாக்கில் சீன அத்துமீறலால்  கால்வனில் ஏற்பட்ட மோதலில் எல்லையைக் காக்கும் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஊடகங்களில் பரவலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் சீனாவுடனான இந்த ரத்தக்களறி மோதல் 1962 க்குப் பிறகு முதல் முறையாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாரத ராணுவத்தின் வீரம், வலிமை இவற்றையும் பாரதத்  தலைமையின் உறுதியையும் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதுபோன்ற கேள்விகளின் வரலாற்றை நாம் பார்த்தால், மத்திய அரசில் பாஜக வருவதைத் தடுக்கவும், நரேந்திர மோடியை தோற்கடிக்கவும் தங்களால் முடிந்தவரை முயன்றவர்கள் இவர்கள் என்பது ஞாபகம் வரும். நிகழ்கால பிரச்சினை உட்பட இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இவர்களின்  குறுகிய பார்வை, கவைக்குதவாத போக்கு, தலைமைத்திறன் இன்மை, தேசம் என்பது பற்றிய தெளிவின்மை இவையே காரணம்.

டோக்லாமிலும்  இப்போது கால்வனிலும் பாரத உயர்மட்ட தலைமை காட்டிய விடாமுயற்சி, தைரியம், கட்டுப்பாடு,  இதற்கு முன்னர் சீனாவிடம் காட்டியதில்லை.1962 ஆம் ஆண்டிற்குப் பிறகும் சீன அத்துமீறல் தொடர்ந்தது. ஆனால் அதற்கு வலுவான எதிர்ப்பு இதுவரை காட்டப்பட்டதில்லை.ராணுவத்தின் வீரம் மற்றும் பராக்ரமம் ஆகியவற்றுடன், தலைமையின் பங்களிப்பும்  சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1998 ஆம் ஆண்டின் வெற்றிகரமான போகரண் அணுசக்தி சோதனையின் போது இந்த உண்மை வெளிப்பட்டது, ஏனென்றால் அதிலும் விஞ்ஞானிகளின் திட உறுதியோடு தலைமையின் திட உறுதியும் முக்கியம். இந்திய விஞ்ஞானிகள் 1994 லேயே அணுசக்தி சோதனை நடத்தும் திறன் பெற்றிருந்தார்கள். ஆனால் சர்வதேச நிர்பந்தம் காரணமாக, அக்காலகட்ட உயர் தலைமை,  அன்றைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 1998 ல் காட்டிய தைரியத்தைக் காட்டவில்லை. அந்த வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, பாரத்த்தின், பாரத மக்களின்  நம்பகத்தன்மை உலகில் அதிகரித்தது. 2014 முதல், தேச விரோத, பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் பாரத அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றம் தென்படுகிறது. யூரி வான்வழித் தாக்குதல், பாலாகோட், டோக்லாம், கால்வான், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு வெற்றிகரமான எதிர்ப்பு – என இந்த அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அந்த மாற்றம் தெளிவாகிறது. இதுவரை புறக்கணிக்கப்பட்ட பாரத எல்லைகளில் உள்கட்டமைப்பும் கட்டுமானமும் வளர்ச்சி கண்டுள்ளது, முன்னதாக பாகிஸ்தான் பிடியிலும் இப்போது சீனாவின் பிடியிலும் உள்ல பாரதப் பிரதேசமான அக்சாய் சின்னை மீட்டெடுக்கும் உறுதியானது  துணிவான, தொலைநோக்குத் தலைமையின் அடையாளமாகும். சீனாவின் ஆத்திரத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். தாவது பாரதத்திற்குள்ளேயே  தேச விரோத நடவடிக்கைகளை ஆதரிக்கும் சில சக்திகள் இதனால்  சங்கடத்தில் நெளிகின்றன.

1962 ல் சீனாவுடனான போரில் பாரத ராணுவத்தின் வீரமும் தியாகமும் ஒப்பற்றவையாக இருந்தபோதிலும், நாம் தோற்கடிக்கப்பட்டோம். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. முதலாவதாக, அந்த நேரத்தில் பாரத உயர்மட்ட தலைமைக்குத்  தொலைநோக்குப் பார்வை இல்லை; இரண்டாவதாக, போருக்கு எந்த தயாரிப்பும் இல்லை. சீனாவின் விரிவாக்க இயல்பு குறித்து அறிந்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜியும் பல தொலைநோக்குத் தலைவர்களும் ’இண்தியா-சீனா சோதரர்கள்’ என்று கூறித் தழுவுவதால் சீனாவால் நாம் ஏமாற்றப்படலாம் என்று கோடிகாட்டியிருந்தனர். அந்த எச்சரிக்கையை அடியோடு புறக்கணித்ததன் மூலமும் எந்தவொரு ராணுவத் தயாரிப்பும் செய்யத் தவறியதாலும், சீனாவை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும், 1962 போரில் நாம் அவமானகரமான, சோகமான விளைவுகளை அனுபவிக்க நேர்ந்தது.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் பாரத ராணுவத்தை தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது, ஆனால் ராணுவத்தின் வலிமை மட்டும் போதாது; நாட்டின் தலைமைக்கு முதிர்ச்சியும் உறுதியும் மிக அவசியம்.

