நம்மில் பலருக்கு குறிப்பாக சென்னையில் வசிப்பவர்களுக்கு தில்லையாடி வள்ளியம்மை என்ற பெயர் பரிச்சயமானது, பாந்தியன் சாலையில் அமைந்துள்ள முதன்மையான கோஆப்டெக்ஸ் கண்காட்சியகம் இதே  பெயரைக் கொண்டுள்ளது. பிப்ரவரி 22, 1898 ஜோகன்னஸ்பர்க் – தென்னாப்பிரிக்காவின் தங்க நகரம்,இந்நாளில் முனுசாமி முதலியாருக்கும் மங்களத்தம்மாளுக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்த இளம் தம்பதி, தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள தில்லையாடி என்ற சிறிய கிராமத்திலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு பிழைப்பிற்காக குடியேறியிருந்தனர். முனுசாமி தனது வாழ்வாதாரத்திற்காக சிறு கடை நடத்தி வந்தார். குழந்தைக்கு வள்ளியம்மை என்று  பெயரிட்டனர். வள்ளியம்மை இந்தியர்களுக்கு விரோதமான சூழலில் வளர்ந்தாள். ஆனால், இளமைப் பருவத்தில் இருக்கும் வரை இப்படிப் பாகுபடுத்தப்படுவது சரியல்ல என்று அந்தக் குழந்தைக்குத் புரியவில்லை. தென்னாப்பிரிக்காவின் சர்ச் அல்லது திருமணச் சட்டத்தின்படி இல்லாத எந்தத் திருமணமும் செல்லாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனால் பெரும்பாலாக ஹிந்துவாக இருந்த இந்தியர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டனர். மனைவிகள் கணவர்களின் சொத்து மீதான உரிமை மற்றும் கணவரின் பாதுகாப்பை  இழந்தனர். திருமணம் அவர்களின் சட்டத்தின் படி நடக்காததால் இந்து குழந்தைகள் எவருக்கோ பிறந்தவர்கள் என்ற நிர்கதி நிலைக்கு தள்ளப்படும் அச்சம் ஏற்பட்டது. பெற்றோரின் வாரிசுச் சொத்து குழந்தைகளைப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் எழுந்தது. பாதுகாப்பின் உத்திரவாதம் இல்லாததால், பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு  தள்ளப்படும்போல் இருந்தது. மோகன்தாஸ் காந்தி தனது எதிர்ப்பைத் தொடங்கினார். மார்ச் 14, 1913 15 வயதான வள்ளியம்மை தனது தாயுடன் பெண்கள் நடத்திய பேரணியில் டிரான்ஸ்வால் மாகாணத்திலிருந்து  நுழைவுச்சீட்டு இல்லாமல் நடால் மாகாணத்தை நோக்கிச் சென்றார்கள்.   செல்லும் வழியில் அவர்கள் நியூகாசிலில் உள்ள இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் பேசி, உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் நடாலுக்குள்  நுழைந்தபோது, பலருடன் வள்ளியம்மையும் கைது செய்யப்பட்டார். 3 மாதங்கள் சிறையில் இருந்தாள். சிறையில் இருந்த கடுங்குளிர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் அவரை பெரிதும் பாதித்தது. அவள் ஒரு கொடிய காய்ச்சல் வந்து படுத்துவிட்டாள். அவள் விடுவிக்கப்பட்டபோது அவளது மன  உறுதிய மட்டுமே எலும்பையும் தோலையும் ஒன்றாக உயிரோடு வைத்திருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை. யாரோ, “நீங்கள் ஏன்  பேசாமல் தென்னாப்பிரிக்கர்களாக பதிவு செய்து மாறக்கூடாது? இந்தியர்கள்! இந்தியாவில் கொடி கூட இல்லை! நீங்கள் உண்மையில் எதற்காக போராடுகிறீர்கள்?” எனச்சொல்வதை அவள் காதில் விழுந்தது. கொடிதான் இந்தியாவுக்கு வடிவம் கொடுக்கும் என்றால், இதோ,” என்று கூறி, தன் புடவையைக் கிழித்து, அதை வெற்றிகரமாய் அசைத்து, “என் கொடி! என் தாய்நாடு!” என்றாள் வள்ளியம்மை. காந்தி, இரும்புமனம் கொண்ட இளம் வள்ளியம்மையைப் பற்றி கேள்விப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தவர்களைச் சந்திக்க வந்தபோது அவளைக் குறிப்பாகக்  கேட்டார். அந்த உயரந்த  பெண்ணை எலும்பும் தோலுமாய்ப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். “குழந்தை, இவ்வளவு சிறிய வயதில் நீ இந்த சிரமம் மிக்க காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார். அவள் கண்கள் ஒளிர, பலஹீனமான குரலில்,”இதுதான் நமக்கு விடிவு கொடுக்கும் வழி என்றால், நான் மீண்டும் சிறைக்குச் செல்ல தயார்!” என்று பதிலளித்தாள். பிப்ரவரி 22, 1914 இரும்பு இதயம் கொண்ட வள்ளியம்மை இறுதி மூச்சை விட்டாள். சற்று அவசரப்பட்டுவிட்டாள். “வள்ளியம்மையின் இழப்பு என் மூத்த சகோதரனின் (லட்சுமிதாஸ்) இழப்பை விட என்னை அதிகம் பாதித்தது, ” என்று காந்தி பின்னர் எழுத்தினார். ஆபிரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை வழங்குவதை விட, போயர் போருக்குப் பிறகு ஆப்பிரிக்கானர்களின் (டச்சு மக்களின் ஆப்பிரிக்க வம்சாவளி) உணர்வுகளைத் தணிப்பதில் பிரிட்டன் அதிக அக்கறை கொண்டிருந்தது.   வள்ளியம்மையின் மரணம் இந்தியர்கள் – பெரும்பாலும் ஒப்பந்தத் தொழில் செய்ய வந்தவர்கள் – அனுபவித்த துன்பங்களின் பிரதிபலிப்பாகும். […]

