நல்ல நண்பர் யார் என்பதை பர்த்ருஹரி பின்வருமாறு விளக்கிச் சொல்கிறார் : பாபான் நிவாரயதி (நண்பனை தீய செயல்களில் இருந்து, பாவம் செய்வதிலிருந்து தடுத்து விலக்குவார்). யோஜயதே ஹிதாய (நண்பன் நன்னெறிப் படிவாழ்க்கை நடத்த வேண்டும் என்று கருதி நண்பனுக்கு நல்லது செய்வார்). குஹ்யம் நிகூஹதி (நண்பன் மனிதன் தானே; அவனிடமுள்ள குறை என்ன என்று நண்பருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் அவனுடைய குறை, குணம் இவற்றில் குறையை நாலு […]
