திருமுருக கிருபானந்த வாரியார் – மக்களால் வாரியார் ஸ்வாமிகள் என அன்போடு அழைக்கப்பட்டவர். வாரியார் என்றாலே வயலூரும் வயலூர் என்றாலே வாரியாரும் தான் நினைவுக்கு வருமளவுக்கு வயலூர் முருகன் பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர். நாடெங்கிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி நிதி திரட்டி வயலூர் கோபுரத் திருப்பணியாற்றியவர் வாரியார் ஸ்வாமி . சைவ சித்தாந்தத்தையும் முருகன் பெருமையையும் தெள்ளுத் தமிழில் அள்ளித் தந்தவர் . சரளமான மொழிநடையில் சுவையான கிளைக் […]

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில், 1855 ஏப்ரல் 4ஆம் தேதி, திரு பெருமாள் பிள்ளை மற்றும் திருமதி மாடத்தி அம்மாள் அவர்களுக்கு மகனாய் பிறந்த மனோன்மணியம் பெருமாள் சுந்தரனார் பிள்ளை எழுதியதுதான் தமிழ் தாய் வாழ்த்து. அவர், சைவ சமய ஆன்மீக நூல்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தை நன்று படித்து ஆசாரமாக வளர்ந்தவர். மறைமலை அடிகள் அவர்களுக்கு தமிழ் ஆசிரிஉஅராக இருந்த நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம்தான், இவரும் தமிழைப் படித்தார். 1876ல் […]

செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் -15, 1891 – மே-26, 1934) தமிழகத்தைச் சேர்ந்த மாபரும் விடுதலைப் போராட்ட போராளி. “சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என வீரமுழக்கமிட்ட போராளி. நம் தாய்த் திருநாட்டில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றது மட்டுமின்றி, ஜெர்மனி, வியன்னா, தென்னாப்பிரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டிய […]

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024.   “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]

மாஞ்சோலை படுகொலை: இயற்கை எழில் மிகுந்த திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன்தார், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனின் போர் வெற்றிக்கு உதவினார். இந்த உதவிக்கு நன்கொடையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 74 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை மன்னர் மார்த்தாண்டவர்மன் சிங்கம்பட்டி […]

சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து,  [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]

ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவாவூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிமிழி கிராமத்தில், ஸ்ரீ கே.வெங்கடராம சாஸ்திரி மற்றும் ஸ்ரீமதி சங்கரி ஆகியோருக்கு 30 நவம்பர் 1919 அன்று பிறந்தார். இவர் புகழ்பெற்ற வேத மற்றும் சமஸ்கிருத அறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சகோதரர்களான ஸ்ரீ எஸ் வி பாலகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ எஸ் வி ராதாகிருஷ்ண சாஸ்திரி மற்றும் ஸ்ரீ எஸ் […]

மாவீரன் அழகுமுத்துக்கோன்  கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். […]

தோற்றம் : 26.06.1906 மறைவு : 03.10.1995 இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை)                                              […]

நான் உங்களிடம் முத்தையா பற்றிக் கூற விரும்புகிறேன். இன்றைய காலமும், நேரமும் முத்தையாவுக்கு முக்கியமானவை. ஆனால், முத்தையாவை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஒரு சிறு கதை கூற விரும்புகிறேன். ஒரு சமயம் ராஜு என்ற ஒரு கண்பார்வை இல்லாத சிறுவன் இருந்தான். அவர் பிறந்தபோதே கண்பார்வை இல்லாமல் பிறந்தான். மற்ற கண்பார்வையில்லாதவர்களுடன் அவர் கண்பார்வையில்லாத இல்லத்தில் வாழ்ந்தான். அவர் கற்க இழந்தது மட்டுமே தெரிந்தது, வெளிச்சத்தை அவர் ஒருபோதும் அனுபவிக்கவில்லை. இருபத்தைந்து […]