டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளையின் தலைவர் திரு சுரேஷ் ரகுராமன் அவர்கள் கலந்து கொண்டு சமிதி ஆற்றி வரும் சேவைப் பணிகளை எடுத்துரைத்தார்.
பட்டியல் சமுதாய மக்களுக்காக சேவையாற்றி வருபவர்களுக்காக சமுதாய நல்லிணைக்கு விருதுகள் வழங்கப்பட்டன ஸ்ரீலஸ்ரீ சிவலோக தேசிக சுவாமிகள், தவத்திரு விமல் ஐயா சாமிகள், திரு லோகேஷ், திரு ஆர் முருகானந்தம், திரு. திருநாவுக்கரசு என்கின்ற மணிகண்டன், திரு ராஜேந்திர பிரசாத், திரு பூவரசன் ஆகியோருக்கு சமுதாய நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட்டன.