VSK TN
    
 
     

கர்னாவதி: சங்க வேலையை 1 லட்சம் இடங்களில் விரிவுபடுத்துவது தான் இலக்குசுனில் அம்பேகர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் சுனில் அம்பேகர் ஜி செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், இந்த ஆண்டு அகில பாரதிய பிரதிநிதி சபா குஜராத் மாநிலம் கர்ணாவதியில் மார்ச் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது. சங்கத்தில் பல்வேறு வகையான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதில் பிரதிநிதி சபாவானது முடிவெடுக்கும் பார்வையில் மிகப்பெரியது மற்றும் மிக முக்கியமானது. முன்னதாக, பிரதிநிதி சபா நாக்பூரில் மட்டுமே நடத்தப்பட்டது, ஆனால் நாக்பூருக்கு வெளியே முதல்முறையாக பிரதிநிதி சபை 1988 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு 1248 பிரதிநிதிகள் பிரதிநிதி சபாவில் பங்கேற்கின்றனர். இந்த பைட்டக் (கூட்டம்) பூஜனீய சர்சங்சாலக் டாக்டர் மோகன் பாகவத் ஜியின் வழிகாட்டுதலின் கீழ் சர்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹோஸபலே ஜி அவர்களால் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர, ப்ராந்த சங்கசாலக், ப்ராந்த கார்யவாஹ் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த பைட்டக்கில் கலந்து கொள்கின்றனர். இம்முறை சங்கடன் மந்திரி மற்றும் 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர்.

இந்த பைட்டக்கில், சங்க வேலையைப் பற்றி ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடப்பட்டு அதன் மறுஆய்வு செய்யப்படுகிறது; மற்றும் ஒவ்வொரு ப்ராந்தத்தின் அறிக்கையும் சர்கார்வாஹ் ஜி முன் சமர்ப்பிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சங்கம் துவங்கி 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் எல்லா ப்ராந்தங்களின் செயல் திட்டங்கள் இந்த பைட்டக்கில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். சங்க காரியத்தைப் பற்றிய புள்ளி விவரங்களும் எல்லா ப்ராந்தங்களாலும் வழங்கப்படும். சங்கத்தின் சதாப்தி(நூற்றாண்டு) வர்ஷத்தை முன்னிட்டு சங்க காரியத்தை 1,00,000 இடங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான இலக்கு எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் 75வது ஆண்டு விழாவிற்காக வெவ்வேறு பிராந்தங்களால் செய்யப்பட்ட திட்டமிடலும் இந்த பைட்டக்கில் விவாதிக்கப்படும். சில சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது, எனவே அத்தகைய தகவல்களை சமூகத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கிராமப்புற அளவில் (சுய தொழில்) மூலம் மக்களை ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) உருவாக்க சங்கத்தால் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சமரஸதா (சமுதாய நல்லிணக்கம்), பர்யாவரன் (சுற்றுச்சூழல்) மற்றும் பரிவார் பிரபோதன் போன்ற துறைகள் மூலம் சமுதாயத்தில் உள்ள பல அமைப்புகளுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் பற்றி இந்த பைட்டக்கில் விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும்.

குஜராத்தின் பாரம்பரிய கலாச்சாரம், குஜராத்தின் வளர்ச்சி, குஜராத்தில் சங்க காரியத்தின் படிப்படியான முன்னேற்றம், சங்கத்தின் செயல்பாடுகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பிரதிநிதிகளுக்காக ப்ரதிநிதி சபை நடைபெறும் இடத்தில் சிறப்பு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அகில பாரத சஹ-பிரச்சார் பிரமுகர்கள் நரேந்திர குமார்ஜி மற்றும் அலோக் குமார் ஜி,  குஜராத் சஹ ப்ராந்த கார்யவாஹ் டாக்டர் சுனில்பாய் போரிசா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பை டாக்டர் ஷிரிஷ் காஷிகர் ஏற்பாடு செய்திருந்தார்

Next Post

திருக்கச்சி நம்பி வரலாறு

Thu Mar 10 , 2022
VSK TN      Tweet      திருக்கச்சி நம்பி:-     வைசிய குலத்தில் கி.பி. 09 மாசி மிருகசீரித நட்சத்திரத்தில் சௌமிய வருஷத்தில் பிறந்த தாசர் என்ற திருநாமம் கொண்ட திருக்கச்சி நம்பிகள் அவதரித்தார்.  ஆளவந்தார் எங்கிற மிகப்பெரிய வைணவ ஆச்சாரியருக்கு சிஷ்யர் ஆவார்.  நாலாயிரம் திவ்யபிரபந்தங்களை நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனியன் பேரன் ஆன ஆளவந்தார் வைணவம் தழைக்க வைக்க வந்த சிறந்த பண்டிதர்.  பெருமை வாய்ந்த ஆளவந்தாரின் சிஷ்யன் என்ற பெருமை சாதாரண […]