VSK TN
விஜயதசமி திருநாளை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் வேலூர் விபாக் சேவகர்களுக்கான சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 13-2019 ஞாயிறு அன்று ஆம்பு+ரில் நடைபெற்றது. ஆர். எஸ். எஸ்- ன் 94 ஆவது ஆண்டு விழா, மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜெயந்தி விழா, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆவது நினைவு ஆண்டு, நேதாஜியின் சுதந்திர இந்திய பிரகடனத்தின் 75 ஆவது வெற்றி ஆண்டு, குருநானக் 550 ஆவது ஆண்டு ஆகியவைகளை மையப்படுத்தி ஐம்பெரும் விழாவாக சமுதாய நல்லிணக்க சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த அணிவகுப்பில் ஆம்பூர், வேலூர், வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 426 ஸ்வயம் சேவகர்களும் மேலும் பொதுக்கூட்டத்தில் 310 பொது மக்களும் மொத்தம் 736 பேர் கலந்து கொண்டனர்.
வாத்திய இசையுடன் கூடிய சீருடை அணிவகுப்பு ஊர்வலமானது சரியாக மாலை 4.15 மணிக்கு ஆம்பு+ர் பைபாஸ் சாலை வள்ளலார் மடம் அருகில் இருந்து சமூக ஆர்வளர் புலவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குணசீலன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். ஊர்வளம் பாவடித்தோப்பு பெருமாள் கோவில் தெரு எஸ். கே. ரோடு வழியாக பைபாஸ் சாலையை அடைந்தது பின் ராஜீவ் காந்தி சிலை வழியாக மீண்டும் வள்ளலார் மடம் அருகில் வந்தடைந்தது. இதனைத் தொடர்;;ந்து 5.45 மணிக்கு பொதுக்கூட்டம் துவங்கியது. துவக்கத்தில் சமுதாய சிந்தனையாளரும் தேசபக்தருமான தத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம் என்ற புத்தகத்தை ஆம்பு+ர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு. தீனதயாளன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை கரும்பு+ர் ஹிந்து கல்வி சங்கத்தின் முன்னால் தலைவர் திரு கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
பொதுக்கூட்டத்தின் துவக்கத்தில் சுவாமினி சுத்த வித்யானந்த ஸரஸ்வதி
அவர்கள் தனது ஆசியுரையில் ஆர்.எஸ்.எஸ் கட்டுபாடுக்கு பேர்போன இயக்கம் இதில் நானும் சேர்ந்து தேசப்பணியற்ற வேண்டும் என்று எண்ணியதுண்டு உங்களின் பணி சிறக்க மனமார்ந்த ஆசிகள் என்று கூறினார்கள். தலைமையுரையில் ஆம்பு+ர் பிரபல வழக்கறிஞரும் நோட்டரிபப்ளிக்குமான திரு. தேவராஜன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் தேசபக்தி மற்றும் கட்டுப்பாடு போன்ற பண்புகளை எடுத்துரைத்தார். திரு ஜெயவேல் விஸ்வகர்மா சங்கத்தின் தலைவர் அவர்கள் தனது முன்னிலை உரையில் ஆர்.எஸ்.எஸ் ஒப்பற்ற ஒரு தேசபக்தி இயக்கம் நானும் சிறுவயதில் பயிற்சி செய்ததுண்டு என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக ஆர்.எஸ்.எஸ் மாநில மக்கள் தொடர்பு அமைப்பாளர் திரு.இராம இராஜசேகர் அவர்கள் தனது சிறப்புரையில் 94 ஆண்டுகளாக தொடர்ந்து நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்றும் இதில் ஒரு விசித்திரம் என்ன வென்றால் உறுப்பினர் சேர்க்கை கிடையாது தேசபக்தி, தொண்டு, சேவை, இவைகளையே குறிக்கோளாகக் கொண்டு கட்டுப்பாடுடன் செயல்படும் அமைதியான இயக்கம் என்று குறிப்பிட்டார். சுனாமி பாதிப்புக்குள்ளான போது உடனடியாக ஓடோடி சென்று பிணங்களை அகற்றி சேவை செய்தது மட்டுமல்லாது வீடிழந்த அவர்களுக்கு 2450 வீடுகள் கட்டித்தந்தது ஆர்.எஸ்.எஸ் மேலும் சென்னை வெள்ளத்தின் போது 4500 ஸ்வயம் சேவகர்கள் நீந்தியும், தலையில் சுமந்தும் சென்று உணவு வழங்கியதை குறிப்பிட்டார் நிறைவாக ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரான இயக்கமல்ல கிருத்துவ முஸ்லீம்கள் கூட எங்களுடன் இனைந்து பாரத நாட்டின் உயர்வுக்காக பாடுபடலாம் என்றும் தேசத்துக்கு தீங்கு செய்தால் அவர்கள் இந்துவானாலும் வேறு எந்த மதத்தவராளும் ஆர்.எஸ்.எஸ் கண்டிக்கும் என்று தனது சிறப்புறையை நிறைவு செய்தார். சங்க பிரார்தனையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.