VSK TN
ஆகஸ்ட் 7
பிரஷாந்த் போலெ
பிரஷாந்த் போலெ
“தேசியக்கொடியின் நடுவில் ராட்டைதான் இடம் பெற வேண்டும், அசோக சக்கரம் கூடாது. அசோக சக்கரம் உள்ள கொடியை நான் வணங்க மாட்டேன்” என்று காந்திஜி கூறியது குறித்த செய்தி பல நாளேடுகளில் வெளிவந்தது. அதே போல முந்தைய நாள் சிந்து மாகாணத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் மற்றும் குருஜி கோல்வால்க்கர் ஆற்றிய சொற்பொழிவு குறித்தும் நாளேடுகளில் செய்திகள் வெளியாகின.
________ _________
சிந்து மாகாணத்தில் நடைபெற்ற ஷாகாவில் குருஜி கலந்துக்கொண்டார். நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக மைதானத்தில் பயிற்சி பெற்றதை பார்த்து குருஜி சந்தோஷமடைந்தாலும், இந்த பூமி இந்தியாவை விட்டு பிரியப்போகிறது என்கிற விஷயம் அவரை சோகத்தில் ஆழ்த்தியது. ஷாகா முடிந்த பின்னர், சிந்து மாகாணத்தில் உள்ள ஹிந்துக்களை பாதுகாப்பாக எவ்வாறு இந்தியாவிற்குள் அழைத்து வருவது குறித்து ஸ்வயம்சேவகர்களுடன் ஆலோசனை நடத்தினார் குருஜி. இந்தியா வரும் ஹிந்துக்களை எங்கு குடிஅமர்த்துவது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்கிற என்ற திட்டமும் காங்கிரஸ் அரசிடம் இல்லை. பஞ்சாப், சிந்து மாகாண ஹிந்துக்கள் முஸ்லிம்களால் ஏற்படும் கொடுமைகளை சமாளித்துக்கொண்டு அங்கேயே வாழ வேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்ததால், அங்கிருந்த ஹிந்துக்கள் பற்றிய அக்கறை அரசுக்கு இல்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். ஹிந்துக்களை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றது. ஆலோசனைக்கு பிறகு கனத்த இதயத்துடன் குருஜி விடைபெற்றார்.
—
அதே நேரம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் ரஷ்யாவிற்கான முதல் இந்திய தூதர் விஜயலக்ஷ்மி பண்டிட். அசோக சக்கரம் பொருத்தப்பட்ட தேசிய கொடி விமான நிலையத்தில் பறந்தது. வெளிநாட்டில் இந்திய கொடி முதன் முதலில் பறந்தது அங்குதான். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்ற விஜயலக்ஷ்மி பண்டிட், மிக திறமையானவர்.
_______ _________
டில்லியில் இருந்த புறப்பட சிறப்பு விமானம் மூலம், குடும்பத்தினருடன் கராச்சி புறப்பட்டார் ஜின்னா. கராச்சி வந்திறங்கிய ஜின்னாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் வெகு சிலரே கலந்துக்கொண்டனர். முதன் முதலில் நாட்டிற்குள் காலடி எடுத்துவைக்கும் தனக்கு கிடைத்த வரவேற்பு ஜின்னாவிற்கு அதிருப்தி அளித்தது.
___ ____
அதே நாள் மும்பையில் Bombay Electric Supply and Transport’ (BEST) என்கிற தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த 275 பேருந்துகள், மும்பை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
___
வாரங்கல் காகதீய வம்சம் ஆட்சி செய்த ஊர். ஆயிரம் தூண்களை உடைய கோவில் உள்ள ஊர். ஹைதராபாத் காங்கிரஸ் தலைவர் ஸ்வாமி ராமதீர்த்தர் தலைமையில் ஒன்றுகூடிய காங்கிரசார், கையில் தேசியக்கொடியுடன் , ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று நிஜாமுக்கு கோரிக்கை விடுத்தார், ஆனால் நிஜாம் பணிய வில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சுமார், ஒரு வருடத்திற்க்கு ரஜாக்கர்களின் கொடுமையை இம்மக்கள் அனுபவித்து வந்தனர்.
___ ____ ____ ____
இதே நாள் ராஜாஜி பிரிக்கப்பட்ட வங்காளத்தின் (மேற்கு வங்காளம்) ஆளுநராக நியமிக்கபட்டார். தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தழுவியதோடு மட்டுமில்லாமல் , வங்காளத்தை பிரிப்பதற்கு ஆதரவு காட்டிய ராஜாஜி ஆளுநராக நியமிக்கப்பட்டதை மக்கள் விரும்பவில்லை. நேதாஜியின் சகோதரர் ஷரத் சந்திர போஸ் “ராஜாஜி ஆளுநராக நியமிக்கப்பட்டது வங்காளத்திற்கு அவமானம்” என்று பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.
____
தில்லியில் இந்திய ராணுவத்தின் தலைமை அலுவலத்தில், ராணுவ தளபதி கிளாட் ஜான் அச்சின்லெக், சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட ஆணை தயார் செய்தார், ஆனால், நேதாஜியின் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக போரிட்டு, பின்னர் சரணடைந்த இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுவிக்க மறுத்து விட்டார். (இவர்கள் சுதந்திரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்).
