வயநாடு – சேவா பாரதி சேவை பணியில்

VSK TN
    
 
     

சேவா பாரதி சார்பாக பாதிப்பு ஏற்பட்ட நேரத்திலிருந்து பல நூறு ஸ்வயம்சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இன்று 254 பேர் களத்தில் இருந்தனர்.  புதையுண்ட  பிணங்களை தேடும் பணி, பிணங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்வது.

ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை செய்யும் பாலம் அமைத்தல் போன்ற பிற பணிகளுக்கு உதவுவது.

பெங்களூரில் இருந்து 9 பேர் கொண்ட டாக்டர் குழு வந்துள்ளனர்‌. அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பணி செய்கின்றனர்.

காலமானவர்களை எரியூட்டும் பணி

ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு உள்ளது அதை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்தி வருகின்ற பிணத்தை மரியாதையான இடத்தில் வைத்து தாய்மார்கள் ராம நாமம் கூறி மரியாதை செய்த பிறகு, அவரவர் குடும்ப வழக்கப்படி தகனம் செய்வது. இதுவரை 43 பிணங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

உணவு வழங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் பல பணிகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் செய்ய திட்டங்கள் உள்ளன.

 

Next Post

पंचाम्रित

Sun Aug 4 , 2024
VSK TN      Tweet    ।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 अगस्त 4) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सरकारी सेवा के प्रति समर्पण घटना 21 जून 2024 को पूर्व मध्य रेलवे के वाल्मिकी नगर रोड स्टेशन के पास हुई थी. ट्रेन नं. […]