வி. பி. சிங் ( விஸ்வநாத் பிரதாப் சிங் )

VSK TN
    
 
     

வி.பி சிங் என்னும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931இல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்தார். “தையா ” சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்து என்னவோ உத்திர பிரதேசத்தில் ஆனால் மற்றொரு பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் நான் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர் விபி சிங்.

தனது ஐந்து வயதில் மாண்டாவின் ராஜ பகதூர் ராம் கோபால் சிங் என்பவரால் தத்தெடுக்கப்பட்டார். செல்வ செழிப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் மக்களின் போராட்டங்கள் பற்றி துளியும் அறியாமல் இருந்தால் வி பி சிங்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது வழக்கறிஞர் படிப்பை பயின்றார் அப்பொழுது கல்லூரியில் நடந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

பூமி தான் இயக்கத்தில் ஆர்வம் காட்டிய வி பி சிங். தனது 26 வது வயதில் தனது பண்ணை வீட்டையும் அதனை சுற்றி இருந்த பெரும் நிலங்களையும் ஏழை மக்களுக்கு தானமாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது கிராமத்தில் இருக்கும் ஏழைகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைத்தார் வி. பி. சிங். இந்த செயல்பாடுகள் என எளிய மக்களிடம் அவரின் செல்வாக்கை உயர்த்தியது.

தன்னை அரசியலில் ஈடுபடுத்த விரும்பிய வி. பி. சிங் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

1961-இல் உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் வி. பி. சிங். பின் 1971 இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக 1974 இல் பொறுப்பேற்றுக் கொன்றார். நெருக்கடி காலகட்டத்தில் பதுக்கப்பட்ட உணவுப் பொருட்களை வெளிக்கொண்டு வந்து இந்திய மக்களிடம் நற்பெயர் பெற்றார்.

1980 இல் உத்திர பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கித் தவித்த தனது மாநிலத்தை மீட்டு எடுக்க முடியாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை துறந்தார்.

1984 இல் ராஜீவ் காந்தியால் நிதி அமைச்சர் ஆக்கப்பட்டார் வி பி சிங். அப்பொழுது வரியைப்பு செய்த பெரிய நிறுவனங்களில் பெயர்களை வெளியிட்டார். பின் அண்ட் நிறுவனங்கள் மீது அமலாக்க துறையில் நடவடிக்கைகளை எடுக்கச் செய்தார்.

அம்பானி மற்றும் அமிதாப்பச்சன் இதில் விதிவிலக்கல்ல அவர்களின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இத்தகைய நடவடிக்கையால் ராஜீவ் காந்தி அவரிடமிருந்த நிதி துறையை பறித்தார். 1987இல் வி பி சிங் பாதுகாப்பு துறையில் அமைச்சராக பதவி ஏற்றார்.

அங்கேயும் தனது நேர்மையை கைவிடாமல் நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் போபஸ் பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தார். இதனால் தனது நாட்டு மக்களிடையே வி பி சிங்குக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

ஆனால் மக்களிடையே காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தி நிலவியது. இதனால் கோபம் கொண்ட ராஜீவ் காந்தி 1987 ஏப்ரல் நாலாம் தேதி அவரது அமைச்சர் பதிவை பிடுங்கினார்.

அதன் பிறகு ஜனமோர்ச்சா என்னும் புதிய கட்சியை தொடங்கினார். பிபிசிங் அந்த காலகட்டத்தில் அலகாபாத் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1988 இல் ஜனதா கட்சி லோக் தளம் காங்கிரஸ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனதா தளம் என்னும் புதிய கட்சியை நிறுவினார் வி பி சிங்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி எனும் புதிய கூட்டினியை உருவாக்கினார். 1989 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் காங்கிரஸ் என்னும் பிரச்சாரத்தை கையில் எடுத்து அதனை வென்றும் காட்டினார்.

இதன் விளைவாக 1989இல் நாட்டில் ஏழாவது பிரதமர் மந்திரியாளர் வி பி சிங்.

இவரது ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் மகத்தான திட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன. தமிழ்நாட்டிற்கு இன்று வரை காவிரி நீர் கிடைக்க உத்தரவு விட்டவர் வி பி சிங்.

1990 ஆம் ஆண்டு மண்டல் கமிஷனை தூசி தட்டி எடுத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 27 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தினார்.

வி.பி.சிங் ஆட்சியை சமூக நீதி ஆட்சியாகவும் வி. பி. சிங்கை சமூக நீதி நாயகனாகவும் இந்தியா மக்கள் கொண்டாடினர்.

அக்டோபர் 10 1990 ஆம் ஆண்டின் இவரது அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இன்று என் கால்கள் உடைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை என்றும் அடைந்து விட்டேன் அரசியலில் இறுதியானது கடைசியானது என்று எதுவும் இல்லை இவ்வாறு நாடாளுமன்றத்தில் கடைசியாக கர்சித்தார் விபி சிங்.

சிறிது காலம் கழித்து சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டார் மற்றும் ரத்த புற்றுநோயும் அவரை தாக்கியது இதனால் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி மரணத்தை தழுவினார் வி. பி. சிங்.

பிறப்பார் செல்வந்தர் காங்கிரஸ் கட்சியின் ஊழலை மக்களிடையே திரையிட்டு காட்டியவர் சமூகநீதி காவலர் தமிழர்கள் மீது தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற அன்பு கொண்ட விபி சிங் தனது 77 ஆம் வயதில் மரணத்தை தழுவினார்.

  • திரு.ஓம் பிரகாஷ்

Next Post

“TATA” - A Beautiful “Nationalist” Tree

Wed Nov 30 , 2022
VSK TN      Tweet    JRD – Jehangir Ratanji Dadabhoy Tata, 118th Anniversary  (29 July 1904 – 29 November 1993)   26th July 1938, a historic day for Tata Group to make a very important decision to select future leadership at a time when India was fighting for Independence and Indian Business community waiting […]