எம்.எம்.தண்டபாணி தேசிகர் (1908 – 1972) “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் […]

நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சுதந்திர யுத்த வேள்வியில் தங்களை அளித்த நல்லோர்கள் பலர். அவர்களின் ஒருவர் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காந்திய சிந்தனை கொண்டவர். சமயநெறியின் வழிநின்று சமத்துவம் பாடியவர். சமூக சீர்திருத்தத்தினை முன்னெடுத்தவர். தமிழறிஞர், தாய் தமிழை தேசம் முழுவதும் ஒலிக்கச் செய்ய உதவியவர். தமிழ் நதியினை தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்ய விரும்பியவர். பாரதியின் வழி நின்று எளிய நடை, எளிய பதம், புதிய சிந்தனை […]

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு…” இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம். இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக மேற்கோள் […]

  18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்குமாறு செய்த ஒண்டிவீரனின் வீர தீர செயல்களை நாம் அறியும்போது பூரிப்பு ஏற்படுகிறது. ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர், பிறந்த தேதி, ஊர் போன்ற விவரங்களின் ஆவணங்கள் இல்லை. அவர் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். பூலித்தேவரும் ஒண்டிவீரனும் ஒருவரின்றி மற்றவர் இல்லை என வரலாற்று விவரங்களின் மூலம் அறியலாம். ஆக, ஒண்டிவீரனைப் பற்றி அறியவேண்டும் என்றால் பூலித்தேவரின் சரித்திரமும் தெரிந்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. பூலித்தேவரின் முன்னோர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். திசைகாவலுக்காக திருநெல்வேலி வந்தனர். அங்கே, நெற்கட்டும் செவ்வேல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தார்கள். அவர்களின் வாரிசாக பிறந்தவர் பூலித்தேவர். அந்த பகுதியில் இருந்த அருந்ததியர் மக்களின் நிலங்களை இருளப்பிள்ளை என்பவர் தன் பலத்தை பயன்படுத்தி பிடுங்கிக்கொண்டார். அருந்ததிய மக்கள் பூலித்தேவரிடம் தங்களுக்கு உதவுமாறு முறையிடு செய்தார்கள். அவர்களின் நிலங்களை இருளப்பிள்ளையிடமிருந்து மீட்டுத் தந்தார் பூலித்தேவர். அதற்குப்பிறகு அருந்ததியினர் பூலித்தேவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு மீட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்களில் ஒன்று ஒண்டிவீரனின் தாத்தாவின் நிலம். எட்டு பிள்ளைகள் பெற்ற அவரின் மூத்த மகனின் மகன்தான் ஒண்டிவீரன். பாளையக்காரன் பூலித்தேவரின் வலிமையே அவருடைய படை தான். அவரது படை வீரர்கள் தங்களது பாளையத்துக்காகவும் பூலித்தேவருக்காகவும் […]

The title  ‘Theeran’ denotes the ‘Daring’ character. Freedom fighter and an Artist Mayanndi Servai was fearless and giving tough time to then British Administration during the year 1940. Mayandi Servai wanted to do something big and unforgettable damage to the British raj. He does not want to lose his life, […]

1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாலங்குளம் சீமையின் அரசர்கள் பல தலைமுறைகளாக ‘அழகுமுத்து’ என்ற குடும்பப் பெயர் கொண்திருந்தனர். அழகு முத்துவின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாளும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று […]