நம் பாரத நாடு பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்களும் போராடி விடுதலை கண்டது.
சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்குமென பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ஜுராஸ்ட்ரியன் மதத்தை சார்ந்த பாரசீகர்கள், சலுகைகளை மறுதலித்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விழையாமல் முழுமையான அறப்பணிப்பு மனப்பான்மையோடு, பாலில் கலந்த சர்க்கரை போல தேசிய நீரோட்டத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டை உயர்த்தியுள்ளனர். அவர்களில் சிலர்- பாபா அணு மின் நிலைய விஞ்ஞானி இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா, ஃபீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷா, தொழிலதிபர் ரத்தன் டாடா, டாக்டர் சைரஸ் பூனா வாலா தடுப்பூசி விஞ்ஞான வல்லுநர், இந்திய அரசியல் மேதை பொருளியல் அறிஞர் நானி பால்கி வாலா ,
சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்,
பிலு மோடி ,மேலும்
மகுடத்து வைரமாக தாதாபாய் நௌரோஜி போன்றோர் அடங்குவர்.
வெள்ளையர் ஆட்சியில் பம்பாய் மாகாணத்தில் 1825 செப்டம்பர் 4 அன்று நௌரோஜி பலஞ்சி டோர்ஜிக்கும் ,மேனக் பாய்க்கும் மகனாகப் பிறந்தவர் தாதாபாய் நௌரோஜி.
*இங்கிலாந்தில் சட்டம் படிப்பு.
* 1850 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கை தத்துவ பேராசிரியர்.
* 1851ல் “சமாச்சார் டர்பன்”என்ற குஜராத்தி பத்திரிக்கையில் கட்டுரையாளர்.
* ராஸ்ட் கோஃப்தர் (Rast Goftar) என்ற நாள் இதழை நிறுவினார். தொடர்ந்து தியான் பிரச்சாரக் (Dyan Prasarak) என்ற பத்திரிக்கையிலும் கட்டுரைகளை எழுதினார்.
* 1854 இல் ட்ருத் டெல்லர் (Truth Teller) திங்கள் இருமுறை இதழை துவங்கி நடத்தினார்.
* இன்றைய சென்னை கல்லூரி மாணவப் பருவத்தினர் பேருந்தை கடத்துவதும், கல்லெறிந்து பொது சொத்துக்களை சேதப்படுத்துவதையும் JNU -AMU – ஆகிய மாணாக்கர் பெயர் தாங்கி, தேச விரோத வன்முறையில் ஈடுபடுவதையும் நாம் கண்டதுண்டு.
ஆனால் ! அந்த பருவத்தில் தாதாபாய் நௌரோஜி பேராசிரியர், கல்வியாளர், ஊடகவியலாளர், பாராளுமன்றஉறுப்பினர், பொருளாதார சிந்தனையாளர், என பன்முகத்தன்மை கொண்டு பரிணமித்தார்.
*பம்பாயில் ஞானப்பிரச்சார சபை ,அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பாரசி உடற்பயிற்சி பள்ளி, கைம்பெண் உதவி சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்கினார்.
*1875 பம்பாய் மாநகராட்சி உறுப்பினர், அதற்கு முன் 1864 பம்பாய் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்.
* 1883 மீண்டும் மாநகராட்சி உறுப்பினர். வாய்ஸ் ஆப் பாம்பே (Voice of Bombay ) என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.
*1885 ஆகஸ்டில் பம்பாய் சட்டமன்ற கூடுதல் நியமன உறுப்பினர்.
*1885 இல் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். அதே ஆண்டில் A O ஹியூம்,W C பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கினார்.
*1886 ,1893,1906 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இந்திய தேசிய காங்கிரஸுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .1906 இல் கல்கத்தா காங்கிரஸில் சுயராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
*1892 கேப்டன் பென்டனை தோற்கடித்து பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றஇங்கிலாந்து ராணியின் அமர்வு முன்பு கேப்டன் பென்டன் முறையீடு செய்தார். வழக்கிலும் தாதாபாய் நௌரோஜி வெற்றி பெற்றார்.
பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே!
*இவர் பைபிள் மீது சத்திய பிரமாணம் எடுக்க மறுத்து ஜொராஸ்ட்ரிய மதத்தின் “அவெஸ்டா”என்ற நூலின் மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றார்.
முதல் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் இவரே ஆவார்.
*பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, போன்ற எண்ணற்ற முன்னணி தலைவர்கள் தாதாபாய் நௌரோஜியின் சீடர்கள் .
*தாதாபாய் நௌரோஜியின் பொருளாதார கொள்கைகள் இன்றளவும் போற்றி பின்பற்றப்படுகின்றன அவை ஆழமான, அறிவார்ந்த தொலைநோக்குடைய அணுகுமுறைகளை உள்ளடக்கியதாகும்.
* “நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள்” இந்த தற்சார்பு கொள்கைகளை “ஆத்ம நிர்பார் பாரத்” என்ற பெயரிலே நடைமுறைப்படுத்தி வருகிறார்
*இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மூத்த பெருந்தலைவர்
(The Grand Old Man of India) என பெருமையோடு அழைக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.
* பம்பாயில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி நிறுவினார். 1852 ல் பம்பாய் கழகம் தொடங்க காரணமாய் இருந்தார்.
லண்டன் இந்திய கழகம், கிழக்கிந்திய கழகம் ஆகியவற்றை உருவாக்கினார்.
இவ்வாறாக இந்திய விடுதலைக்கும் பெண்கள் கல்விக்கும், கைம்பெண்களின் மறுவாழ்விற்கும் புதிய எழுச்சியை உருவாக்கியவர், பல சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவாவதற்கு வித்தாக இருந்தவர் தாதாபாய் நௌரோஜி.
* அன்னாரின் பிறந்தநாளான இன்று, செப்டம்பர் 4 இல் அவரை நாம் நன்றி பெருக்கோடு நினைவு கூறுவோம்!!
ஜெய்ஹிந்த்.!
வாழ்க பாரத அன்னை புகழ் !!!
– M. S. R. நித்தியானந்தம்