Mahakavi Subabaramanya Bharatiyar, (1914) praised “Anjalai Ammal has come into public life at a time when women are afraid to step out of the house.” This same lady was later hailed as ‘Queen Jhansi of South India’ by Mahatma Gandhi. Thus, respected by leaders like Rajaji, Kamaraj, shall we spend […]

While travelling down the memory lane, we find that, there are so many unsung heroes of our pious land, who have contributed towards literary works, music, freedom-fight struggle, but remained mostly unknown, to the people of this era. One such person is Vaithamanithi Mudumbai Kothainayaki Ammal, whose journey has been […]

தமிழ் தாத்தா உவேசா ஏட்டு சுவடிகளில் உள்ள பண்டையை இலக்கியத்தை இலக்கணங்களை அச்சுப் பிரதியில் ஏற்றி அரும்பெறும் தொண்டு செய்தார். இது யாவரும் அறிந்தது. அறியாத சில விஷயங்களும் உண்டு. ‌அவற்றைப்பார்த்தால் அவருடைய தமிழ்த்தாகத்தை உணரலாம். தாரமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஆலயத்தில் மிகவும் சிறந்த சிற்பங்கள் உள்ளனவென்றும், அங்குள்ள ஆதிசைவர்களின் வீட்டில் பழம் சுவடிகள் இருக்கும் என்றும் கேள்வி பட்டு அங்கே போயிருக்கிறார் உவேசா. ஆதிசைவர்களை அணுகினார். அவர்களுடைய […]

           இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.16 வயது சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட […]

ஹிந்துத்துவ நாயகா் , ஹிந்துமுன்னணி நிறுவனத்தலைவர் ஐயா “தாணுலிங்க நாடாா் ” அவா்களின் (பிப்-17) 108 வது பிறந்த தினம். மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் க‌லவரத்தை நிறுத்தும் விதமாக சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்துப் போன தாணுலிங்க நாடார், “நீயும் உனது காவல் துறையும் […]

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் என்று அழைக்கப்படும் திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகான்களுள் முதன்மையான ஒருவராகக் கருதலாம். மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் ராமய்யா பிள்ளை எனும் கருணீகர் மரபிலே வந்த ஒரு தமிழ் புலவர். அவர் திண்ணை பள்ளிக்கூடம் நடத்தி பிழைப்பை நடத்தினார். அவரின் துரதிர்ஷ்டம் அவருக்கு ஐந்து முறை திருமணம் ஆகி ஐந்து மனைவிமார்களும் மனம் முடிந்த சிறு காலத்திலேயே மரணம் அடைந்துவிட்டனர். ஆறாம் […]

கடையெழு வள்ளல்களை அரசர்களாக நாம் படித்துள்ளோம்… ஆனால் கையிலெதும் இல்லாமல்,‌ காண்பவர்களிடமெல்லாம் கையேந்தி, ஒரு வருடம், இரு வருடமல்ல நூற்றியைம்பத்தாறு ஆண்டுகளாக அணையாமல் அடுப்பெரிந்து, மக்களின் வயிறு பசியால் எரியாமல் உணவளித்துக் கொண்டிருக்கும் வள்ளலாரைப் பற்றிக் காண்போமா! வடலூரில் 1867ஆம் ஆண்டு அவர் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் ஒருநாள் கூட விடுபடாத அன்னதானம், அவரது ஆத்மசக்திக்கு சான்றாய் திகழ்கிறது. ஆம்! அதனால் தான் […]

  19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அதோ அறிவும் அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார் என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் […]

  தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மஹான் சுவாமி சகஜானந்தர். 1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே […]