பஞ்சாமிர்தம்

VSK TN
    
 
     

பஞ்சாமிர்தம்

(சமஸ்கிருதத்தில் பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் நல்லது)

மாதம் இருமுறை – அமாவாசை தோறும் பௌர்ணமி தோறும் – ஐந்து
நல்ல செய்திகளை ஆதாரத்துடன் தமிழில் பகிர்கிறேன்.
இன்று (மார்ச் 24) பௌர்ணமி; இதோ உங்கள் பஞ்சாமிர்தம்!
சனாதனம், சமூகநீதி, சங்கம்
1 “கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் 1953ல் சுவாமி சின்மயானந்தா பகவத் கீதை வகுப்பு (கீதா ஞான யக்ஞம்) தொடங்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வல்கரிடம் உதவி கேட்டார். சங்க பிரச்சாரகர்கள் பி. பரமேஸ்வரன், ரங்க ஹரி ஆகியோருக்கு ஸ்ரீ குருஜி தகவல் தெரிவித்தார். அவர்கள் இருவரும் கோழிக்கோட்டின் பெரியோர்களை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தி, வகுப்பு
மிக சிறப்பாக நடப்பதற்கு உதவினார்கள். அந்த வகுப்புகளுக்கு ஏராளமான மக்கள் பகவத் கீதை புத்தகத்துடன் வந்து கலந்துகொண்டார்கள். சங்க பிரச்சாரகர்கள் சுவமிஜியின் ஆங்கில சொற்பொழிவை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்கள். சங்க ஸ்வயம்சேவகர்கள், அரங்கத்திற்கு வெளியே காலணிகளை பார்த்துக்கொள்வது முதல் அனைத்து விதத்திலும் உதவினார்கள். அந்த சமயத்தில் சில பிராமண குழுக்கள் ஸ்ரீ குருஜியை சந்தித்து, “எப்படி நீங்கள்
பட்டியல் சமூக மக்களை இந்த வகுப்பில் சேர்க்கலாம்?” என்று கேட்டார்கள். “பகவத் கீதையை யாதவரான கிருஷ்ணன், சத்ரியரான அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மீனவ சமுதாயத்தில் பிறந்த வேதவியாச மகரிஷி அதை எழுதியிருக்கிறார். சனாதன ஹிந்து தர்மம் அதைப் போற்றி
பின்பற்றவில்லையா?” என்று ஸ்ரீ குருஜி பதில் கூற, அந்த குழுவினர் தெளிவு பெற்று திரும்பிச் சென்றார்கள்.”
(தென் பாரத சமூக நீதி வரலாற்றில் இடம் பெறத் தக்க இந்த சம்பவத்தை 2023 அக்டோபர் 3 அன்று சென்னையில் ஸ்வாமி சின்மயானந்தரின் 108 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவாஹ் (பொதுச் செயலர்) தத்தாத்ரேய ஹொசபலே விவரித்த போது அரங்கம் அதிரும் வண்ணம் கைதட்டல் எழுப்பி சென்னைவாசிகள் வரவேற்றார்கள்).
ஆதாரம்: Mahadevan Sankaranarayanan முகநூல் பதிவு

ஏழ்மை இவரது ஏற்றத்தை தடுக்க முடியவில்லை!
2 பாரதி பயிலகம் என்பது சென்னையில் சேவா பாரதியின் பாரத் சேவா சங்கம் நடத்தும் சேவை மையம். அங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உண்டுறைவிடம் இலவசம். அந்த பாரதி பயிலகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் மு. ராமநாதன். இவர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய ஆட்சிப் பணிக்கு நிகரான, தொழிலாளர் நலத்துறையின் உதவி தொழிலாளர் ஆணையருக்கான 29 பணியிடங்களை கொண்ட தேர்வில் தேச அளவில் 18வது தரவரிசையில் தேர்ச்சி பெற்று, பயிலகம் நடத்தும் தொண்டுள்ளம் கொண்ட குழுவினருக்கும் தன் பெற்றோருக்கும் மன நிறைவு அளித்துள்ளார். இப்பணிக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள ஒரே மாணவர் இவர். தமிழ் வழியில் பள்ளிக் கல்வி பயின்ற இவர் உணவத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தார். தற்போது பாரத ரயில்வேயின் உற்பத்தி கேந்திரமான சென்னை ICF-
ல் பணியாற்றும் ராமநாதன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். பெற்றோர் முருகையா-லெட்சுமி இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
(ஆதாரம்: விஜயபாரதம் வார இதழ், 2024 ஏப்ரல் 5).

