சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1897-ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி வேதாரண்யத்தில் அப்பாகுட்டி பிள்ளைக்கும், தங்கம்மாள் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை. இவரது மூதாதையர் தாயுமானவர் வழிவந்தவர் ஆகையால் சைவத்தையும், தெய்வபக்தியையும், தமிழையும் ஊட்டி அறநெறி வழுவாது வளர்த்தனர் பிள்ளையை. திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர், நாகைப்பட்டினத்தில் உயர்கல்வி கற்றார். பிள்ளையிடம் பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததால், தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், […]