ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் வெளியிட்டு விழா நாடாளுமன்றத்தில் உள்ள GMC அரங்கத்தில் மார்ச் 1 2024 அன்று நடைபெற்றது. Man of the Millennia: Dr Hedgewar என்று தலைப்பிடப்பட்ட இந்த புத்தகத்தை டில்லியின் சுர்ச்சி ப்ரகாஷன் வெளியிட்டுள்ளது. மறைந்த டாக்டர் நானா ஹரி பால்கர் மராத்தியில் எழுதிய புத்தகத்தை மறைந்த டாக்டர் அணில் நேனே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆந்திர மாநில ஆளுநர் ஜஸ்டிஸ் (ஓய்வு)) S. அப்துல் நசீர் மற்றும் ஏசியாநெட் நியூஸ் தலைவர் திரு.ராஜேஷ் கல்ரா முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதை வெளியிட்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ் தத்தாத்ரேயா ஹொசபலே பேசும் போது, “ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஒரு முழுமையான தேசியவாதி. தேசப்பற்று என்பது அவருக்குள் இயற்கையாகவே இருந்தது, தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்கு அர்ப்பணித்தார். இன்றைய இளம் தலைமுறை, அவரது தேசிய கண்ணோட்டத்தில் இருந்தே ஊக்கம் பெறுகிறது இன்று உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகளை படித்து வருகின்றன. சங்கத்தை உள்ளே வந்து புரிந்துக் கொள்ளுங்கள், வெளியே இருந்து அல்ல என்று. உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை தொடருங்கள், எங்களை பிடிக்காது போனால், பின்னர் விலகுங்கள். சங்கத்தை புரிந்து கொள்ள மனம், அறிவு இரண்டும் முக்கியம், ஏனெனில் சங்க தொண்டர்கள் ‘நாடே முதன்மையானது’ எனும் சிந்தனையோடு வேலை செய்கிறார்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பற்றி பலரும் புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். டாக்டர் ஹெட்கேவார், சங்கத்தில் ‘நாம்’ என்ற உணர்வை விதைத்தார். அதன் மூலம் ஒரு குழுவை ஏற்படுத்தி சமுதாய முன்னேற்றம், தேசிய சுயகௌரவம் மற்றும் தனிமனித வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தினார். சங்கத்தை தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவார் சொன்னார் “நீங்கள் என்னிடம் ஏதாவது குறை கண்டுபிடித்தால், எனக்கு பதில் வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள், நான் அவருடன் அதே உற்சாகத்துடன் வேலை செய்வேன்” என்று. டாக்டர் ஹெட்கேவார் அமைதி, பொறுமை மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒரு மனிதர், சமுதாயத்தின் உணர்வுகளை அறிந்தவர் என்றார்.
ஆந்திர மாநில ஆளுநர் நீதிபதி (ஓய்வு) S. அப்துல் நசீர் பேசுகையில், சங்கம் மற்றும் அதன் துணை அமைப்புகளின் வேலையை பார்த்து மொத்த உலகமும் ஊக்கம் பெறுகிறது என்றார்.