VSK TN
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS) 3 நாள் கூட்டம் பெங்களூரில் மார்ச் 15 – மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு அருண்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு
“கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றார்கள். அவர்களது நேரம், விருப்பத் துறை, திறன் உள்ளிட்ட தகவல்கள் பெறப்பட்டன. இந்த அகில பாரத பிரதிநிதி சபாவில், இந்த தொண்டர்கள் மூலம் சமுதாயத்தில் அவரவர் விருப்பப்பட்ட துறையில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.
அகில பாரத பிரதிநிதி சபா (ABPS ) என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மிக உயரிய குழுவாகும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் உட்பட சுமார் 1500 பேர் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக 11 க்ஷேத்ரங்களாக தனது பணிகளை வகுத்து வைத்துளளது ஆர்.எஸ்.எஸ். இவைகளின் கீழ் 44 ப்ராந்தங்கள் உள்ளன. விஸ்வ ஹிந்து பரிஷத் (நீதிபதி விஷ்ணு சதாசிவ கோகஜே மற்றும் திரு ஆலோக் குமார்), அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (திரு சுப்பையா சண்முகம்), பாரதீய மஸ்தூர் சங்கம் (சஜி நாராயணன்), வித்யா பாரதி (ராமகிருஷ்ண ராவ்), வனவாசி கல்யாண ஆஸ்ரமம் (ஜகதேவ் ராவ் ஆரோன்), பாஜக (J P நட்டா), சக்ஷ்மா (தயாள் சிங் பவார்) உள்ளிட்ட 35 பரிவார் இயக்கங்களின் தேசிய மற்றும் மாநில சார்ந்த பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.
“மார்ச் 14 அன்று அகில பாரத கார்யகரணி மண்டல் சந்திப்பு நடைபெறும். இதில் அகில பாரத பிரதிநிதி சபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள படவேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். ABPS ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கும் கடந்த ஆண்டின் அறிக்கைகள், அனுபவங்கள் பகிர்தல் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவாதமும் இந்த கூட்டத்தில் நடைபெறும்.
மார்ச் 17 மதியம் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் சுரேஷ் பையா ஜி ஜோஷி பத்திரிகையாளர்களை சந்திப்பார். ” என அவர் தெரிவித்தார்.