அந்த 15 நாட்கள் – சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் -4 (Those 15 days)

55
VSK TN
    
 
     
அந்த 15 நாட்கள்-4 ஆக 1947
பிரஷாந்த் போலெ 
இன்று ஆகஸ்டு 4 – திங்கட்கிழமை.
டில்லியில் வைசிராய் மவுண்ட்பேட்டனின் தினசரி அலுவல்கள், இன்று சிறிது சீக்கிரமே தொடங்கிவிட்டன. டில்லியில் சூழ்நிலை இறுக்கமாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்து இருண்ட வானம் ஒரு ஏமாற்றமும் அமைதியின்மையும் சேர்ந்த மனநிலையை பிரதிபலித்தது. எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விடுபட மௌண்ட்பேட்டனுக்கு இன்னும் ௧௧ தினங்களே இருந்தன. அதன்பிறகும் கூட ‘கவர்னர் ஜெனரல்’ பொறுப்பில் இங்கேயே இருப்பவராக இருந்தாலும் கூட 15 ஆகஸ்டு முதல் முழுப்பொறுப்பும் பாரதத்தின் தலைவர்களுக்கே.
இருந்தாலும் 11 நாட்கள் 11 இரவுகள் மவுண்ட்பேட்டனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதற்குள் ஏற்படும் நன்மை – தீமை, புகழ் – பழி அனைத்தும் அவரையே அதாவது பிரிட்டிஷாரையே சார்ந்ததல்லவா? அதற்குண்டான பெரிய பொறுப்பும் அதிக கவலைகளும்…
காலையின் முதல் சந்திப்பு பலூசிஸ்தான் பிரதேசத்தைச் சேர்நதவர்களுடன். ஈரான் எல்லையை ஒட்டிய, முஸ்லிம் கள்நிறைந்த பலூச் பகுதி பாகிஸ்தானுடன்தான் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பசூல் மக்கள் மொழி, பண்பாடு, வாழ்வியல் நீதியாகவும் மனோரீதியாகவும் பாகிஸ்தானுக்கு, பஞ்சாப் – சிந்து மக்களுடனே ஒத்துப் போகவில்லை. அவர்களுடைய வாழ்ககை தனிவிதமாக இருந்தது. பலூச் பாஷையும் வேறாக இருந்தது. முதலிலோ, முடிவிலோ பாகிஸ்தானுடன் சேர அவர்கள் ஒப்புக் கொள்ளவேயில்லை.
இதற்கிடையில் ஈரானுடன் சேர்ந்து விடலாம் என ஒருசாரரும், பாரதத்துடன் சேரலாம் என ஒரு சாரரும் கருத்து கொண்டிருந்தேன். ஆனால் பலூசிஸ்தான் “சன்னி’’ முஸ்லிம்கள் பிரதேசம். ஈரான் ஷியா முஸ்லிம்களைக் கொண்ட நாடு. அதனால் ஈரானுடன் சேர முடியவில்லை. பூகோள ரீதியான அமைப்பினால் பாரதத்துடனும் சேர்வது கடினமாக இருந்தது. ஆக இரண்டே வாய்ப்புதான். ஒன்று பாகிஸ்தானுடன் சேருவது, அல்லது தனி சுதந்திர நாடாக இருப்பது. இன்று மவுண்ட்பேட்டன் இதற்கான ஆலோசனைக்குத்தான் தயாராக இருந்தார். அந்த சந்திப்பில் பலூசிஸ்தானின் “Khan of Kalath’’ எனப்படும் மீர் அகமது யார்கான் மற்றும் முகமது அலி ஜின்னா இருந்தனர். ஏழாம்தேதி அன்று கராச்சி செல்லவேண்டியிருப்பதால் இன்று (4 ஆக) இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பின்போது மீர் அகமது யார்கானுக்கு உருவாகப்போகும் பாகிஸ்தான் குறித்த பலப்பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன. ஆனால் மவுண்ட் பேட்டன் பலூச் பகுதி பாகிஸ்தானுடன் சேருவதையே விரும்பினார். ஏனென்றால் சிறிச சிறிச சுதந்திர நாடாக இதற்கிடையேயான சுதந்திர அறிவிப்பையோ, ஆட்சி மாற்ற ஒப்பந்தத்தையோ பரிமாற்றம் செய்வதை “தேவையற்ற சுமை’’ என்றே அவர் கருதினார். இன்னமும் அழுத்தமாகவும் நாசுக்காகவும் பாகிஸ்தானுடனே சேரும்படி வலியுறுத்தினார். இறுதியில் மீர் அகமது சம்மதிப்பது போல் தோன்றினாலும், தன் இறுதி முடிவை அவர் அறிவிக்கத்தயாராகினார். இப்படி எந்த முடிவும் எட்டப்படாமலேயே அந்த சந்திப்பு முடிந்தது.
