மங்கள் பாண்டே கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் 1827ல் ஜுலை 19ஆம் தேதி மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை திவாகர் பாண்டே ஒரு விவசாயி.  நாக்வா கிராம மக்கள் இன்றும் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேவயே குறிப்பிடுவர். மிக தீவிரமான ஹிந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் சிப்பாயாக இணைந்தார். அக்கம்பெனியின் 34வது பிரிவில் […]

பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் செய்த […]

  பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா நட்சத்திரங்களின் […]

பாரதத் தீபகற்பத்தைப் பொருத்தவரை பல ஆயிரம் ஆண்டுகளாக பல போர்கள் நடந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. பலப்பல அரசுகள் அவர்களின் ஆக்கிரமிப்பு வெறி, வீரத்தை நிலைநாட்டுதல் போன்ற காரணங்களுக்காக எப்பொழுதுமே போர்கள் இங்கே நடந்துகொண்டேதான் இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மொகலாயர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்திய காலகட்டங்களில் கூட தென்னிந்திய மன்னர்கள் தங்களுக்குள் நித்தம் சண்டையிட்டு மடிந்தனரே தவிர முதலில் கொடூரமான அந்நியனை, நமது மண்ணை, நமது சமய நம்பிக்கைகளை […]

எஸ் எஸ் விஸ்வநாததாஸ் தனது நாடகங்கள் மூலமாக சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர் (1886- 1940) தமிழ் நாடகக் கலையின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஈடுபட்ட கலைஞர்களுள் முதன்மையானவர் என்கிற பெருமை விஸ்வநாத தாஸ் அவர்களையே சாரும். 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி செல்வாக்கான மருத்துவர் குடும்பத்தில் பிறந்த விஸ்வநாததாஸ் நாடகக்கலையின் தந்தை என அறியப்பட்ட சுவாமி சங்கரதாஸ் அவர்களிடம் நாடகக்கலையை பயில்வதற்காக அவரது […]

சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867ல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர். மதுரை நான்காம் தமிழ்சங்கம் கண்டவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார் தேவர். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். இசைத்தமிழ் மீது மிகுந்த […]

  “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல்,   பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்…   நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் […]

Sarojini Devi was born on the 13th of February in 1879 at Hyderabad. Sarojini Naidu belonged to a Bengali family. Sarojini Naidu is the author of the poetry collections – ‘The Golden Threshold’, ‘The Bird of Time’, ‘The Broken Wing’ and ‘The Feather of the Dawn’. During the World War […]