சங்கத்தின் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவது
சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் முதல் நாளில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பாரதத்தை மையமாகக் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டது என்றும், அதன் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாய் மாற்றுவது என்றும் கூறினார்.
சங்க பணிக்கான உத்வேகம் சங்க பிரார்த்தனையின் இறுதியில் கூறும் “பாரத் மாதா கி ஜெய்” என்கிற மந்திரத்தில் உள்ளது. சங்கத்தின் செயல்முறை மெதுவானதாகவும் நீண்டதாகவும் உள்ளது ஆகவே இன்றும் நிரந்தரமாக தொடர்கிறது. சங்கம் ஹிந்து என்ற சொல்லை பயன்படுத்துகிறது. அதன் உட்பொருள் “வசுதைவ குடும்பகம்” என்பதாகும் என்று அவர் கூறினார். இந்த உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே, கிராமம், சமுதாயம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டையும் சங்கம் தன்னுடையது என்ற நோக்கில் பார்க்கிறது. சங்கப் பணிகள் ஸ்வயம்சேவகர்களால் முழுமையாக இயக்கப்படுகின்றன. கார்யகர்தர்கள் புதிய கார்யகர்த்தர்களை உருவாக்குகிறார்கள்.
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் ‘100 -ஆண்டு சங்கப் பயணம் – புதிய பரிமாணம்’ என்ற தலைப்பில் மூன்று நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மோகன் பாகவத்ஜி கூறியது – சங்கத்தைப் பற்றிய உண்மையான மற்றும் சரியான தகவல்கள் சமுதாயத்தை சென்றடைய வேண்டும் என்று சங்கம் விரும்புகிறது. 2018 ஆம் ஆண்டிலும் இதே போன்றதொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சங்கத்தைப் பற்றிய சரியான தோற்றம் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களை சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில், இந்த முறை நான்கு இடங்களில் இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறியதாவது, “ராஷ்ட்ரம் என்பதன் பொருள், ஆட்சி அதிகாரத்தில் இல்லை. நாம் அடிமைப் பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் ராஷ்ட்ரம் இருந்தது. ஆங்கிலத்தில் கூறப்படும் Nation என்கிற பதம் ராஜ்ஜியம் என்பதற்கு இணையான சொல்லாகும். ஆனால் நாம் கூறும் பாரத ராஷ்ட்ரம் என்பது ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடையது அல்ல.
சுதந்திர போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் எழுந்த சிந்தனைகள், “1857ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் அது ஒரு புதிய எழுச்சியைத் தந்தது” என்று கூறின. கைப்பிடி அளவே உள்ள அந்நியர்கள் எப்படி நம்மை தோல்வி அடைய வைத்தனர் என்ற கருத்தும் வலுவடைந்தது. பாரதீயர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்கிற கருத்தும் முன் வைக்கப் பட்டது. இந்த கருத்தின் அடிப்படையிலேயே காங்கிரஸ் இயக்கம் துவங்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, சித்தாந்த ரீதியிலான கருத்துக்களை முன் வைப்பதில் அது தவறியது. இதை ஒரு குற்றச்சாட்டாக கூறவில்லை, ஆனால் உண்மை இதுதான். ஒரு சாரார், சமுதாயத்தில் உள்ள தீமைகளை களைவதில் முனைந்தனர். மற்றொரு சாரார், தேசத்தின் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களும் ஸ்வாமி விவேகானந்தர் அவர்களும் இந்த சிந்தனையை முன்னெடுத்துச் சென்றனர்.
சமுதாயத்திலுள்ள தேவையற்ற பண்புகளை களையாமல் செய்யும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது என்று சங்கத்தை தோற்றுவித்த டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் போன்ற பிற மஹா புருஷர்கள் நினைத்தனர். சமுதாயத்தில் உள்ள இந்த குறைகளே, நாம் மீண்டும் மீண்டும் அடிமைப் பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம். இந்தக் குறைகளைக் களைய வேண்டும் என்று முடிவெடுத்த டாக்டர் ஹெட்கேவார், 1925ம் ஆண்டு சங்கத்தைத் துவக்கினார். இதன் மூலம், முழு ஹிந்து சமுதாயத்தையும் ஒற்றுமைப் படுத்தும் இலட்சியத்தை முன் வைத்தார்.
ஹிந்து என்ற சொல்லின் பொருளை தெளிவாக விளக்கும் விதமாக டாக்டர்ஜி கூறியது – “ஹிந்து என்ற சொல் மத ரீதியானது அல்ல. இந்த நாட்டின் சுக துக்கத்தில் பங்கேற்கும் பொறுப்பு”. இந்தப் பெயர் மற்றவர்களால் வழங்கப்பட்டது, ஆனால் நாம் எப்போதும் நம்மை ஒரு மானுடவியல் கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறோம். மனிதர்கள், மனித குலம் மற்றும் படைப்பு ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் தாக்கம் ஏற்படுத்துபவை என்றும் நாம் நம்புகிறோம். ஹிந்து என்றால் அனைத்தையும் உள்ளடக்கியது என்று பொருள். இதற்கு வரம்புகள் இல்லை. இதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஹிந்துக்கள். அனைவரும் அவரவர் பாதையில் செல்ல வேண்டும், யாரும் யாரையும் மாற்ற விரும்பக் கூடாது. மற்றவர்களுடைய நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் அதை அவமதிக்கக் கூடாது என்றும் நினைப்பவன் ஹிந்து. முழு ஹிந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஹிந்து என்று கூறினால், மற்றவர்களுக்கு எதிரானவர்கள் என்று பொருள் கிடையாது. ஹிந்து என்ற சொல் “அனைத்தையும் உள்ளடக்கியவர்” என்பதே.