அதே நேரம் அங்கே பஞ்சாபின் லாயல்பூர் மாவட்டத்தில் பயங்கராவதம் தன் முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது. லாயல்பூர் விளைச்சல் விசாயம் நிறைந்த பூமி எனவே மக்கள் உறுதியாகவே இருந்தனர். 90% சீக்கியர் மற்றும் ஹிந்துக்களே இருந்தனர். கோதுமை, சணல், கரும்பு விகாச்சலால் விவசாயம், சந்தை, தொழில்கள் ஆகியன ஒன்றாகவே நடந்து வந்தன. பிரதேசத்தின் 85% வருமானம் இவற்றால் தான், அளித்தது பெரும்பான்மை ஹிந்துக்கள் சீக்கியர்கள்.
இந்தச்சூழ்நிலையில்தான் இன்று (4 ஆகஸ்டு 1947) ‘‘முஸ்லிம் நேஷனல்கார்டு’’ இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் 15 ஆகஸ்டுக்கு முன்பே இந்தப்பகுதி முழுவதிலும் உள்ள ஹிந்து – சீக்கிய வியாபாரிகளை எப்படி அடித்து விரட்டுவது, அவர்களின் சொத்து நிலங்களை எப்படிச் சூறையாடிக் கைப்பவது என்பது பற்றி நீண்ட விவாதம் நடந்து கொண்டிருந்தது. நடத்தியது 5% கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள். அதில் கலந்து கொண்ட லாகூரின் முஸ்லிம்கள் கூறியது – நாம் செய்யக்கூடாது ஒன்று உண்டு. அவர்களின் பெண்களைக் கவர்நது வந்து கொல்வோம். இரவில் பெண்களைக் கடத்துவோம். நடு இரவில் தொழிற்சாலைகள் மீதும் அதன் முதலாளிகள் மீதும் தாக்குதல் நடத்துவோம்’’
“இன்னும் பதினைந்து நாட்களில் நீங்கள் அகதிகளாகப் போகிறீர்கள். உங்கள் சொத்தும், அனைத்தும், குடும்பமும் தொலைந்து நிர்கதியாகப் போகிறீர்கள்’’ என்று இப்போது எந்த ஹிந்துவிடமோ, சீக்கியரிடமோ கூறினால் நம்மை அவர்கள் பைத்தியம் என்று பரிகசிப்பார்கள்.
ஆனால், அந்தோ! துரதிர்ஷ்டம். அது நடந்தேவிட்டது. 17, யார்க்ரோடு, டில்லி – நேருவின் இல்லம் ஒரே கூட்டமாக இருந்தது. சுதந்திர பாரதத்தின் முதல் மந்திரிசபைக்கான கூட்டம், அதற்கான அதிகாரபூர்வ வேலைகள் முழங்க வேண்டியுள்ளது. நாகா பாபு ராஜேந்திர பிரசாத் என்ன பட்டியல் தருகிறாரோ அதுவே இறுதி மந்திரிசபைப் பட்டியல். எனவே இன்றுகாலையே அதற்கான விவரம் பட்டியலை நேரு ராஜேந்திர பிரசாதிடம் அனுப்பிவிட்டார்.
இங்கு ஸ்ரீ நகரில் வழக்கம்போல அமைந்தது காந்திஜியின் காலைப் பொழுது. காந்திஜி கிளம்பி ஜம்முவுக்கு செல்லவேண்டிய தருணம். அங்கும் அதிக நாள் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் அங்காவது பஞ்சாப் செல்லவேண்டியிருந்தது. எனவே தினசரி பிரார்ததனைக்குப் பிறகு கொஞ்சம் சிற்றுண்டி எடுத்துக்கொண்டார். ஷேக் அப்துல்லாவின் மனைவி பேகம் அக்பர் கஷானிடம் விடைபெற்று கொண்டு புறப்பட ஆயத்தமானார். காந்திஜி தன் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி ஷேக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்பது பேகத்தின் விருப்பமாக இருந்தது. காந்திஜியும் சிரித்த முகத்துடனேயே அவருக்கு நம்பிக்கை அளித்தார். காந்திஜி கிளம்புவதற்கான வண்டி முதலிய ஏற்பாடுகளை கிஷோரிலால் சேட் தானே செய்து இருந்தார். ராஜா ஷரிசிஸ் அரசு தரப்பிலும் காந்திஜியை வழியதுப்ப ஒரு அதிகாரியை நியமித்திருந்தார். சரியாக 10 மணிக்கு காந்திஜி தன் யாத்திரையை முடித்து விடைபெற்றுப் புறப்பட்டார்.
