ப ஞ் சா மி ர் த ம்
இன்று (2024 ஜூலை 5) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்
1 பண்பு நிறை வாழ்வு வாழ்கிறார்
வயது அதிகமில்லை, 102 தான்! சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வசிக்கிறார். தானே சமைத்து சாப்பிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ரயில் மூலம் அயோத்தி செல்கிறார். அயோத்தியில் தன் குடும்பக் கோவிலான அம்மாஜி மந்திருக்குச் செல்கிறார். எல்லா இடங்களிலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார். லிப்ட் தர யாராவது முன்வந்தாலும் மறுத்து விடுகிறார். திருவல்லிக்கேணியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர் காய்கறி வாங்குவதைக் காணலாம். கூர்மையான அறிவு, அபார நினைவாற்றல். எம்.ஓ.பி வைஷ்ணவ் பள்ளி, கல்லூரியில் பல்வேறு குழுக்களில் உறுப்பினர். தனியாகப் பயணம் செய்வது குறித்து வினவியபோது, தன்னுடன் ரயிலில் ஏராளமான பொதுமக்கள் இருக்கிறார்களே என்று கூறி விடுகிறார். அவரது டயரி நிறைய நிகழ்ச்சிகள். அவரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் தேவை. அவர்தான் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி நிலத்துக்குச் சொந்தக்காரான எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார்.
ஆதாரம்: முகநூலில் ராகவன் சுப்பிரமணியனின் 2024 ஜூன் 22 பதிவு;
தகவல்: எஸ், வெங்கடராமன்
2 வாழ்விலும் சாவிலும் தேசமே முதல்
சுபேதார் அர்ஜுன் சிங் சங்கோத்ரா (70 வயது) ராணுவத்தில் 30 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்து, தற்போது மரணத்துக்கு பின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்து மேலும் மூன்று ராணுவ வீரர்களுக்கு புது வாழ்வு அளித்தார். 2024 மே 14 அன்று அர்ஜுன் சிங் பக்கவாதத்தால் கோமா நிலைக்கு சென்றார். டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து, இறுதியில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, அவரது கல்லீரல், சிறுநீரகம், கார்னியா ஆகியவற்றை தானம் செய்ய அவரது குடும்பத்தினர், விருப்பம் தெரிவித்தனர். ஹரியானாவின் சண்டி மந்திர் பகுதியில் உள்ள பாரத ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் மருத்துவமனையில் உறுப்பு தானம் நடந்தது.
ஆதாரம்: விஸ்வ சம்வாத் கேந்திரம், பாரத் — VSK Bharat
3 துயரத்தை தொண்டாக மாற்றிய அற்புதம்
பெங்களூரு தலைமைக் காவலர் லோகேஷப்பாவின் மூன்று வயது மகள் ஹர்ஷாலி 2019 ல் தீ விபத்தில் உயிரிழந்தாள். புத்தகத்தில் வண்ணம் தீட்டுவதில் அந்தக் குழந்தைக்கு மிகவும் ஆர்வம் உண்டு. தாங்க முடியாத சோகத்திலும் (தற்போது துணை ஆய்வாளராக உள்ள) லோகேஷப்பா, கிராமங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போகணும் என்ற ஆசையைத் தூண்ட மாதந்தோறும் தனது சம்பளத்தில் இருந்து, நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கிறார். ஹர்ஷாலிக்கு எவ்வளவு படிப்புச் செலவு ஆனதோ அந்தத் தொகை அளவுக்கு இந்த நற்பணி நடக்கிறது. இதற்காக பிள்ளைகள் இடைநிற்றல் அதிகமாக உள்ள ஆறு ஊரகப் பள்ளிக்கூடங்களை தத்தெடுத்து மொத்தம் 600 குழந்தைகளுக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்து வருகிறார். மதிய உணவு கிடைக்கும் என்பதால் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு எழுதுபொருள்கள் கிடைக்காததால் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுகிறார்கள் என்பது லோகேஷப்பாவுக்குத் தெரியவந்ததால் இந்த சேவை. ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அவர் மனைவி சுதாமணி வேலையை ராஜினாமா செய்துவிட்டு எளிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவ மகள் நினைவாக ஹர்ஷாலி ஃபவுண்டேஷன் நிறுவியுள்ளார்.
