சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867ல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர். மதுரை நான்காம் தமிழ்சங்கம் கண்டவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார் தேவர். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். இசைத்தமிழ் மீது மிகுந்த […]