RSS Sarsanghchalak Mohan Bhagwat Ji Dedicated Tribute Wall to Nation

VSK TN
    
 
     

 

 

 

ஜூலை 23 2024 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 1040 சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும், தியாகச் சுவர் திறப்பு விழாவில் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் ஜி பேசிய உரையின் சாராம்சம்

நாம் பாரதீயர்கள். பாரதம் மிகவும் தொன்மையான நாடு. .பழங்காலத்திலிருந்து இன்று வரை உயிரோட்டமான நாடு. . சீனாவை விட நமது தேசம் மிகவும் பழமையானது. உலகில் ரோமாபுரி, கிரேக்கம் போன்ற பல பேரரசுகள் தோன்றி மறைந்து மண்ணோடு மண்ணாகி இருக்கிறது. ஆனால் நமது பாரதம் நாகரிகம் இன்றும் அழிவில்லாமல் உயிரோடு இருக்கிறது. பல்வேறு தாக்குதல்களை எதிர் கொண்ட பின்பும் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

பிரயாகையில் மிகப்பெரிய ஒரு ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தை மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் டில்லி பாதுஷா வேரோடு அதை அகற்றிவிட்டு மீண்டும் அந்த மரம் முளைக்காதவாறு இரும்பை காய்ச்சி ஊற்றினார். இருப்பினும் அந்த மரம் மீண்டும் அங்கே வளர்ந்தது. மக்கள் வழிபட்டனர். நமது பண்பாட்டை தகர்க்க நினைத்தாலும் மீண்டும் உயிர்பெறும். சுற்றுச்சூழல், நதி, மலை, விலங்குகள் என அனைத்தையும் வணங்கும் பண்பாடு நம்முடையது . ஆதியில் இருந்து இன்று வரை அனைத்தையும் நமதென்று கருதி, உலகமே ஒரு குடும்பமாக நினைக்கும் எண்ணம் நமதே .

வேற்றுமையில் ஒற்றுமை என்பதல்ல ஆனால் இங்கு வேற்றுமையே ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறது. மொழி , பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் பல இருந்த போதும் ஒன்றிணைந்து போராடி, ரத்தம் சிந்தி, நாம் வாழ்ந்து உயர்நிலையை அடைந்துள்ளோம்.

இந்த பண்பாட்டை காப்பாற்றுவதற்காக நம்முடைய முன்னோர்களின் ரத்தம் தோய்ந்த தியாகம் முக்கியமானதாக இருக்கிறது. முன்பு ஒரு சில குடும்பங்களில் ஐந்து தலைமுறைகள் ஒன்றாக வாழ்வதை கண்டிருக்கிறோம், 6 தலைமுறைகள் கூட சில வீடுகளில் இருந்தன. நமது பொறுப்பு, அடுத்த 7 – 14 தலைமுறைகளுக்கு இந்த விஷயத்தை எடுத்து செல்ல வேண்டும். பாரதத்தின் ஆக்கிரமிப்பையும் , போராட்டத்தையும் இன்றைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் என்றும் அடிமையாகவில்லை, ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிக்கொண்டு தான் இருந்தோம். அவர்களை விரட்டும் வரை போராடினோம்.

இதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மக்கள் சுதந்திரத்திற்கு போராடினார்கள். நாம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்துள்ளோம். நாம் உயர்வு தாழ்வின்றி பாரதத்தை உருவாக்கியுள்ளோம். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் பாரதம் தனக்காக வாழாது உலகத்திற்க்காக வாழ்ந்தது. தனக்கின்றி நமக்காக வாழ்கிறது. வடக்கு – தெற்கு, கிழக்கு – மேற்கு என எல்லா இடங்களிலும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இதை நாம் வரும் தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

நம்முடைய சுயநலத்தை அகற்றி எனக்காக அல்ல நமக்காக என்ற எண்ணத்துடன் நாம் வேலை செய்ய வேண்டும், தியாக சுவரை திறந்திருக்கிறோம். இது பராசக்தி தவம் செய்த இடம் . தேவி பராசக்தியின் அருளால் நல்ல துவக்கம் வந்திருக்கிறது. விவேகானந்தர் தவம் செய்த இத்தலத்தினுள் இன்றிலிருந்து சக்கரா பௌண்டேஷன் ஆரம்பிக்க கூடிய எல்லா இடங்களிலும் சங்கம் உறுதுணையாக இருக்கும், பாரதம் உலகத்தில் விஸ்வ குருவாக நாம் அனைவரும் வேலை செய்ய வேண்டும். அதற்கு பராசக்தி நமக்கு ஆசி அளிக்க வேண்டும் இந்த இந்த துவக்கம் ஒரு நல்ல துவக்கமாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

 

 

                                                                                                       

Next Post

RSS Tamilnadu demands unconditional apology from Dindigul MP

Wed Jul 24 , 2024
VSK TN      Tweet    Dindigul Constituency MP Sachithanandam began to spread slander that RSS is the movement that killed Mahatma Gandhi. Reacting to his speech, RSS has demanded apology from him. In a press note released by Shri Sriram, Zonal Head, RSS Media wing has stated, “The Rashtriya Swayamsevak Sangh (RSS) has been […]