ஆதாரம்: த நியூ சண்டே எக்ஸ்பிரஸ் / பெங்களூரு / ஜூன் 30, 2024
4 எளிமை ஆனால் ஏற்றம்
கிரிக்கெட்டில் டி 20 கோப்பை வென்று பாரதம் கொண்டாடுகிற நேரத்தில் கிரிக்கெட் கில்லாடியான இந்த இளைஞர் தேசத்தையும் சனாதன தர்மத்தையும் உயர்த்தி பிடித்து கவனம் கவர்கிறார்:
நெற்றியில் குங்குமப் பொட்டுடன் சாதாரண மனிதனைப் போல் காட்சியளிக்கிறார். அவர் ராகவேந்திர த்விவேதி அல்லது ரகு. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கும்டாவைச் சேர்ந்த ராகவேந்திரா, 2011 இல் த்ரோடவுன் நிபுணராக பாரத கிரிக்கெட் அணியில் சேர்ந்தார்; பயிற்சியின் போது அவர் குறைந்தது 10 லட்சம் பந்துகளை வீசியிருப்பார். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வரும் அவரது வீச்சுகளை எதிர்கொள்வதற்கு அசாதாரண தைரியம் தேவை. ரகு ஒரு சைடு ஆர்ம் கருவியை எடுத்துவிட்டாரானால் உலகில் வேறு எந்த த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்டாலும் அவரது வேகத்தை ஈடுசெய்ய முடியாது. சிறுவனாக ஹூப்ளி பேருந்து நிலையத்தில் தூங்கினார். போலீசார் அவரை விரட்டியபோது, பத்து நாட்கள் அருகில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைந்தார். இறுதியில், அவர் அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாயிற்று, அருகிலுள்ள சுடுகாட்டில் குடியேறினார். நான்கரை வருடங்கள் ராகவேந்திரர் சுடுகாட்டில் தங்கினார். பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றினார். 3-4 வருடங்கள் ராகவேந்திரா ஒரு பைசா சம்பாதிக்காமல் உழைத்தார். பணமில்லாமல் போகவே அடிக்கடி பட்டினி. NCA இல் இருந்தபோது, BCCI லெவல்-1 கோச்சிங் படிப்பை முடித்தார். சச்சின் டெண்டுல்கர் ராகவேந்திராவின் திறமையை அங்கீகரித்தார், 2011 ல் பாரத அணியில் பயிற்சி உதவியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக, ராகவேந்திரா அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளார். அவரது இடைவிடாத கடின உழைப்புக்கு டி20 உலகக் கோப்பை பரிசாக கிடைத்தது.. இரண்டு முறை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியில் சேருமாறு அழைத்தது. ஏற்க மறுத்துவிட்டார் ரகு..
ஆதாரம்: ஆர்/இந்தியா கிரிக்கெட், ஜூலை 2, 2024
Here's an inspirational story on Raghavendra Dwivedi aka Raghu – Team India's Throwdown Specialist!!
byu/Aditya_K168 inIndiaCricket
endra/?onetap_auto=true&one_tap=true
5 சற்றே சம்ஸ்கிருதம்
ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கை பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையிலும் சம்ஸ்கிருதத்தை இணைத்துக் கொள்ள வேண்டும். இது இன்றைய காலத்தின் தேவை. பெங்களூரூவில் இப்படிப்பட்ட ஒரு முயற்சி: பெங்களூரூவின் கப்பன் பூங்காவில், ஞாயிறு தோறும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் சந்தித்து பரஸ்பரம் சம்ஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கே வாத விவாதங்களின் பல அமர்வுகளும் சம்ஸ்கிருதத்திலேயே! ‘சம்ஸ்கிருத வீக்கெண்ட்’. எனும் இந்த முயற்சியை திருமதி சமஷ்டி குப்பி இணைய தள வாயிலாக, தொடங்கினார்.
ஆதாரம்: பிரதமரின் ‘மனதின் குரல்’, 2024 ஜூன் 30