பாரதமே பல துண்டாய் பிரிந்து கிடந்த காலத்திலே சுதந்திரம் என்ற ஒன்றை நோக்கமாக கொண்டு பரந்து விரிந்து கிடந்த பாரதம் ஒன்றிணைந்து சுதந்திர போரில் வெற்றி கொள்ளும் தருவாயில் எதிரிகளின் சூழ்ச்சிகளும் துரோகிகளின் சுயரூபமும் சுகந்திர பாரதம் காண நேரிட்டது. சுதந்திர பாரத தேசம் இந்தியா , பாக்கிஸ்தான் என இந்துகளுக்கு என்றும் இஸ்லாமியர்களுக்கு என்றும் பிரிக்கப்பட்டது. இந்தியா என்ற நாடு பிரிக்கப்பட்ட தருவாயில் 565 சமஸ்தானமாக சிதறி இருந்தது. […]