ஆர்.எஸ்.எஸ்: “நம்மாட்சி நல்லாட்சியே” அண்மையில் மகாராணா பிரதாப் ஜெயந்தி திருவிழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபளே, மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, அசாமின் மாபெரும் அஹோம் வம்ச தளபதி லாசித் பர்புகன், மகாராஜா சுஹேல் சிங், மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் போன்ற பாரத பேரரசர்கள் பாரதப் பண்பாட்டின் நெறி நின்று நல்லாட்சி செய்தார்கள் என்பதையும் அவர்களுடைய வீர பராக்கிரமங்களை நினைவு கூர்கையில் தவறாமல் நாம் பதிவு […]

ராணா பிரதாப் பிறந்த நாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர் தத்தாரேய ஹொஸபளே ” ராணா பிரதாப் செய்த வீர தீர சாகசங்களை நாமறிவோம். ஆனால் அவர் 12 ஆண்டுகள் யுத்தத்தில் செலவிட்ட பிறகு பதினோரு ஆண்டுகள் நல்லாட்சி நடத்திக் காட்டியுள்ளார் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்குக் காரணம்  நமது பாடப் புத்தகங்கள்  எழுதுகிறவர்கள்  அதை பதிவு செய்ய தவறிவிட்டதுதான். அந்தக் குறையை நீக்க வேண்டும்” […]

“மால்வா இராஜ்ஜியத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இந்த மாதரசி  தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு குடிமகனையும் ஆதரித்து உற்சாகப் படுத்தியதால்,  அவரவர் தத்தம் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். வணிகர்கள் மிகச்சிறந்த ஆடைகளைத் தயாரித்தனர், வர்த்தகம் செழித்தது, விவசாயிகள் நிம்மதியாக செழிப்பாக  இருந்தனர்,  குற்றங்கள் குறைந்தன. ஏழைகள், வீடற்றவர்கள், அனாதைகள், பில் எனும் மலை வாழ் மக்கள் என்று அனைவரும் பாதுகாக்கப் பட்டனர். அவர் காலத்திற்குப் பின் வந்த […]

துருவன்- பிரகலாதன் போன்ற சிறுவர்களின் பக்தி, ஆழ்ந்த ஆர்வம், அர்ஜுன- திரௌபதியைப் போல சரண் புகுதல், விதுர-விபீஷணன் போல் நீதி நெறியில் உறுதியாய் நிற்றல், ருக்மணி-மீராவைப் போல திடமான விஸ்வாசம், கோசலை- யசோதையைப் போன்ற மாதுர்யம், வ்யாஸ- வால்மீகியைப் போல தான் பெற்ற பேற்றை – மெய்யுணர்வுவை பிறர் உய்ய காவியமாக்கியது என்று பற் பல பக்தர்கள் ஒரு வடிவம் பெற்று வந்தார் போல் வாழ்ந்து காட்டியவர் தான் இக் […]

சிவபெருமான் ஆணையை ஏற்று அகத்திய முனிவர் தென் பாரதத்திற்கு வந்தார் என்று புராணம் சொல்கிறது. அதே சிவபெருமான் கருணையினால் தெற்கே கேரளாவில் பிறந்து, அகண்ட பாரதத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு மகாநதியைப் போல பெருகி அனைவருக்கும் சனாதன தர்மத்தின் மேன்மைகளைக் கொண்டு சென்ற ஞான கங்கை தான் ஆதி சங்கரர். தோற்றமும் வாழ்வும் சங்கரன் இன்றைய கேரளாவின் பூரணா நதிக் கரையில் காலடியில் வைகாசி சுக்ல பட்ச (வளர் பிறை) […]