—
மதராஸ் மாகாண அரசு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர்க்கும் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. மதராஸில் ஒன்றுகூடிய திரையரங்க உரிமையாளர்கள் “ஆகஸ்ட் 15 முதல் பிரிட்டிஷ் தேசிய கீதம் திரையரங்குளில் ஒலிக்காது, மாறாக தேசபக்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கும்” என்று கூறினர். இதை அறிந்த மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
_______
கராச்சியில், சுசேதா கிருபளானி சிந்தி மாகாணத்தில் இருந்த பெண்களை சந்தித்தார். காங் தலைவர் ஆச்சார்யா கிருபளானியின் மனைவி இவர். முஸ்லிம்கள் தங்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாவும், ஒவ்வொரு தினத்தையும் அச்சத்துடனேயே கழித்து வருவதாகவும் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த சுசேதா கிருபளானி “நான் இந்த ஊரில் சுதந்திரமாக சுற்றிவருகிறேன், எந்த முஸ்லிமும் என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை,ஏனெனில் நான் உங்களை போல முகத்தை சிறப்பு அலங்காரம் செய்வதில்லை, உடல் தெரியும் வகையில் சேலை அணிவதில்லை, நீங்கள் அவ்வாறு அணிவதால் தான் முஸ்லிம்கள் அவ்வாறு நடக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லிம்கள் உங்களை வன்புணர்வு செய்ய நினைத்தால் நீங்கள், நமது ராஜ்புத் பெண்கள் செய்தது போல, தீயில் குதித்து விடுங்கள்” என்றார்.
இது அந்த பெண்களை மேலும் அதிர்ச்சிக்குளாக்கியது. முஸ்லிம்கள், நம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு நாம் தான் காரணம் என்று சொல்கிறாரே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரின் மனைவி இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறாரே. மரண பயத்தில் வாழும் எவரேனும் கவர்ச்சியான உடை அணிவார்களா? நாமெல்லாம் தீயில் விழத்தான் வேண்டுமா? என்று தங்களுக்குள் கேள்வி எழுப்பினர். இப்படித்தான் யதார்த்தம் தெரியாமல் இருந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.
___ ____ ____
டில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் கூர்க்கா ரைபிள்ஸ் என்கிற ஒரு படையின் 4 அதிகாரிகள் பிரிட்டிஷ் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தனர். கூர்க்கா ரைபிள்ஸ் படையில் உள்ள வீரர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் எந்த நாட்டு ராணுவத்துடன் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அதிகாரி தெரிவித்தார். ஆனால் படையின் அதிகாரிகள் 4 பெரும் கூட்டாக சொன்ன விஷயம் “ஒரே ஒரு கூர்க்கா வீரர் கூட பாகிஸ்தான் படையில் சேர விரும்பவில்லை, நாங்கள் இந்தியாவுடனேயே இருக்கிறோம்” என்பது.
—
லக்னோவில் (லக்ஷ்மணபுரி) முதல்வர் கோவிந்த் வல்லபாய் பந்த், பிரிட்டிஷாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நதிகள் மற்றும் ஊர்களின் பெயர்களை மீண்டும் பண்டைய கால பெயர்களுக்கே மாற்றுவது என முடிவெடுத்தனர். உதாரணமாக மதுரா முத்ரா எனவும், யமுனை நதி ஜூம்னா என்றும் பிரிட்டிஷாரால் மாற்றப்பட்டிருந்தது. இவைகளுக்கு மீண்டும் புராண பெயர்கள் வைக்கப்பட்டன.
—–
அதே வேளையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக ஸ்ரீ பிரகாஷ் என்பவரை நேரு நியமித்தார். ஸ்ரீ பிரகாஷ் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர், லண்டனில் படிப்பு முடித்தவர், மிக திறமை வாய்ந்தவர், எனவே இவரை பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக நேரு நியமித்தார். புலம்பெயரும் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய முக்கிய பொறுப்பு ஸ்ரீ பிரகாஷுக்கு இருந்தது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஜின்னா ஆகஸ்ட் 11 உரையாற்ற வேண்டியிருந்ததால், உடனே பாகிஸ்தானில் பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்ரீ பிரகாஷ். அடுத்த இரண்டு ஆண்டுகளில், லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்படுவார்கள் என்றோ, காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சிக்கும் என்றோ, இந்தியாவை பாகிஸ்தான் வஞ்சிக்கும் என்றோ, கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார் ஸ்ரீபிரகாஷ்.
—
ஆகஸ்ட் 7 இரவு, காந்தி அமிர்தசரஸில் இருந்து பாட்னா நோக்கி ரயிலில் பிரயாணமானார் காந்தி. ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்திர பிரதேசம்) வழியாக ரயில் பயணித்தது. ரயில் நிலையங்கள் அனைத்திலும் திரண்டிருந்த மக்கள் காந்திஜியிடம் “ஹிந்து முஸ்லீம் கலவரம் எப்பொழுது நிற்கும்” என்று கேட்டனர்.
காந்திஜியால் அவர்களுக்கு திருப்திகரமான பதிலை தர முடியவில்லை . லாகூர் மற்றும் அகதிகள் முகாமில் ஹிந்துக்களும் சீக்கியர்களும் படும் கஷ்டங்கள் அவர் முன்னே நிழலாடியது. அவர்கள் இந்தியாவிற்க்குள் வரத்தான் வேண்டுமா, அவ்வாறு நடந்தால் நான் கொண்ட கொள்கைகள் தோல்வி அடைந்ததாக ஆகுமே என்று கவலை கொண்டார்.
ரயில் பாட்னா நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது