சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம்
பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் பாரத நாட்டின் எல்லா இடத்திலிருந்தும் பிரதிநிதித்துவம் இருந்தது.இந்தியா முழுவதிலும் அயோத்தியின் நிகழ்வு உணரப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு உணர்வு நமக்கு எப்பொழுதும் நிரந்தரமாக இருக்க வேண்டும் .ஒரு காலத்தில் நம் நாட்டில் ஜாதிகள் பல இருந்தன .அவை எதுவுமே பிறப்பால் அல்லாது செய்யும் தொழிலால் மட்டுமே அமைந்திருந்தது. இக்காலத்திலும் நாம் பார்ப்பது என்னவென்றால் ஒரு டாக்டரின் மகன் டாக்டராக விரும்புவதும் ஒரு வக்கீலின் மகன் வக்கீலாக ஆவதையுமே விரும்புகிறார்கள் .இந்த ஜாதி பிரிவினை முகலாயர்களின் படையெடுப்பின் போது நம்மைப் பெரிதளவு பாதுகாப்பதற்கு ஏதுவாக இருந்தது. காலப்போக்கில் இந்த ஜாதிப் பிரிவினைகள் நம் சமூக கேடாக மாறியது. அவ்வப்பொழுது நம் நாட்டில் பிறந்த மகான்களும் இந்த பிரிவினைவாதத்தை அழிக்க பலவிதமாக முயன்றார்கள். தீண்டாமையை ஒழிக்க முயற்சி செய்தார்கள். மோகன்ஜி மேலும் நம் உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை .ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாப்பாக வைத்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் . அதனால் நாம் அனைத்து சமூகத்தினரையும் பேணிக் காத்து நம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்துவமான இந்துத்துவத்தை போற்றுவோம். சமூக நீதிக்காக நாம் 2007 முதலே நம் சங்கத்தில் எந்த ஒரு ஜாதி பாகுபாடும் அல்லாது சமூக நல்லிணக்கத்துடன் செயல்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அங்கிருந்த தலைவர்களிடம் அவர் இந்துக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், அப்பொழுதுதான் அழகான சமூகம் உருவாகும் என்று வலியுறுத்தினார் . அனைத்து சாதியினரும் ஒன்று கூடி ஒரு முகமாக இந்த பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஒற்றுமையை நாம் நாட்டின் மூலை முடுக்கு வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். அங்கே வால்மீகி சமாஜத்தை சேர்ந்த பகவான் தாஸ், மகோர் சமூகத்தைச் சேர்ந்த மத்தி லால் மஹோர், பிரஜாபதி சமூகத்தைச் சார்ந்த ஆஷ்ரம் பிரஜாபதி, நகர் சமூக சமூகத்தைச்சேர்ந்த ராஜேந்திர நகர், ஸ்ரீவர்ஸ் சமூகத்தைச் சேர்ந்த மீதாதின் ஸ்ரீவாஸ், ராடோட் சமூகத்தைச் சார்ந்த ஷாம்லால் ராத்தோடு, பிராமண சமூகத்தைச் சார்ந்த சுரேஷ் சாஸ்திரி , மாஞ்சி சமூகத்தைச் சார்ந்த பிரமோத்மாஞ்சி ,வைசிய சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அணில் குப்தா ஜெயின் சமாஜத்தை சேர்ந்த மனோஜ் , ஸ்வர்ணாகர் சமூகத்தை சேர்ந்த மதன்லால் வர்மா, சிந்தி சமாஜத்தை சேர்ந்த பிரதாப் ராய், காயஸ்டா சமுதாயத்தை சார்ந்த தினேஷ் பட்னாக்கர் ஆகியோர் அங்கே கூடியிருந்தனர்.