வள்ளலாரை புரிந்துகொள்ள மிகபெரிய ஞானம் வேண்டும், தமிழ் தமிழ் உணர்வு என ஒன்றால் மட்டும் அதை புரிந்துகொள்ள முடியாது. இந்துமதம் எனும் சனாதான தர்மத்தின் அடிப்படை மாண்பு அன்பு, அன்பு ஒன்றே தெய்வீகம், அன்பு ஒன்றே இறைவன் என்பதுதான் அதன் அடிப்படை நாதம்.அதனால் அது வகுத்த வாழ்க்கை முறைகளெல்லாம் பிறர்க்கு உதவுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் பசி போக்குதல் என்பதிலேதான் இருந்தது. இந்த வாழ்க்கை முறையினை பின்பற்றத்தான் ஏகபட்ட […]
VALLALAR JOTHI
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் என்று அழைக்கப்படும் திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகான்களுள் முதன்மையான ஒருவராகக் கருதலாம். மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் ராமய்யா பிள்ளை எனும் கருணீகர் மரபிலே வந்த ஒரு தமிழ் புலவர். அவர் திண்ணை பள்ளிக்கூடம் நடத்தி பிழைப்பை நடத்தினார். அவரின் துரதிர்ஷ்டம் அவருக்கு ஐந்து முறை திருமணம் ஆகி ஐந்து மனைவிமார்களும் மனம் முடிந்த சிறு காலத்திலேயே மரணம் அடைந்துவிட்டனர். ஆறாம் […]
கடையெழு வள்ளல்களை அரசர்களாக நாம் படித்துள்ளோம்… ஆனால் கையிலெதும் இல்லாமல், காண்பவர்களிடமெல்லாம் கையேந்தி, ஒரு வருடம், இரு வருடமல்ல நூற்றியைம்பத்தாறு ஆண்டுகளாக அணையாமல் அடுப்பெரிந்து, மக்களின் வயிறு பசியால் எரியாமல் உணவளித்துக் கொண்டிருக்கும் வள்ளலாரைப் பற்றிக் காண்போமா! வடலூரில் 1867ஆம் ஆண்டு அவர் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் ஒருநாள் கூட விடுபடாத அன்னதானம், அவரது ஆத்மசக்திக்கு சான்றாய் திகழ்கிறது. ஆம்! அதனால் தான் […]
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அதோ அறிவும் அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார் என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் […]
இராமலிங்க சுவாமிகள் எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் அவர். சீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார் சுவாமிகள். இந்த நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று தாங்களே சொல்லிக் கொள்ளும் பெரியவர்கள் போல் அல்லாமல் உண்மையான சமூக சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர்..இறைவன் ஒருவனே அவன் […]