VSK TN
ஆர்.எஸ்.எஸ். – சேவா பாரதி அமைப்பானது, அனைத்துத் துறை மக்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சேவைப் பணிகள் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பு.
இந்த அமைப்பு பண்பாட்டு வகுப்புகள், யோகா வகுப்பு, அன்பு இல்லங்கள், மழை – வெள்ளத்தின் போது அவசரகாலப் பணிகள் போன்ற எண்ணற்ற சேவைப் பணிகளை எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னார்வலர்களைக் கொண்டு நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருள் பாலிக்கும் ஆதி அத்திகிரி வரதர் உற்சவத்தில் ஆர்.எஸ்.எஸ். – சேவா பாரதி இணைந்து நீர், மோர், பானகம், அன்னதானம், சுத்தம் சுகாதாரம் என பல்வேறு சேவைப் பணிகளை ஆற்றி வந்தது. தினசரி 15,000 லிட்டர் குடிதண்ணீர் என 48 நாள்களுக்கு மொத்தம் 7,50,000 லிட்டர் குடிதண்ணீரும், பானம் 3.5 லட்சம் லிட்டர், மோர் 1.5 லட்சம் லிட்டர், அன்னதானம் 6 லட்சம் பக்தர்களுக்கு என பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவைப் பணியில் தினசரி 250 மனித சக்தி தன்னார்வலர்கள் என 48 நாள்களுக்கு மொத்தம் 12,500 மனித சக்தி தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.
அத்தி வரதர் உற்சத்தின் நிறைவு சேவையாக 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணி (ஸ்வச் பாரத்) செய்யப்பட்டது. இந்த சேவைப் பணியில் ஆர்.எஸ்.எஸ். காஞ்சி கோட்ட தலைவர் திரு. இராமா. ஏழுமலை தலைமையேற்க, ஆர்.எஸ்.எஸ். காஞ்சி நகரத் தலைவர் டாக்டர் அரவிந்தன் வரவேற்பு மற்றும் அறிமுகவுரையாற்ற, இந்த சேவைப் பணியை மன்னார்குடி ஜீயர் பூஜ்ய செண்டலங்கார ஜீயர், மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. கண்ணன், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென் பாரத சேவைப் பிரிவு அமைப்பாளர் திரு. பத்மகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு. பக்தன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிறைவாக ஆர்.எஸ்.எஸ். காஞ்சி மாவட்டத் தலைவர் இரா. கோதண்டம் மகிழ்ச்சியுறையாற்றினார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட சேவா பாரதி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் பெருமாள் கோயில் சந்நிதி தெரு முதல் ரங்கசாமி குளம் வரை உள்ள சாலை, உள்சாலை, கால்வாய் போன்றவற்றில் தூய்மைப் பணி செய்தனர்.
காஞ்சி வரதர் உற்சத்தில் கடந்த 50 நாட்களாக ஆர்.எஸ்.எஸ். – சேவா பாரதி இணைந்து மேற்கொண்ட சேவைப்பணிகளை தங்களின் பார்வைக்காக பட்டியலிட்டுள்ளோம்.
தினசரி மொத்தம்
குடிதண்ணீர் – 15,000 லிட்டர் 7,50,000
பானகம் – 7,000 லிட்டர் 3,50,000
மோர் – 3,000 லிட்டர் 1,50,000
அன்னதானம் – 12,000 நபர்கள் 6,00,000
வீல் சேர் – 300 பக்தர்கள் (50 பேர்) 15,000
சுத்தம் சுகாதாரம் – 40 நபர்கள்
(5 மணி நேரம்) 2,000
(5 மணி நேரம்) 2,000
பக்தர்களை முறைப்படுத்துதல் – 40 2,000
துளசி பிரசாதம் – 50 கிலோ 2,500
மஞ்சள் பிரசாதம் – 15 கிலோ 750
தீர்த்தப் பிரசாதம் – 10,000 பக்தர்களுக்கு 5,00,000
தகவல் மையம் – 10 நபர்கள் 500
பிரபந்தக் – 250 மனித சக்தி 12,500
திருமண் இடுதல் – 1,000 50,000