*பழங்குடியினர் பகுதிக்கு புதிய இலவச நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்*
*விஸ்தார்- பிரீத்தம் – சேவாபாரதி இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி*
சேவாபாரதி தமிழ்நாடு கடந்த 25 ஆண்டுகளாக கிராமப்புற, நகர்ப்புற மற்றும் கடலோர பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்களை முன்னேற்றுவதற்காக கல்வி, மருத்துவம், சுயசார்பு, சமூக நலன் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளில் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு முக்கிய பகுதியாக இலவச நடமாடும் மருத்துவ சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இலவச நடமாடும் மருத்துவ ஊர்திகளும் தினமும் 2 முகாம்கள், வாரத்திற்கு 10 முகாம்கள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். இதுவரை வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு ஆகிய ஐந்து பகுதிகளில் நடமாடும் மருத்துவ ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன.
இன்று. சேவாபாரதி தமிழ்நாடு தனது ஆறாவது நடமாடும் மருத்துவ சேவையை தர்மபுரி மாவட்டம், ஹோகெனக்கல் பழங்குடியினர் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்த புதிய நடமாடும் மருத்துவ ஊர்தி, விஸ்தார் பைனான்ஸ், சமர்ப்பகா சேவா டிரஸ்ட் (பெங்களூர்) ஆகிய அமைப்புகளின் நிதி உதவியுடன், ப்ரீத்தம் மருத்துவமனை மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இந்த துவக்க நிகழ்ச்சியில், ராஷ்ட்ரீய சேவா பாரதி அமைப்பின் இணை பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய, ஸ்ரீ விஜய் பிராணிக் அவர்கள் தலைமையில், ஆர். எஸ். எஸ். சேலம் கோட்ட தலைவர் மதிப்பிற்குரிய ஸ்ரீ சந்திரசேகர் அவர்கள் சிறப்புரை ஆற்ற, அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் பூஜ்ய. ஸ்ரீ ராமானந்த சுவாமிகள், டி. என்.ஜி குரூப் ஆஃப் கம்பெனி சேர்மன், ஸ்ரீ டி.சி. இளங்கோவன், சேவாபாரதி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர், ஸ்ரீ நிர்மல் குமார், சேவாபாரதி தமிழ்நாடு மாநில துணை தலைவர், ஸ்ரீ விவேகானந்தன், விஸ்தார் பைனான்ஸ், பிசினஸ் ஹெட், ஸ்ரீ கஜேந்திரன், சமர்ப்பகா சேவா டிரஸ்ட், ப்ரீத்தம் மருத்துவமனை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு இலவச நடமாடும் மருத்துவ ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த புதிய இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் ஹோகெனக்கல் மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் பிற கிராமப்புற மக்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.