அண்மையில் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதில், 2013 டிசம்பர் 6, அன்று அப்போதைய ராணுவ அமைச்சர் ஸ்ரீ ஏ.கே. அந்தோணி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்: “பாரதத்தை விட உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனா மிகவும் சிறந்தது. அவர்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு பாரதத்தை விட சிறந்தது. …. எல்லையோரப் பகுதிகளை அபிவிருத்தி செய்வது சிறந்த பாதுகாப்பு அல்ல என்பது பல ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவின் கொள்கையாக இருந்தது. வளர்ச்சிபெற்ற  எல்லைகளை விட வளர்ச்சியடையாத எல்லைகள் பாதுகாப்பானவை. எனவே, பல ஆண்டுகளாக, எல்லைப் பகுதிகளில் சாலைகள் அல்லது விமானநிலையங்கள் அமைக்கப்படவில்லை. அதுவரை சீனா எல்லைப் பகுதிகளில் தனது உள்கட்டமைப்பை தொடர்ந்து உருவாக்கியது. எனவே, இதன் விளைவாக, அவை இப்போது நம்மை விஞ்சிவிட்டன. உள்கட்டமைப்பு அடிப்படையில், திறன் அடிப்படையில், எல்லைப் பகுதிகளில் அவை நமக்கு மிக மேம்பட்ட நிலையில் உள்ளன. இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் இது ஒரு வரலாற்று உண்மை.”

சுதந்திரத்திற்குப் பிறகே, பாரத வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை ஆகியவை தவறான திசையில் பயணித்தன. ராணுவக் கொள்கையின் நிலையை எடுத்துக்காட்டை மேலே கண்டோம். பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசுகையில், கிராமப்புற பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் பெருநகரங்களைச் சுற்றியே வருவதால், பாரத மக்களில் 70 சதவீதம் பேர் வாழும் கிராமங்கள் வளர்ச்சியடையாமல் இருந்தன. நல்ல கல்விக்காகவும், சுகாதார வசதிகளுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும், தொலைதூர நகரங்களுக்கு குடிபெயரவும் மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த கொள்கைகளின் கோர விளைவு கொரோனா தொற்றின் போது தலைதூக்கியது, வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் நகரத்தில் அந்நியப்பட்டதாக உணரத் தொடங்கியதால், கிடைத்த வண்டி வாகனங்களில் தங்கள் கிராமத்தை நோக்கிச் சென்றனர். இந்த கண்ணோட்டத்தில், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்தும், தங்கள் நிலத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்துமே கூட விலகிச் சென்றார்கள். பாரதத்தில் விவசாயத்திலிருந்துதான் பெரும்பாலான வேலைவாய்ப்பு வருகிறது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்தைய கொள்கைகள் காரணமாக, புறக்கணிக்கப்பட்டது விவசாயமும் விவசாயிகளும்தான்.

(நாளை நிறைவடையும்)

– டாக்டர் மன்மோகன் வைத்யா

சஹ சர் கார்யவாஹ்

ராஷ்ட்ரீய ஸ்யம்சேவக சங்கம்

Next Post

பாரதம் தலை நிமிர்கிறது, டாக்டர் மன்மோகன் வைத்யா -1

Fri Jul 10 , 2020
VSK TN      Tweet     வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தால் எப்போதும் அணி சேரா நாடு பற்றி பேச்சு இருந்தது. உலக அரங்கில் பாரதம் வலுவான இடம் பெறும் வரை, வியூக ரீதியாக அணி சேரா நாடு என்று பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது நமது வெளியுறவுக் கொள்கையின் நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது! ஏனெனில், அணி சேரா கொள்கை பேசும் இரு வல்லரசுகளின் தேசிய வாழ்க்கை, அவர்களின் கருத்தியல் […]