3 பாரத மண்ணில் இப்படியும் நடக்கலாம் அரசியல்
ராஜஸ்தானை சேர்ந்த பாரத ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போது என். டி. ஏவில் அங்கம் வகிக்காத மாநிலத்தின் ஆளும் பி.ஜே.டி ஆதரவு அளித்தது. இதுவே சுமுக அரசியல் என்ற வகையில் நல்ல
செய்தி. இது மட்டுமல்ல. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரை மிகவும் மதிக்கிறார். அஸ்வினி வைஷ்ணவ் 1994 ல் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார். 1999 ல் ஒடிசாவில் கொடூர சூறாவளி! கட்டக், பாலசோர் ஆட்சியர் அஸ்வினி. சூப்பர் சூறாவளியின் பாதையை கண்காணிக்க அவர் அக்கறை எடுத்து தனிப்பட்ட முறையில் அமெரிக்க கப்பற்படை இணைய தளத்தை அணுகினார். அஸ்வினி வைஷ்ணவினால்தான் ஒடிசாவின் அனைத்து கடலோர மாவட்டங்களும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிந்தது. குறைந்தது 10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பாலாசோரின் கடலோரப் பகுதிகளில் இருந்து 10,000 க்கும் அதிகமான மக்களை விரைவாக வெளியேறச் செய்து நிவாரண நடவடிக்கைகளை அவர் எளிதாக்கினார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதும் சுலபமானது. அப்போது
அஸ்வினிக்கு வயது 29 தான்.
ஆதாரம்: விக்கிபீடியா (https://en.wikipedia.org/wiki/Ashwini_Vaishnaw)
4 ஊரின் தாகம் தீர்த்த ஒரு அனாதைப் பெண்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவின் வறண்ட கிராமத்தில், லக்ஷ்மி பூஜார்த்தி நான்கு பெண்களுடன் சேர்ந்து, சமீபத்தில் 52 அடி ஆழமான கிணறு தோண்டினார். அம்பாறு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவேக்நகர் காலனியில் இந்த முயற்சியை மேற்கொண்டார். இந்த கிணற்றை நம்பி தற்போது 10 குடும்பங்கள் வசிக்கின்றன. சுற்றுவட்டாரத்தில் குடிநீர் கொண்டுவர குறைந்தது இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் நடக்க
வேண்டும்.. ஆறடி அகலம் கொண்ட கிணற்றை அந்தப் பெண்கள் தோண்ட கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் ஆனது. கிராம பஞ்சாயத்தில் NREGA சட்டத்தின் கீழ் கிணறு தோண்ட ஒதுக்கீடு உள்ளது. கிணற்றின் உள்ளே வளையங்கள் பொருத்தரூ.1.18 லட்சம். பஞ்சாயத்து அளித்துத 82,000 ரூபாய். லட்சுமி தனது சேமிப்பான ரூ.40,000 ரூபாயையும் NREGA ஊதியத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து செலவை சமாளித்தார். இந்த 60 வயது மூதாட்டியின் உறுதி ஒரு முழு கிராமத்தின் தாகத்தைத் தணிக்க உதவியது. “எனக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, இந்த சிறிய முயற்சி மற்றவர்களுக்கு உதவினால், அதுவே போதும்”என்று பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு உறவினர்களால் கைவிடப்பட்ட லக்ஷ்மி கூறினார்.
(ஆதாரம்: www.indiatimes.com 2016 ஜூலை 4)
5

கர்நாடகா சிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகா வாளூர் குக்கிராமத்தில் 16 ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் சந்தோஷ் கஞ்ச்சன். கடந்த வாரம் குந்தாபுராவில் உள்ள வாராஹி அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அப்போது, வாளூர் கிராம மக்கள் அவருக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கினர். இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது: முன்பு குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது மருத்துவரிடம் அழைத்துச் செல்ல ஒரு பைக்கை வாங்கினார் சந்தோஷ், மருத்துவர் அதற்கு ‘வாளூர் ஆம்புலன்ஸ்’ என்று பெயரிட்டு அழைப்பார்! நெருக்கடியான காலங்களில் கிராம மக்களுக்கும் தனது பைக் சேவையை நீட்டித்தார் சந்தோஷ். வாளூர் பிரதான சாலையில் இருந்து 6 கிமீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. 2007-ம் ஆண்டு அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த சந்தோஷ் கடவுளாக வந்தவர். மாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவ்வூர் ‘குனாபி’ வனவாசி (பழங்குடி)கள் நல்ல நிலையில் இல்லை.
கிராமத்தில் யாரும் பைக் வாங்க முடியாத நிலையிலும் மாஸ்டருக்கு பைக் பரிசளித்து தங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.
(ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், பெங்களூரு, ஜனவரி 12, 2024).

—————————————————-

Next Post

पंचाम्रित

Sat Mar 30 , 2024
VSK TN      Tweet    ।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) महीने में दो बार पांच अच्छे संदेश साझा करता हूं – हर अमावस्या, हर पूर्णिमा – प्रमाण के साथ, हिंदी में। आज (2024 मार्च 24) पूर्णिमा है,  और आपके समक्ष ‘पंचाम्रित’! सनातन धर्म, सामाजिक न्याय, […]