பாரதத்தின் இயல்பான சுபாவம் அனைவரையும் அரவணைப்பதே தவிர போராடுவது கிடையாது. பாரதத்தின் ஒற்றுமையின் ரகசியம் அதன் பூகோளம், வளங்கள் மற்றும் சுய பரிசோதனை ஆகியவற்றின் வழி முறையில் உள்ளது. நாம் உண்மையை வெளியே தேடுவதில்லை. நமக்குள்ளயே தேடுகிறோம். இந்தக் கோணம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடமே “அனைவருக்குள் இருப்பது ஒரு பரம்பொருளே. அந்தப் பரம்பொருள் வெவ்வேறு ரூபத்தில் தெரிகிறது.” இதனால் தான் பாரதத் தாயையும் நமது முன்னோர்களையும் நாம் போற்றுகிறோம்.
பாரத மாதாவையும் முன்னோர்களையும் வழிபடுபவர்கள் உண்மையான ஹிந்துக்கள் என்று மோகன் பாகவத்ஜி கூறினார். சிலர் தங்களை ஹிந்துக்கள் என்றும், பாரதீயர்கள் என்றும், சனாதனிகள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். சொற்கள் மாறுபடலாம். ஆனால் அதன் பின்னே ஒளிந்திருக்கும் பக்தி மற்றும் சிரத்தை ஒன்று தான். பாரத பாரம்பரியம் மற்றும் மரபணுக்கள் (DNA) அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையே பாரதத்தின் அடையாளமாகும். முதலில் தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளாதவர்களும் இன்று தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். வாழ்க்கையின் தரம் உயர உயர, அவர்கள் தங்கள் வேர்களை நோக்கி வருகிறார்கள். நீங்கள் உங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளுங்கள் என்று நாம் கூறுவதில்லை. நீங்கள் ஹிந்துக்கள் தான் என்று நாம் அவர்களிடம் கூறுகிறோம். இந்தச் சொற்களின் பின் எந்த உள்ளர்த்தமும் இல்லை ஆனால் பொருள் பொதிந்து கிடக்கிறது. பாரத மாதா மீது பக்தியும் நம் முன்னோர்களின் மீது மரியாதையும் இந்த பொருளில் உள்ளது. 40,000 ஆண்டுகளாக பாரதீயர்களின் மரபணுக்கள் (DNA) ஒன்றாகவே இருக்கிறது. தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். பின்னர் தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக் கொள்ளாதவர்களும் ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்ள துவங்குவர். ஏதோ காரணங்களினால் மறந்து விட்டவர்கள் கூட நினைவு படுத்திக் கொள்வார்கள். இதன் மூலம் நாம் ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைப்போம். நாம் ஹிந்து ராஷ்ட்ரம் என்று கூறும் பொழுது யாரையும் விட்டு விடப் போவதில்லை. சங்கம் யாருக்கு எதிராகவும், எதிர் வினையாகவும் தோன்றவில்லை. ஹிந்து ராஷ்டிரத்திற்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
சங்கத்தின் செயல்முறையைப் பற்றி கூறும் பொழுது, மோகன் பாகவத்ஜி மேலும் கூறியதாவது – சமுதாய மேம்பாட்டிற்காக சங்கம் இரண்டு பாதைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. முதலாவது – தனி மனிதர்களை மேம்படுத்துவது. இரண்டாவது – அவர்கள் மூலம் சமுதாயதில் மாற்றம் ஏற்படுத்துவது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஒரு இயக்கமாகும். இயக்கத்தின் பணி, தனி மனித மேம்பாடு. சங்க ஸ்வயம் சேவகர்கள் பல்வேறு விவித ஷேத்திரத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சங்கம் அவர்களை கட்டுப்படுத்தாது. சங்கத்திற்கு எதிர்ப்பு வந்தது. புறக்கணிப்பும் செய்யப்பட்டது. ஆனாலும் சங்கம் சமுதாயத்தை தனதாகவே பார்த்தது.
தனி மனித அர்பணிப்பின் மூலம் சங்கம் முன்னேறுகிறது
சங்கத்தின் சிறப்பு என்னவென்றால், அது வெளியில் இருந்து கிடைக்கும் பலத்தின் ஆதாரத்தில் அல்ல, மாறாக ஸ்வயம் சேவகர்களின் அர்ப்பணிப்பின் மூலமே முன்னேறிக் கொண்டிருக்கிறது. குரு தக்ஷிணை என்பது சங்கத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். குரு தக்ஷிணையின் மூலம், ஸ்வயம் சேவகர்கள் தங்களின் நம்பிக்கையையும் உறுதியையும் தெரிவிக்கிறார்கள். இந்த வழிமுறை காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் எண்ணம், பண்புப்பதிவு மற்றும் நெறிமுறைகள் சீர்படும் என்று எண்ணுகிறோம். இந்த ரீதியிலேயே நாம் ஸ்வயம் சேவகர்களைப் பற்றி சிந்திக்கிறோம். ஸ்வயம் சேவகர்கள் இயக்கத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். நாம் அனைவரும் இணைந்து பாரத சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்.
இந்த நிகழ்ச்சியின் போது சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுச் செயலாளர்) திரு தத்தாத்ரேய ஹொசபலே, உத்தர ஷேத்ர சங்கசாலக் திரு பவன் ஜிண்டால் மற்றும் டெல்லி பிராந்த சங்கசாலக் டாக்டர் அனில் அகர்வால் ஆகியோர் மேடையில் அமர்ந்து இருந்தனர். இந்த மூன்று நாள் நிகழ்வின் முதல் நாளில், ஓய்வு பெட்ரா நீதிபதிகள், முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகள், முன்னாள் அரசுத் துறை அதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், விளையாட்டு மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

