ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (2019) தொடங்கியது

VSK TN
    
 
     
3 நாள் (16 அக்டோபர் முதல் 18 அக்டோபர் 2019 வரை) ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (நிர்வாகிகள் அமர்வு) SOA, Campus-II, புவனேஷ்வரில் இன்று தொடங்கியது. பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் மற்றும் சர்கார்யவாஹ் சுரேஷ் (பையாஜி) ஜோஷி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவர். இந்த கலந்துரையாடலில் பாரதம் முழுவதிலும் உள்ள அகில் பாரத், க்ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் (சுமார் 400 பிரதிநிதிகள்) கலந்துக் கொள்வர். மார்ச் மாதம் நடக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபையில் ஒரு வருடாந்திர திட்டம் உருவாக்குவோம். ஆறு மாதங்களுக்கு பிறகு நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்தில் திட்டங்களின் விரிவாக்கம், கார்யகர்த்தர்களின் பயிற்சி மற்றும் அனுபவங்கள் போன்ற அமைப்பு ரீதியான விஷயங்கள் மட்டுமே இங்கு விவாதிக்கப்படுகின்றன என்று அகில் பாரதீய ப்ரசார் ப்ரமுக் ஸ்ரீ அருண்குமார் தெரிவித்தார். தற்போது 57411 ஷாகாக்கள், 18923 மிலன் (வாரந்திர கூடல்) மற்றும் 8112 சங்க மண்டலி ஆகியவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் திரு சுரேஷ் (பையாஜி) ஜோஷி தெரிவித்தார்.

Next Post

நாட்டில் ஆர் எஸ் எஸ் ன் பணிகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, டாக்டர் மன்மோகன் வைத்ய

Wed Oct 16 , 2019
VSK TN      Tweet     ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சஹ சர்கார்யவாஹ் டாக்டர் மன்மோகன் வைத்ய ஜி, சங்க ஸ்வயம் சேவகர்களின் கடின உழைப்பு, தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் சமூகத்தின் இணக்கத்தன்மை காரணமாக, சங்கத்தின் பணிகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன என்று கூறினார். குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் சங்கத்தில் சேர்கின்றனர். ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (நிர்வாகிகள் அமர்வு) SOA, Campus-II, புவனேஷ்வரில் நிர்வாகக் […]