Hindu Munnani: Resolutions passed at District Executive Meeting

18
VSK TN
    
 
     
இந்து முன்னணி 5 மாவட்டச் செயற்குழுக்கூட்டத் தீர்மானங்கள்
 

இந்து முன்னணியின் ஐந்து மாவட்டங்களின் செயற்குழுக்கூட்டம், 10-4-2014
அன்று சென்னை சிந்தாதறிப்பேட்டை மாநில அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் செயற்குழுக்கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் சி.பரமேஸ்வன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் அட்வகேட் ஜி. கார்த்திகேயன் முன்னிலையில், நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் வழிநடத்தினார்கள். இதில் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சி கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயற்குழுவின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு இந்துக்களாகிய தமிழர்களின் தனிபெரும் விழாவாகும். ஜய வருடம் நாட்டிலும், இந்து சமுதாயத்திற்கும் நல்லதொரு ஏற்றத்தைத் தருகின்ற ஆண்டாக மலர இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்குச் சென்று பிராத்திப்போம். தமிழ்ப் புத்தாண்டு என்பது நமது முன்னோர்களின் வானியல் அறிவியலின் முன்னோடி என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று ஏகடியம் பேசிய சதிக்கூட்டம், தமிழ் இந்துவின் அறிவியல் அறிவை இருட்டடிப்பு செய்ய நடந்த தகிடுதத்தங்கள் தகர்த்தெறியப்பட்டன. வருகின்ற  தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்துக்கள் கோயில்கள் தோறும் சென்று நாடு நலம் பெற, நல்லதொரு வருங்காலம் உருவாக மனமுருகி பிரார்த்தனை செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

பாராளுமன்றத் தேர்தலில் நமது பணி..

வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்து முன்னணி இந்துக்களின் உணர்வுகளுக்கும், தேச நலனுக்கு மதிப்பளிக்கும் பாஜகவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிக்க, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற ஆதரவளிக்க மனப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.

இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தலில் நிற்கமாட்டார்கள். நமது நோக்கம் இந்து சமுதாயத்தின் நன்மையே. இந்துக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியையும் அதன் தலைமையிலான தோழமை கட்சியினரையும் வெற்றி பெற வைக்க இந்து முன்னணி ஆதரவு தெரிவிப்பதுடன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அயராது பாடுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றிபெற வைக்க பாடுபட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காங்கிரஸின் மதச்சார்பின்மை.. இந்துக்களே உஷார்

காங்கிரஸ் தலைவி சோனியா அவர்களை டெல்லி இமாம் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து டெல்லி இமாம், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் கட்சியை முஸ்லீம்கள் ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் நிதி அமைச்சர் . சிதம்பரம், தனது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு மதுரை பிஷப்பை அணுகியுள்ளார். இதன்மூலம் கிறிஸ்தவர்களின் ஓட்டையும் கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டின் பாதுகாப்பை, பொருளாதாரத்தை சீரழித்த காங்கிரஸ் கட்சி, எப்படியும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எந்தநிலைக்கும் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இவர்கள் மதச்சார்பின்மைப் பற்றி பசப்புகிறார்கள். இதனை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்துக்களின் உரிமைகளை, சலுகைகளை நசுக்கி அழிக்கத்துடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும். அதற்கு ஒவ்வொரு இந்துவும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். மற்றவர்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. இந்தத் தேர்தலில் தமிழகம் புதிய திருப்பம் ஏற்பட வேண்டும். திமுக, அதிமுகவை தோற்கடித்து வரலாறு படைக்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறிவைத்து நடத்தும் போலி மதச்சார்பின்மைவாதிகளைத் தண்டிக்க இதுவே தகுந்த தருணம். தேச நலன் கருதி நமது கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும்..

இராமநாதபுரம், வேலூர் தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. சென்றமுறை வெற்றிபெற்றதை அடுத்து அந்தத்தொகுதிகளில் முஸ்லீம்களை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும் என அந்தக் கட்சித் தலைமை நினைக்கின்றனவோ என அஞ்சுகிறோம். இந்நிலைத் தொடர்ந்தால் அந்தக் கட்சியின் சேர்ந்த பிரமுகர்கள் பிற்காலத்தில் அந்தத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் சமுதாய வேட்பாளர்க்கு ஓட்டளிப்பதை தார்மீக கடமையா நினைக்கிறார்கள். இந்து முன்னணி தேச நலன் கருதியும், சமுதாயத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட மக்களை வேண்டுகிறது. எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டும், ஜாதிய பிரிவனைக்குத் துணைபோகாமலும் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக 
ஓட்டளிக்க வேண்டும். நாளைய நன்மையைக் கருதி செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Informer-Cop Nexus Behind TN Islamic Fundamentalism

Sat Apr 12 , 2014
VSK TN      Tweet     By A M Vinodh – MADURAI In a startling revelation it has come to light that a senior police officer in Tamil Nadu had last year written to the Director General of Police blaming an alleged nexus between Muslim police informers and intelligence sleuths as the reason for thriving […]