சையத் ஷாருன் 19 வயது இளைஞன் – ஜின்னாவின் தீவிர பக்தன் முஸ்லிம் நாதனின் கார்டின் தீவிர உறுப்பினராக இருந்தவன். அவன் கராச்சியின் ஒரு மசூதியில் முஸ்லிம்களைத் திரட்டி ஆலோசனை செய்தான். என்ன ஆலோசனை? கராச்சியிலுள்ள ஹிந்துக்களை ஒட்டுமொத்தமாக ஊரைவிட்டே, நாட்டைவிட்டே விரட்ட என்ன வழி? என்றுதான் ஆலோசனை. ஆகஸ்டு 7 அன்று கராச்சிக்கு ஜின்னா வருவதாகத் திட்டம். அவரை சிறந்த முறையில் வரவேற்கவும் ஆலோசிக்கப்பட்டது. உணர்ச்சி வயப்பட்டவர்களாக இங்குள்ள இளைஞர்கள் இருந்தனர். இதற்கான பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடையே ஒருவன் – ரூலாம் ரஸூல் – சொன்னான். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதைவிட நன்றாகப் பயிற்சி தருகிறார்கள். இறுதியில், ஆர்.எஸ்.எஸ். காரர்களையும், சில சீக்கியர்களையும் தவிர மற்றவர்களிடம் எதிர்ப்பு மனப்பான்மை குறைவாகவே உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் நாம் தாக்குதலை வைத்துக் கொள்ளலாம். என்று முடிவு செய்யப்பட்டது.
காலையில் பலூசிஸ்தான் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்குப்பிறகு முகமது அலி ஜின்னா தன் 10, அவுரங்கசீப் ரோடு பங்களாவுக்கு வந்தார். 1937 ல் அவர் வாங்கிய பங்களாகியது. சீக்கிரமே இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்று உணர்ந்திருந்த ஜின்னா அதை ராமகிருஷ்ண டால்மியாவுக்கு விற்று விட்டிருந்தார். இந்த பங்களாவில்லை இது அவரது கடைசியான அல்லது 4 ராத்திரிகள்தான். பொருட்கள் மூட்பை கட்டப்பட்டு தாயாராக இருந்தன. ஆகஸ்டு 7 ல் மவுண்ட்பேட்டன் மூலம் தருவித்த விமானம் மூலம் கராச்சி பயணம் கராச்சி அவரது கனவு தேசம்.
இடையில் அவர் ஒரு பிரிதிந்திகள் குழுவை சந்திக்க நேரம் அளித்திருந்தார். ஹைதராபாத் நிஜாமின் பிரதிநிதிக்குழு, ஹைதராபாத் நிஜாம் பாரதத்துடன் விரும்பவில்லை, பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். பூகோள ரீதியாக அது சக்தியுமில்லை என்பதால் சுதந்திர நாடாக இருக்க விரும்பினார். எனவே மவுண்ட் பேட்டன் மூலம் பாரதத்துடன் ஹைதராபாத் மாகாளத்தின் உளவு, வியாபாரத் தொடர்பு, போன்றவை பாதுகாப்பாக நிகழ வேண்டும் என்று மவுண்ட்பேட்டன் மூலமாக நேருவுக்கு அறிவுறுத்தவேண்டும். அதை ஜின்னா செய்யவேண்டும்’’ என்ற நோக்கத்தோடு தன் பிரதிநிதிக் குழுவை அனுப்பியிருந்தார்.
இதை நன்கு அறிந்திருந்த ஜின்னா, தயக்கத்துடன், திறமையும் ஏமாற்ற விரும்பாமல் அவர்களிடம், தான் கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார். ஏனென்றால் நிஜாம் பெரும் செல்வந்தர். நிறைய முஸ்லிம்களுக்கு அவர் பக்கம். மாலைநேரம் வளர்ந்து வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. ஒருவர் சோகத்தோடு, அந்த சோகத்தின் நடுவேயும் ஜின்னாவின் மனம் சிந்தித்தது. இன்னும் இரண்டு நாளில் என் கனவு தேசத்துக்குச் சென்று விடுவேன்’’­­­

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS condoles the death of Shri Karunanidhi

Tue Aug 7 , 2018
VSK TN      Tweet     RSS State President Shri Kumaraswamy condoled the demise of former Chief Minister of Tamilnadu Dr. M Karunanidhi. RSS offers its shraddhanjali to the departed soul.   பத்திரிக்கை செய்தி  தமிழ்நாட்டில் நீண்ட காலம் மாநில முதல்வராகவும், தமிழக அரசியலின் முது பெரும் தலைவராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 50 ஆண்டுகள் தலைவராக இருந்த திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு குறித்து […]