VSK TN
1857 மே 10 நம் தாய்நாட்டின் முதல் சுதந்திர போாின் 163வது ஆண்டு நினைவு தினம் இன்று.
பிரிட்டிஷாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. வழிநடத்த முறையான தலைமை இல்லாத தடுமாற்றத்தினாலும்.
ஒரு கோப்பை மது ஒரு நாட்டின் சுதந்திரத்தை 90 ஆண்டுகள் தள்ளிப்போட்டது என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே..
என் காசு என் உடம்பு என் உரிமைன்னு சவடாலடிக்கும் சல்லிகள் உணா்ந்து கொள்க!
ஒற்றை கோப்பை மது எத்தனை எத்தனை கோடி மக்கள் கடும் துன்பத்தை அனுபவிக்க காரணமாய் இருந்திருக்கிறது. எத்தனை எத்தனை பெண்கள் கற்பு சூரையாடப்படவும், நாட்டின் பொக்கிஷங்கள் கொள்ளையிடப்படவும், செயற்கை பஞ்சம் உருவாக்கப்பட்டு மக்கள் பசிக் கொடுமையால் கொத்துகொத்தாய் செத்துமடிய காரணமாய் அமைந்தது என எண்ணி பார்க்கவும்.
காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதனால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்புகள்..
இதை நம்மூர் கம்யூனிச வரலாற்று பிதற்றுவாதிகளால் “சிப்பாய் கலகம்” என சிறுமையாக வர்ணிக்கப்பட்டு சுருக்கமாக பாடநூல்களிலும் அச்சிடப்பட்டு இதுவரை பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த சிப்பாய் புரட்சிக்கு பிறகே கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கைப்பற்றி ஆட்சியினை பிரிட்டிஷ் அரசு நேரடியாய் ஆளத் தொடங்கியது.
சற்று முயன்றிருந்தால் பாரத தேச எழுச்சியும், அதன் மூலம் உலகின் அடிமைப்பட்ட தேசங்களின் வரலாறும் எப்படி எப்படியோ மாற்றம் கண்டிருக்கும். காலத்தின் கணக்கு வேறாக அமைந்தது.
பின்னாளில் ஏற்பட்ட விடுதலை போரட்டங்களுக்கு துவக்கமாகவும், தூண்டுகோலகவும் அமைந்த முதலாம் விடுதலை போரான
” சிப்பாய் புரட்சி” நிகழ்த்தி அதுவரை பயம்என்பதை அறியாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு குலைநடுக்கத்தை பரிசாக வழங்கிய அத்துணை வீரத்தியாகிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.
–திரு.ரஞ்ஜீத் .VC